பகுதி 9 – நமது ஜீவனுள்ள நம்பிக்கை
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலேஇ ….தமது (தேவனுடைய) மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியூம் ஜெநிப்பித்தார். 1பேதுரு 1:4
எனது தாயார் இறந்த நாளிற்கு மறுநாள் காலைஇ நான் யோவான் 6-ம் அதிகாரத்தை வாசித்துஇ எனது துக்கத்தைக் குறித்து தேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் 39-வது வசனத்திற்கு வந்தபோதுஇ எனது துக்கமான இருதயத்தை ஆறுதல்படுத்துமுகமாக கர்த்தர் என்னுடன் மெதுவாகப் பேசினார்: “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையூம் நான் இழந்துபோகாமல்இ கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.” மரித்துப்போன எனது தாயாரின் ஆவியானது ஏற்கனவே தேவனுடன் இருக்கிறதுஇ ஆனாலும்இ ஒருநாள் அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டுஇ அவருக்குப் புதிதான சரீரம் கொடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.
நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தபோதுஇ இறுதிநாளின்போது தம்முடைய மக்களை மரித்தோரிலிருந்து தாம் எழுப்புவதாக இயேசு கூறியிருப்பதை மூன்று தடவைகள் அவதானித்தேன் (வச.40இ 43இ 54). அவர் இந்த சத்தியத்தைஇ வெகு காலத்திற்கு முன்னH கேட்ட மக்களுக்கும்இ அதைப்போல அன்றைய நாளில் என் இதயத்திற்கும் திரும்பவூம் கூறினார்.
நமது உயிர்த்தெழுதலின் நம்பிக்கையானதுஇ இயேசு மறுபடியூம் வரும்போது தௌpவாக உணர்ந்துகொள்ளப்படும். “கடைசி எக்காளம் தொனிக்கும்போதுஇ ஒரு கணத்திலேஇ ஒரு இமைப்பொழுதிலேஇ அது நடைபெறும். எக்காளம் தொனிக்கும்இ அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.;” (1கொரிந்தியர் 15:51-52). உயிர்த்தெழுதலுக்கு பின்னர்இ இயேசுவில் விசுவாசம் கொண்டவர்கள் தங்களுக்கான புதிய சாPரத்தையூம்இ தங்கள் விசுவாசத்தின் கிரியைகளுக்கான வெகுமதிகளையூம் பெற்றுக் கொள்வார்கள் (1கொரிந்தியர் 3:12-15;@ 2கொரிந்தியர் 5:9-11).
உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவனின் ஜீவனுள்ள நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை உங்களுக்கு உண்டா?
தம்முடையவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்து பரலோகத்திலிருந்து வருவார்.
இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.
-
- பகுதி 1 – பூரண சமாதானம்
- பகுதி 2 – சந்தேகத்தின் மரணம்
- பகுதி 3 – பாடுகளின் பாதையில்
- பகுதி 4 – வெற்றி முழக்கம்
- பகுதி 5 – இராஜாவின் கிரீடம்;
- பகுதி 6 – மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
- பகுதி 7 – இப்போதைக்கு விடைபெறுகிறேன்
- பகுதி 8 – இன்னும் அதிகமாய்!
- பகுதி 9 – நமது ஜீவனுள்ள நம்பிக்கை
- பகுதி 10 – இயேசுவோடு வீட்டில்