ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

பகுதி 10 – இயேசுவோடு வீட்டில்

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிஇ நான் மறுபடியூம் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:3

“வீட்டைப்போல வேறு இடம் எதுவூமில்லை.” இந்த சொற்றொடரானது ஓய்வெடுப்பதற்கும்இ தங்கியிருப்பதற்கும்இ எமக்கென்று சொந்தமாகவூம் ஒரு வாசஸ்தலம் இருக்கவேண்டும் என்ற நமது ஆழமான ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இயேசுவூம் அவருடைய நண்பர்களும் ஒன்றாக தமது இறுதி இராப்போஜனத்தை உண்ட பின்னர்இ வரவிருக்கிற அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியபோதுஇ மனதில் பதிந்திருக்கும்படி இந்த விருப்பத்தை அவர் கூறினார். தாம் சென்றாலும்இ அவர்களுக்காகத் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன் அவர்களுக்காக ஒரு அறையை அவர் ஆயத்தம் செய்வார். ஒரு வாசஸ்தலம். ஒரு வீடு.

பாவமற்ற மனிதனாக சிலுவையில் மரித்தபோதுஇ கடவூளுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலமாக அவர் இந்த வாசஸ்தலத்தை அவர்களுக்காகவூம் – நமக்காகவூம் – ஆயத்தம் பண்ணினார். இந்த வீட்டைச் சிருஷ்டிப்பதில் தாம் கஷ்டப்பட்டாலும்இ நிச்சயமாக தாம் அவர்களுக்காக வந்துஇ அதன்பின்னர் அவர்களை விட்டுவிலகுவதில்லை என்று தமது சீஷர்களுக்கு உறுதிப்படுத்தினார். (யோவான் 14:2-3). அவர்கள் பூமியிலோ அல்லது பரலோகத்திலோ தங்கள் வாழ்க்கையைக் குறித்துப் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்துஇ அவர் நமக்காக ஒரு வீட்டை உருவாக்குகிறார் என்று நாம் ஆறுதலும் உறுதியூம் பெறமுடியூம்@ அதாவதுஇ அவர் நமக்குள்ளே தமது வீட்டை உருவாக்குகிறார் (யோவான் 14:23-ஐ பார்க்கவூம்);@ மேலும்இ நமக்காக பரலோக வீட்டைத் தயார் செய்வதற்காக அவர் நமக்கு முன்பதாகச் சென்றிருக்கிறார். உலகாPதியாக எவ்வகையான இடத்தில் நாம் வாழ்ந்தாலும்இ நாம் இயேசுவிற்குச் சொந்தமானவர்களாக இருக்கிறௌம்இ அவருடைய அன்பினால் தாங்கப்பட்டுஇ அவருடைய சமாதானத்தால் சூழப்பட்டிருக்கிறௌம். அவருடன் வாழுகின்றஇ அந்த வீட்டைப்போல் வேறு இடம் இல்லை.

நாம் என்றென்றும் வாழுவதற்காக இயேசு நமக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார்.