வெளிநாட்டிற்கு பாடசாலைக்கோ அல்லது வேலைக்காகவோ செல்வது ,ஒரு பிரிவிலிருந்து மீட்டெழுதல், குடும்பத்தில் தீராத மன வேறுபாடுகள் அல்லது காரணம் இல்லாமலே- நாம் அனைவரும் தனிமையின் பிடியை உணர்ந்திருக்கிறோம்.

அது பல நாட்கள், வாரங்கள் இழுத்து, நம்மை ஊக்கமின்மை மற்றும் மனச் சோர்வு அடையச் செய்கிறது. இந்த காலத்தில், நம் தனிமையை பற்றி நாம் நம்பும் பொய்கள் நம்மை முடக்கி நாம் விரும்பும் இணைப்புகள் உருவாவதை தடுத்து மற்றவரை நாடுவதை தடுக்கின்றன.

நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது கவனிக்க வேண்டிய பொய்கள் சில:

banner image

நம்முடைய குறுஞ்செய்திக்கோ அல்லது தொலைபேசி அழைப்பிற்கோ எப்போதும் பதிலளிக்காத நண்பர். காபி சந்திப்பு மீண்டும் மீண்டும் திட்டமிடப்பட்டது. அவர்கள் வருந்துமாறு நாம் ஏதாவது செய்தோமா? முற்றிலும் அவர்களை நாடுவதை நிறுத்த வேண்டுமா? பெரும்பாலும், நம் நண்பர்களின் கவனக் குறைவுக்கு நாம் காரணம் இல்லை.

நாம் நேரிடையாக முயற்சிக்கலாம் மற்றும் நாம் அவர்களுடன் இணைய ஏன் விரும்புகிறோம் என நேர்மையாக பகிரலாம். நமக்கு நன்கு தெரியாதவராக இருப்பினும், புதிய மனிதரை சென்றடைய நாம் தேவனிடம் ஜெபிக்கலாம்.

சில நேரங்களில் நம் பாரத்தை சுமக்க, மற்றவர்களின் உதவி நமக்கு தேவைப்படும் என தேவன் அறிவார் (கலாத்தியர் 6:2). மற்றவர்களை நாட நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அப்படி செய்வதன் மூலம் நாம் தேவனின் சமூக வடிவமைப்பின் படி வாழ்கிறோம்.

banner image

சபையிலுள்ள அனைவரும் வெவ்வேறு இடத்தில் இருந்து வந்தால் நமக்கு தனிமைப்படுத்த ப்பட்டதாக தோன்றும். நாம் கல்லூரி குழுவிற்கும் திருமணம் ஆனவர்களின் குழுவிற்கும் இடையில் சிக்கி இருந்தால் நம் அக்கறையையும் ஆர்வத்தையும் யாருடனும் பகிர முடியாது.

இதை ஊக்கமின்மையாக உணர்ந்தாலும் பவுல் நினைவுபடுத்துவது போல, கிறிஸ்துவின் சரீரத்துக்கு பன்முகத்தன்மை தேவைப்படுகிறது (1 கொரிந்தியர் 12:17) மற்றும் பல்வேறு வாழ்க்கை பருவங்கள் அதற்குள் ஒன்று. சபையிலுள்ள வயதான விதவையை பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் நேரம் இருக்கிறதா? அல்லது விஞ்ஞானி மாணவருடன் மதிய உணவு சாப்பிட தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரம் இருக்கிறதா?

சபை மக்களோடு முதலீடு செய்தாலும் நாம் புது நண்பர்களையும் தேடலாம் மற்றும் ஒத்த வாழ்க்கை பருவம் உள்ள மக்களின் இணைப்புக்கு ஆதரவு தரலாம் அல்லது நமக்கு ஆர்வம் உள்ள பணியை செய்யும் லாப நோக்கமற்ற அமைப்பின் தன்னார்வத் தொண்டராக இருக்கலாம்.

banner image

மற்ற நேரங்களில் நாம் அனுபவிக்கும் சவால்கள் நம்மை தனிமையாக உணர வைக்கிறது. மற்ற கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நாம் தூண்டுதல் களோடு போராடிக் கொண்டிருக்கலாம், மகிழ்ச்சியான தம்பதிகளின் உலகிலே நாம் மட்டும் பிரிவினால் தள்ளாடலாம் அல்லது நாம் வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் போது ,நம்முடன் வேலை செய்பவர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

நாம் சந்திக்கும் அதே பிரச்சினைகளை மற்றவர்கள் சந்திக்காமல் இருந்தாலும் ,அவர்களால் நம்மிடம் பரிவு காட்ட முடியும். நம்முடைய தனிப்பட்ட சவால்களில் போராடும்போது, தேவன் அவர்கள் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார்.

“எந்த உபத்திரவத்தில் ஆகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணி உள்ளவர்கள் ஆகும்படி” (2 கொரிந்தியர் 1:4) என்று தேவன் நமக்கு கஷ்டங்களில் ஆறுதல் தருகிறார் என நினைவுபடுத்துகிறார்.நம் இப்போதைய கஷ்டங்கள் நமக்கு வேண்டிய ஆறுதலை நமக்கு ஒரு நாள் கொடுக்கும் .நம்மால் அந்த ஆறுதலை நம்மைப்போல துன்பப்படுபவர்களுக்கு அளிக்கமுடியும்.

banner image

தனிமையின் மிகக் கடினமான கணங்களில் தேவன் நம் கதறலை கேட்கவில்லை என உணர்வோம் அல்லது கேட்டாலும் பதில் அளிக்கவில்லை.

சத்தியமானது, கிறிஸ்து நம் இரட்சகர் “துக்கம் நிறைந்த வரும் பாடு அனுபவித்த வருமா யிருந்தார் (ஏசாயா 53: 3) என நாம் அறிவோம். அவர் தனிமையை உணர்ந்தவர் என்ற உண்மையில் நாம் ஆறுதல் அடையலாம். மற்றவர்களுக்கு தெரியாத நம் போராட்டங்கள் அவருக்கு தெரியும்.

தேவனின் அன்பை விட்டு நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்பதை நினைவு கொள்ள வேண்டும் (ரோமர் 8:38-39). நாம் சில நேரங்களில் தனிமையில் மூழ்கும் போது ,அவர் நம்முடனே நடக்கிறார் .அவருடைய ஆறுதலை சிறிய விஷயங்களிலும் அவர் பிரசன்னத்தை நாம் எப்படி அறிவோம்?

தனிமை கஷ்டமானது என ஒத்துக்கொள்வோம். நாம் அதன் வலியினால் வருந்தினாலும் அது நம்மை பற்றி, நம்மை சுற்றி உள்ளவர் பற்றி மற்றும் தேவனைப் பற்றி சொல்லும் பொய்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம். நாம் இருளில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சத்தியத்தை நினைவுகூர்ந்து போராடலாம்.