ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

பகுதி 3 – பாடுகளின் பாதையில்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஇ அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறௌம். எபிரேயர் 10:10

பரிசுத்த வாரத்திலேஇ எருசலேம் வீதிகளினூடாக சிலுவையை நோக்கிய நீண்ட நடை உட்படஇ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய இறுதி நாட்களை நாம் நினைவூகூருகின்றௌம். இன்றுஇ இந்தப் பாதையின் மிகவூம் சாத்தியமான அமைவிடமாக The Via Dolorosa அதாவது பாடுகளின் பாதை என்று இது அறியப்படுகிறது.

ஆனால் எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர்இ இயேசு சென்ற இந்தப் பாதையை துயரங்களின் பாதைக்கும் மேலான ஒன்றாகவே பார்க்கின்றார். இயேசு தாம் விரும்பி கொல்கொதா நோக்கி நடந்த அந்த துன்பத்தின் பாதையானதுஇ தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிய “புதியதும்இ வாழ்வூ தருவதுமான பாதையை” நமக்காகவே உருவாக்கியது (எபிரேயர் 10:20).

பல நூற்றாண்டுகளாக யூ+த ஜனங்கள் மிருகப் பலிகளுக்கூடாகவூம்இ நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பதற்கூடாகவூம் தேவனுடைய பிரசன்னத்திற்கு வருவதற்கு முயன்றனர். ஆனால் நியாயப்பிரமாணமானது “வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல்இ அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறதுஇ” ஏனெனில் “காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே” (வசனங்கள் 1இ4).

இயேசுவின் துயரங்களின் பாதையினூடான (The Via Dolorosa ) பயணமானது அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் அவரை இட்டுச்சென்றது. அவருடைய பலியின் காரணமாகஇ நம்முடைய பாவமன்னிப்பிற்காக அவரை விசுவாசிக்கும்போது நாம் பரிசுத்தமாக்கப்பட முடியூம். நியாயப்பிரமாணத்தை முழுநிறைவாகக் கடைபிடிப்பதற்கான இயலுமை எம்மிடம் இல்லாவிட்டாலும்இ நாம் வரவேற்கப்படுகிறௌம்இ அன்புகூரப்படுகிறௌம் என்கிற முழுமையான நம்பிக்கையூடன் நாம் பயமின்றி அவரைக் கிட்டிச்சேர முடியூம் (வசனங்கள் 10இ22).

கிறிஸ்துவின் பாடுகளின் பாதையானது தேவனிடம் எமக்கான புதிய ஜீவனுள்ள வழியைத் திறந்துள்ளது.

தேவன் விரும்பியதும்இ மற்றும் எமது பாவத்துக்கான தேவையூம் கிறிஸ்துவின் பலியாகவே இருந்தது.