நான் எப்பொழுதும் பாதுகாப்பின்மையோடு போராடுகிறேன். தவறுகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நான் வளர்ந்த சூழல் எனக்கு கற்றுத்தந்தது. அது ஏற்பட்டால் அது என்னுடைய தவறாகும் அதனால் நான் எப்போதும் சரியான வனாக இருக்க வேண்டிய தேவையும் அனைவரிடமும் என்னுடைய சிறந்த பதிப்பை வழங்க வேண்டியுள்ளது.

இந்த மனநிலை என்னை மிகவும் பாதித்தது, எதுவரை என்றால் “உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்ற கேள்விக்கு விடை சொல்வது கடினமாய் இருக்கும் இதைக் கேட்கும் போதெல்லாம் வழக்கமான தவறுதல் என்னை துரத்தும் – பெயர், வயது, எங்கிருந்து வருகிறாய் மற்றும் என் வேலை . என் பெலன்கள்பற்றி கேட்டால், சில நேரம் சிந்தித்து இரண்டோஅல்லது மூன்றோ பட்டியல் இடுவேன் – விவரம் சார்ந்தது, திட்டமிடுவது மற்றும் சுதந்திரம். பலவீனங்கள்? உடனடியாக பத்துக்கும் அதிகமாய் பட்டியலிடுவேன் – பொறுமையின்மை, பிடிவாதம், ஒரு பரிபூரண வாதி மற்றும் பட்டியல் நீளும்.

பல ஆண்டுகளாக நான் என் பலவீனங்களை வெறுத்தேன். என் பரிபூரண வாதம் அதீத சிந்தனைக்கு வழிவகுத்ததால் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய சில விஷயங்களை முடிக்க எனக்கு நீண்ட காலம் பிடித்தது. என் பொறுமை இன்மையும் பிடிவாதமும் என்னை குறிப்பாக எனக்கு நெருக்கமானவர்களிடம் சர்ச்சைக்குரியவராக ஆக்கியது.

உண்மையிலேயா, தேவனே? நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன் எனில், என்னிடம் ஏன் இத்தனை பலவீனங்கள்?

சங்கீதம் 139:14, “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்” என்கிறது, அதன் அர்த்தத்தை நான் புரிந்து கொள்ளவில்லை. அந்த வசனத்தை பார்த்தபோது, என் எண்ணமானது “உண்மையிலேயா, தேவனே? நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன் எனில், என்னிடம் ஏன் இத்தனை பலவீனங்கள்?”

தொற்றின் காலத்தில், நான் வேலையிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்து முதுகலை படிப்புகள் பயில உதவித்தொகைக்கு விண்ணப்பித்தேன். பாடசாலை என் சொந்த ஊருக்கு அருகில் இருந்ததால் என் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தேன்.

நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து தொலைவில் வாழ்ந்தேன. அக்காலத்தில், என் புதிய நகரத்தில் புதிய சமூகத்தில் ஆறுதலை பெற்றேன் – அது தான் என் வாழ்வில் முதல் முறை நான் என் சொந்தமாக உணர்ந்தேன். எனவே இப்பொழுது, என் வீடு, எனக்கு பரிச்சயமாக இருக்கவேண்டியது, பரிச்சயம் இல்லாதது போல் ஆனது.

வேலை செய்யும் பெரியவராக வாழ்ந்த பின்பு நீண்ட காலம் கழித்து மாணவராக இருப்பது ஆரம்பித்த இடத்திற்கே செல்வது போன்று இருந்தது. மற்றவர்களுடன் எப்படி வாழ்வது என்பதை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. மீண்டும் மாணவராகவும் கற்க வேண்டியிருந்தது. ஆராய்ச்சி செய்து, உயர்கல்வி கற்பது எனக்கு புதிய அனுபவம் ஆகும்.

இந்த மாற்றங்களால் நான் தொலைந்து போன ஆடு போல உணர்ந்தேன். புது வாழ்விற்கு அனுசரித்துப் போகவும் சொந்தமாக அவர்களை நினைக்கவும் போராடினேன். நான் துன்பத்தில் மூழ்கிப் போனதால்,என் பலவீனங்கள் நான் செய்யும் சிறிய விஷயத்திலும் அல்லது எல்லா சூழ்நிலையிலும் வெளிப்படையாக தெரிந்தது.என் பெற்றோருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தது, அடிக்கடி விவாதத்தில் முடிந்தது. நான் செய்யும் செயலில் மகிழ்ச்சியை காணவில்லை. நான் நினைத்த மாதிரி செயலை முடிக்க பொறுமை இன்மையால் மனஅழுத்தத்திற்கு ஆளானேன்.

இறுதியில், நான் பேசுவதை குறைத்துக் கொண்டு, எனக்குள்ளேயே விஷயங்களை வைத்துக் கொண்டேன். தேவனிடம் நான் சோர்ந்திருக்கிறேன், உங்களுடன் பேசக்கூட முடியாமல் மிகவும் சோர்ந்து இருக்கிறேன் என்றேன். அதன் விளைவாக, தேவனுடனான என் உறவு மெதுவாக குறைந்தது. நான் கடந்த காலத்திலேயே வாழ்ந்தேன், கடந்த கால வாழ்க்கையை வாழ விரும்பினேன், நான் தன்னிரக்கத்தில் ஆழ்ந்து தேவனை சந்தேகித்து, கேள்வி கேட்டேன்.

என் உள்ளுணர்வு வெட்கப்பட்டு யாரிடமும் பேசாமல், எல்லாவற்றையும் விட்டு மூடினாலும் தேவன் என்னை விடமாட்டார்.

என் பரிபூரண தேவையை விட்டுவிட்டு தேவனை அதிகமாய் நம்ப வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இந்த சமயத்தில் என்னுடைய ஆழ்ந்த எண்ணங்கள், பயங்கள் மற்றும் பலவீனங்களை பரிசீலிக்க தேவன் சவால் விட்டார். நான் என் பலவீனங்களை மறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தேவன் தொடர்ந்து வைத்தார். என் பெற்றோர்களுடன் 24/ 7 தொடர்பில் இருந்தேன். என் பரிபூரண வாதத்தாலும் அதீத சிந்தனையாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் எனக்கு தூக்கமின்மை, நான் செய்யும் செயலில் மகிழ்ச்சி இன்மை, மற்றவர்களுடன் இறுக்கமான உறவு ஏற்பட்டன. நான் இதை தொடர முடியாது, என் பரிபூரண தேவையை விட்டுவிட்டு தேவனை அதிகமாய் நம்ப வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

ஒரு சமயத்தில் அமெரிக்க நடிகர் மார்கன் ப்ரீமேன் அவர்களின் பேட்டியைக் கண்டேன். அது தேவனைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய உதவியது:

அவர் தைரியத்துக்காக ஜெபித்தால், தேவன் தைரியத்தை தருகிறாரா? அல்லது அதற்கான வாய்ப்புகளை தருகிறாரா? யாராவது குடும்பம் நெருக்கமாக இருக்க ஜெபித்தால், தேவன் அன்பை தருவாரா? அல்லது அதற்கான வாய்ப்புகளை தருவாரா?

என் போராட்டங்களினால், தேவ பெலன் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். அவர் ஒருவரே என்னை முற்றிலும் புரிந்து கொள்வார், என் புலம்பல்களை கேட்பார், அவர் என்னை கை விடுவதில்லை என்பதை உணர்ந்ததும் தேவனிடம் பேச ஆரம்பித்தேன்.அவர் தந்த ஆறுதலை வார்த்தையால் விவரிக்க முடியாது. நான் விரும்பிய வண்ணம் விஷயங்கள் மாறவில்லை எனினும், என் இருதயத்தில் சமாதானம் இருந்தது, நான் தேவனின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறேன்.

தேவன் அவர்கள் வாழ்வில் செய்த கிரியைகளை பார்த்தேன். என்னிலும் தேவன் கிரியை செய்வார் என உறுதி செய்கிறேன்.

மற்ற விசுவாசிகளுடன் (ஜெபக்குழு மற்றும் ஞாயிறு ஆராதனை மூலம்) இருப்பது என்னை ஊக்குவிக்கிறது. அவர்களுடைய கதைகளைக் கேட்ட போது, இந்த பயணத்தில் நான் மட்டும் தனியாக இல்லை என்று உணர்ந்தேன். யாரும் காணாத போராட்டங்களை அவர்கள் தனியே போராடினாலும், அவர்களுடைய பகிர்தலால், தேவன் அவர்கள் வாழ்வில் செய்த கிரியைகளை பார்த்தேன். என்னிலும் தேவன் கிரியை செய்வார் என உறுதி செய்கிறேன்.

ஒருநாள் என் பெற்றோர்கள் உடன் நடந்த வாக்கு வாதத்திற்கு பின் தேவனுடைய வார்த்தைகளில் ஆறுதலை தேடியபோது (அவர் டைலி பிரட் மினிஸ்ட்றீஸ்) நமது அனுதின மன்னா ஊழியங்களின் டிஸ்கவர் யுவர் செல்ப் அன்ட் அதர்ஸ் என்ற பயிற்சி வகுப்பை கண்டேன்.

எனக்கு வித்தியாசமாக இருப்பது மோசமானது என்ற மனநிலை எப்போதும் இருந்தது. ஆனால் இந்த பயிற்சியில் நாம் அவ்வாறு இருப்பது ஒரு நோக்கத்திற்காக என்று புரிந்தது. காரியம் நடைபெற ஓர் அணியில் எல்லோரும் ஒரே மாதிரி ஆளுமையுடன் இருக்க முடியாது. நாம் செய்ய முடியாததை செய்ய வித்தியாசமான ஆளுமைகள் தேவைப்படுகின்றன. உதாரணத்திற்கு, கூடிப்பழகும் இயல்புடையவர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் சிறந்து விளங்குவார். விவரம்சார்ந்தவர், நிர்வாகத்தில் சிறப்பாக பொருந்துவார். மற்றவர்களால் முடியாத ஒரு வழியில் என்னால் பங்களிக்க முடியும், அதுபோல என்னால் பங்களிக்க முடியாத ஒன்றை மற்றவர்களால் செய்ய முடியும் என்பதை கற்றுக் கொண்டேன்.