பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:20
ஒரு உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது நான் கேட்ட ஒரு அறிக்கையானது இன்னும் என் மனதில் இருக்கிறது: “மனிதனின் வீழ்ச்சியின்போது இழந்ததைவிட அதிகமாக இயேசுவின் உயிர்த்தெழுதலில் பெறப்பட்டது.” இழந்ததைவிட அதிகமாய்ப் பெறப்பட்டதா? அது உண்மையாக இருக்கக்கூடுமா?
பாவம் உலகத்தினுள் நுழைந்ததினால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து வருகின்றௌம். பேராசைஇ அநீதிஇ மற்றும் கொடூரம் என்று அனைத்துமேஇ கடவூளின் வழியை விடுத்து தமது சொந்த வழியில் செல்ல ஆதாமும் ஏவாளும் முடிவூ செய்த அந்த அடிச்சுவட்டை நோக்கியே செல்லுகின்றது (ஆதியாகமம் 3). அவர்களின் கீழ்ப்படியாமையின் மரபானது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வருகிறது. கடவூளின் தலையீடு இல்லையெனில்இ நாங்கள் நம்பிக்கையற்ற ஒரு நிலையில் இருந்திருப்போம். ஆனால் இயேசுஇ தம்முடைய சிலுவைக்கூடாக பாவத்தை வென்றெடுத்துஇ தமது உயிர்த்தெழுதலுக்கூடாக மரணத்தை ஜெயித்தார்.
ரோமர் 5-ம் அதிகாரத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்துவின் வெற்றியானதுஇ பெரும்பாலும் புதிய ஏற்பாட்டின் “இன்னும் அதிகமான” அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது@ இங்கே பவூல்இ பாவத்தினால் ஏற்படும் பேரழிவிற்கும்இ தேவனுடைய கிருபைக்கூடான வல்லமையிலான மீட்டெடுத்தலையூம் வேறுபடுத்திக் காண்பிக்கின்றார். ஒவ்வொரு விடயத்திலும்இ கிருபையானது பாவத்தின் விளைவூகளை வெற்றிகொள்கிறது. ஒரு கம்பீரமான முடிவில்இ பவூல்இ “மேலும்இ மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது@ அப்படியிருந்தும்இ பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோலஇ கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” (ரோமர் 5:20-21) என்று கூறுகிறார்.
பாவத்தினால் தனிப்பட்ட முறையில் நாம் எவ்வளவூ இழந்திருந்தாலும் பரவாயில்லைஇ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஜெயத்தினுhடாக நாம் இன்னும் அதிகமாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றௌம்.
எமது பாவம் பெரியது – தேவனுடைய கிருபையோ மிகவூம் பெரியது