பகுதி 4 – வெற்றி முழக்கம்
முடிந்தது! யோவான் 19:30
சில வருடங்களுக்கு முன்புஇ தொலைவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்புறத்தில் தனியாக சிக்கிக்கொண்ட ஆரோன் ரல்ஸ்டன் என்கிற மலை ஏறும் வீரரைக் குறித்து வாசித்தேன். கண்டுபிடிக்கப்படுவேன் என்கிற அற்பமான நம்பிக்கையே இருந்த நிலையில்இ அவரின் பலம் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில்இ தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டியிருந்தது. மிகுந்த கடுமையான வலியோடு கூடிய அந்தத் தருணத்தில்இ அவர் வேதனையோடும்இ அதேவேளை ஜெயத்தோடும் உரத்த சத்தமிட்டார்@ காரணம்இ அவர் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தார்இ மற்றும்இ இப்போது அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டியது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்குச் சாட்சியாக நின்றவர்கள்இ அவருடைய கடுமையான வேதனையின் வேளைகளையூம்இ அவர் தமது ஆவியை விட்டபோது “அது முடிந்தது” என்று உரத்த சத்தமிட்டுக் கதறியதையூம் கேட்டார்கள் (யோவான் 19:30). சிலுவையிலிருந்து அவர் கூறிய இறுதி வார்த்தைகள் ஜெயத்தின் வார்த்தைகளே தவிரஇ அவை வேதனை நிறைந்த தோல்வியின் கூக்குரல் அல்ல@ ஏனெனில்இ பிதா அவரை எதற்காக அனுப்பினாரோ அவை அனைத்தையூம் அவர் செய்து முடித்திருந்தார்.
கிறிஸ்து மரித்தபோதுஇ நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக அனுபவிக்கவேண்டியதை அவர் அங்கே பகிர்ந்துகொண்டார். ஆனால் அதற்கும் அப்பால்இ நம் எவராலும் செய்ய முடியாததை அவர் செய்துமுடித்தார். அவர் மீதான விசுவாசத்திற்கூடாக நாம் மன்னிக்கப்பட்டுஇ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படியாக எமது பாவத்திற்கான கிரயத்தை அவர் செலுத்தித் தீர்த்தார்.
“அது முடிந்தது” என்பது ஆண்டவருடைய வெற்றி முழக்கமாகும்@ ஏனெனில் இப்பொழுதுஇ அவருக்கூடாகஇ பாவத்தின் வல்லமையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியூம்: நாம் விடுதலை பெற்ற வாழ்க்கையை வாழமுடியூம்.
இயேசு நமக்காக தம்மைத்தாமே பலியாக ஈந்ததினால்இ அவர் மரித்த நாளை நாம் “பெரிய வெள்ளி” என்று அழைக்கின்றௌம்.
நாம் வாழுவதற்காக இயேசு மரித்தார்.
இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.
-
- பகுதி 1 – பூரண சமாதானம்
- பகுதி 2 – சந்தேகத்தின் மரணம்
- பகுதி 3 – பாடுகளின் பாதையில்
- பகுதி 4 – வெற்றி முழக்கம்
- பகுதி 5 – இராஜாவின் கிரீடம்;
- பகுதி 6 – மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
- பகுதி 7 – இப்போதைக்கு விடைபெறுகிறேன்
- பகுதி 8 – இன்னும் அதிகமாய்!
- பகுதி 9 – நமது ஜீவனுள்ள நம்பிக்கை
- பகுதி 10 – இயேசுவோடு வீட்டில்