ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

பகுதி 6 – மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25

உயிர்த்த ஞாயிறன்று காலை ஆலயத்துக்குள்ளே நான் நுழைந்தபோது எனது நண்பியைக் கண்டுஇ “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!” என்று வாழ்த்திவிட்டுஇ உடனடியாக என்னைத் திருத்திக்கொண்டுஇ “அதாவதுஇ மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்” என்றேன்.

“ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை” என்று அவள் புன்னகைத்தாள். அது எவ்வளவூ உண்மை! கிறிஸ்து பிறப்பு இல்லையெனில்இ உயிர்த்த ஞாயிறு என்று ஒன்று இருந்திருக்க முடியாது. மேலும்இ உயிர்த்தெழுதல் இல்லையெனில் இந்த நாள் மற்றைய நாட்களைப்போல ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். உண்மையைச் சொன்னால்இ நாம் ஆலயத்திலே இருந்திருக்க மாட்டோம்.

கிறிஸ்தவனுக்குக் கிறிஸ்மஸ்இ மற்றும் உயிர்த்த ஞாயிறு என்பவை ஆண்டின் மிக மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாகும். முதலாவதாக நாம்இ கிறிஸ்து மனுவூருவானதைக் கொண்டாடுகிறௌம் (கடவூள் மாம்சமாகி இவ்வூலகத்திற்கு வருதல்). “தேவன்இ தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளிஇ இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).

இரண்டாவதாக நாம்இ இயேசுவூடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடுகின்றௌம். “அவர் இங்கே இல்லை! அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்” என்று தேவதூதன் கூறினான் (லூக்கா 24:6). இந்த இரண்டு நாட்களும் ஆதியிலிருந்தே தேவனுடைய மாபெருந்திட்டத்தில் பிரிக்க முடியாதவைகளாக தொடர்புபட்டிருந்தன. இயேசு நமது பாவங்களுக்காக மரிப்பதற்காகவூம்இ நாம் வாழுவதற்காக மரணத்தை வெற்றிகொள்ளவூமே பிறந்தார்.

எது மிகவூம் முக்கியமானது? கிறிஸ்மஸ் – குழந்தை இயேசுவின் பிறப்பா? அல்லது உயிர்த்த ஞாயிறு தினமா – தேவனுடைய குமாரனாகியஇ மனிதனுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலா? இரண்டுமே அவசியமானவை – மேலும் இரண்டும் நம் மீதான பிதாவின் அன்பிற்கான சான்றாகும்.

மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! மற்றும் மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்!

கிறிஸ்மஸ் மற்றும் உயிர்த்தெழுந்த நாள் – ஒரே புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்கள்