வகை  |  odb

தயவின் மரபு

 

விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். அப்போஸ்தலர் 9:39

மார்த்தா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடக்கப்பள்ளியில் உதவி…

தயவின் செயல்கள்

 

அவள் (தபீத்தாள்) நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36

"எஸ்டெரா, நமது நண்பர் ஹெலனிடமிருந்து உனக்கு ஒரு பரிசு வந்துள்ளது!" என்று என் அம்மா வேலை…

அறியப்படாத தயவு

 

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. மத்தேயு 6:3.

நான் முதன் முதலில் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, ஒரு…

நிலையான தயவு

 

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள் எபேசியர் 4:32

நான் சிறுவயதில் இருந்தபோது, எல். ஃபிராங்க் பாமின் லேண்ட் ஆஃப் ஓஸ் புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன்.…

வேண்டுமென்றே செய்யப்படும் தயவு

 

தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? 2 சாமுவேல் 9:3.

ஒரு இளம் தாய் தன் குழந்தைகளுடன்…

எதிர்பாராத தயவு

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; எபேசியர் 2:10

என் தோழி அவளது மளிகைப் பொருட்களுக்கானத் தொகையைச் செலுத்துவதற்காகக் காத்திருந்தாள். அவளுக்கு முன்னால்…

விசுவாசம் கேள்வியினால் வரும்

பாஸ்டர் பாப், அவரது குரலைப் பாதிக்கும் வகையிலான ஒரு பெலவீனத்தால் பாதிக்கப்பட்டபோது,  பதினைந்து ஆண்டுகள் அவர் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் வாழ நேரிட்டது. பேச முடியாத ஒரு போதகரால் என்ன செய்ய முடியும் என்று அவர் சோர்ந்துபோனார். இந்தக் கேள்வியுடன் அவர் போராடினார். தனது ஏக்கத்தையும் குழப்பத்தையும் தேவனிடம் விண்ணப்பித்தார். “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது ஒன்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று அவர் ஜெபித்தார். அவர் வேதத்தைப் படிக்க நேரம் செலவழித்தபோது, தேவன் மீது அவருக்கு இருந்த அன்பு அதிகரித்தது. அவர், “வேதத்தை உள்வாங்குவதற்கும் அதில் மூழ்கியிருப்பதற்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஏனென்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும்” என்று அறிக்கையிடுகிறார். 

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று குறிப்பிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. பவுல், யூதர்கள் அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினார் (ரோமர் 10:9). அவர்கள் எப்படி நம்புவார்கள்? தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் ஏற்படும் விசுவாசத்தினாலும், கிறிஸ்துவைக் குறித்த வார்த்தையினாலுமே அது சாத்தியமாகும் (வச. 17). 

பாஸ்டர் பாப், வேதத்தை வாசிக்கும்வேளையில் கிறிஸ்துவின் செய்தியை பெற்றுக்கொள்ளவும் விசுவாசிக்கவும் முயற்சிக்கிறார். அவரால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பேசக்கூடும். அவ்வாறு பேசும்போதும் அதிக வேதனையை அவர் உணருவார். ஆனால் அவர் வேதத்தில் மூழ்கியிருப்பதின் மூலம் தேவனிடமிருந்து சமாதானத்தையும் திருப்தியையும் தொடர்ந்து காண்கிறார். ஆகவே, நம்முடைய போராட்டங்களில் இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் நம்பலாம். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், அவருடைய செய்தியைக் கேட்கும்போது அவர் நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்வார்.