ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

ஒரு மீட்பர் இருந்தார்.

ஒரு மீட்பர் இருந்தார்.

No student enrolled

பகுதி 7 – இப்போதைக்கு விடைபெறுகிறேன்

…நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்துஇ அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 1தெசலோனிக்கேயர் 4:13

எனது பேத்தி அலிஸ்சாவூம் நானும்இ சென்றுவருவதாக விடைபெறும்போது ஒரு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறௌம். நாங்கள் ஒருவரையொருவர் கைகளால் கட்டித்தழுவிஇ சுமார் இருபது வினாடிகள் நாடகத்தனமாக விசும்பலுடன் சத்தமாக புலம்ப ஆரம்பிப்போம். பின்னர்இ நாங்கள் எம்மை விடுவித்துக்கொண்டுஇ “சந்திப்போம்” என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிடுவோம். எங்களுடைய இந்த முட்டாள்த்தனமான வழக்கமானது வேடிக்கையாக இருந்தாலும்இ நாம்; மீண்டும் ஒருவரையொருவர் விரைவில் சந்திப்போமென்று எப்போதும் எதிர்பார்த்திருப்போம்.

ஆனால்இ நாம் அக்கறை கொண்டவர்களிடமிருந்து பிரிகிற வலியானது சில சமயங்களில் கடினமானதாக இருக்கமுடியூம். அப்போஸ்தலராகிய பவூல் எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடமிருந்து விடைபெற்றபோதுஇ “அவர்களெல்லாரும் மிகவூம் அழுதுஇ என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டுஇ பவூலின் கழுத்தைக் கட்டிக்கொண்டுஇ அவனை முத்தஞ்செய்துஇ கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்” (அப்போஸ்தலர் 20:37-38).

எவ்வாறிருப்பினும்இ மரணத்தினால் நாம் பிரிந்து இந்த வாழ்க்கையியிலிருந்து இறுதியாக விடைபெறும்போது ஆழ்ந்த துக்கம் ஏற்படுகிறது. அந்தப் பிரிவூ நினைத்தும் பார்க்க முடியாததொன்றாகும். நாம் துக்கப்படுகிறௌம். நாம் அழுகிறௌம். நாம் நேசித்தவர்களை மீண்டும் ஒருபோதும் ஆரத்தழுவ முடியாது என்ற மனவேதனையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளமுடியூம்?

இனிமேலும்… நம்பிக்கை இல்லாதவர்களைப்போல நாம் துக்கப்படுவதில்லை. ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறவர்களுக்கு” எதிர்காலத்தில் மீண்டும் இணைதல் உண்டு என்பதைக் குறித்துப் பவூல் எழுதுகிறார் (1தெசலோனிக்கேயர் 4:13-18). “ஏனெனில்இ கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்இ பிரதான தூதனுடைய சத்தத்தோடும்இ தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (வச.16)இ மற்றும்இ மரித்தவர்களும்இ இன்னும் உயிருடன் இருப்பவர்களும் நம்முடைய கர்த்தரோடு ஐக்கியமாவார்கள். என்ன ஒரு மீள் இணைதல்!

மேலும் – எல்லாவற்றிற்கும் மேலாக – நாம் என்றென்றும் இயேசுவூடனேகூட இருப்போம். இதுவே ஒரு நித்தியமான நம்பிக்கை.

மரணத்தின்போது தேவனுடைய மக்கள் “விடைபெறுகிறௌம்” என்று கூற மாட்டார்கள்இ மாறாகஇ “மீண்டும் சந்திப்போம்” என்று கூறுவார்கள்.