ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

பகுதி 5 – இராஜாவின் கிரீடம்;

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னிஇ அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயூ 27:29

நாங்கள் மேசையைச் சுற்றி அமர்ந்துஇ ஒவ்வொருவரும் நமக்கு முன்னால் இருந்த பல்குத்தும் குச்சிகளைக் குத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற வட்டவடிவ தளத்தில் ஒவ்வொரு குச்சியைக் குத்திவைத்தோம். உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்திய வாரங்களில்இ ஒவ்வொரு நாளும் எங்களின் இரவூ உணவின்போதுஇ அன்றைய நாளில் நாங்கள் செய்த தவறை நினைத்து மனம்வருந்திஇ கிறிஸ்து அதற்கான கிரயத்தைச் செலுத்தினார் என்று நினைவூகூர்ந்துஇ அவற்றைக் குறிக்கும்படியாக பல்குத்தும் குச்சிகளை வைத்து நாங்கள் முட்கிரீடத்தை உருவாக்கினோம். நமது தவறான செயல்களால் நாம் எவ்வாறு குற்றவாளிகளாகிறௌம் என்பதையூம்இ இரட்சகர் ஒருவர் நமக்குத் தேவை என்பதையூம்இ ஒவ்வொரு இரவூப்பொழுதிலும்இ இந்தப் பயிற்சி நம்மை இல்லத்தில் கொண்டுசேHத்தது. மேலும்இ இயேசு சிலுவையில் மரித்ததன் மூலமாக நம்மை எவ்வாறு விடுவித்தார் என்பதையூம் எங்களுக்கு உணர்த்தியது.

இயேசுவிற்கு அணிவிக்கப்பட்ட முட்கிரீடமானதுஇ அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பதாக உரோம சிப்பாய்கள் விளையாடிய கொடூரமான விளையாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அவர்கள் அவருக்கு அரசருக்குரிய சிவப்பான மேலங்கியை அணிவித்துஇ ஒரு கோலை ராஜாவின் செங்கோலாக அவரிடத்தில் கொடுத்தனர்@ பின்னர் அதையே அவரை அடிப்பதற்கும் பயன்படுத்தினர். தாங்கள் செய்த செயல்களானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னரும் நினைவூகூரப்படும் என்பதை அவர்கள் உணராதவர்களாக இருந்ததினால்இ இயேசுவின்மீது அவர்கள் துப்பிஇ “யூ+தருடைய ராஜாவே வாழ்க” என்று அவரைப் பரியாசம் பண்ணினார்கள் (மத்தேயூ 27:29). இவர் சாதாரண இராஜா அல்ல. மாறாகஇ அவருடைய மரணம்இ அதைத் தொடHந்த உயிர்த்nழுதலினால் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிற இராஜாதி இராஜா இவர்.

உயிர்ந்தெழுந்த ஞாயிறு காலையில்இ பல்குத்தும் குச்சிகளுக்குப் பதிலாக மலர்களை வைத்து பாவ மன்னிப்பு மற்றும் புதிய வாழ்க்கை என்ற பரிசுகளைக் கொண்டாடினோம். தேவன் நமது பாவங்களை அழித்துஇ அவரிலே சுதந்திரத்தையூம்இ வாழ்வையூம் என்றென்றும் எங்களுக்குக் கொடுத்தார் என்பதை அறிந்துகொண்டுஇ நாங்கள் எவ்வளவூ மகிழ்ச்சி அடைந்தோம்!

முட்கிரீடம் ஜீவ கிரீடமாக மாறியூள்ளது.