சிற்றலை விளைவு
ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள சிறிய வேதாகம பள்ளி ஒன்று மிகவும் சாதாரணமான ஒரு சிறிய கட்டிடத்தில் மிகவும் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வந்தது. இருப்பினும் பாப் ஹேய்ஸ் அந்த மாணவர்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.அந்த மாணவர்கள் தயங்கினாலும் அவர்களுக்கு தலைமைத்துவ பணிகளும் பிரசங்கித்து கற்றுத்தரும் பணிகளையும் ஆர்களிடத்தில் ஒப்புவித்து ஊக்கப்படுத்தினார். பாப் இறந்து பல வருடங்களுக்கு பிறகு கானா முழுவதும் ஆங்காங்கே டஜன் கணக்குகளில் திருச்சபைகளும் பள்ளிக்கூடங்களும் இன்னும் கூடுதலாக இரண்டு வேதாகம நிறுவனங்களும் எழும்பின- அனைத்தும் அந்த சிறிய வேதாகம பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் துவங்கியவை.
அர்தசஷ்டா ராஜா (கி மு 465 -424) அரசாண்ட சமயத்தில் எழுத்தாளரான எஸ்ரா நாடுகடத்தப்பட்ட யூதர்களை மறுபடியும் எருசலேமுக்கு திரும்பி செல்ல ஒன்றிணைத்தார். தேவாலயத்தில் ஆசிரியர்களாக பணியாற்ற லேவியர்களை தேடினார் ஆனால் அங்கு ஒருவரும் காணப்படவில்லை (எஸ்ரா 8:15). உடனடியாக அங்கிருந்த தலைவர்களை வரவழைத்து தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை அழைத்துவரும்படி அவர்களை நியமித்து (வச 17) அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார் (வச 21)
எஸ்ரா என்பதற்கு “உதவியாளன்” என்று அர்த்தம்- நல்ல தலைமைத்துவத்தில் இருக்கும் ஒரு குணநலன் அது. எஸ்ராவின் ஜெபத்துடன் கூடிய வழிநடத்துதலினால் அவரும் அவரோடு இருந்தவர்களும் எருசலேமை ஆவிக்குரிய விழிப்புணர்வுக்குள் வழி நடத்தினார்கள் (எஸ்ரா9-10). புத்தியுள்ள வழி நடத்துதலும் சிறிய அளவு உற்சாகமும் மட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டது.
இப்படித்தான் தேவ சபையும் இயங்குகிறது. நம்மை உற்சாகப்படுத்தி கட்டியெழுப்ப உதவிய நல்ல வழிகாட்டிகளை போல நாமும் மற்றவர்களுக்கு செய்ய கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்நாள் முடிந்த பின்னும் அவை நிலைத்திருக்கும். பயபக்தியோடு தேவனுக்கு செய்யும் வேலை நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
கூட இருப்பது
கேளிக்கை பூங்காவில் வேலை செய்யும் ஜென், ரோஹித் கண்ணீரோடு தரையிலே சரிந்ததைக் கண்டதும், உடனே அவனுக்கு உதவி செய்ய விரைந்தாள். ரோஹித், மனஇருக்கத்தால் பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன். நாள் முழுதும் தான் மகிழ்ச்சியாக அனுபவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவாரி செய்யும் இயந்திரம் பழுதடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டு அழுதுக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை எழுந்து நிற்கவைக்கவோ அல்லது சமாதானப்படுத்தவோ முயற்சிப்பதற்கு பதிலாக, ஜென், தரையிலே ரோஹித்துடன் உட்கார்ந்து, அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அவனை அழ அனுமதித்தாள்.
ஜென்னின் இந்தச் செயல், துன்பத்தோடும் அல்லது துக்கத்தோடும் இருப்பவர்களோடு எவ்வாறு நாமும் துணை நிற்பது என்பதற்க்கு ஒரு அழகிய உதாரணமாய் இருக்கிறது. தன்னுடைய வீடு, தன் மிருகஜீவன்கள் (வருமானம்), தன் ஆரோக்கியத்தின் இழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தன் பத்து பிள்ளைகளின் இறப்பினால் முடங்கிப்போன யோபுவின் துன்பத்தைப்பற்றி வேதாகமம் கூறுகிறது. யோபின் துக்கத்தை அறிந்த அவருடைய நண்பர்கள் யோபுவுக்கு ஆறுதல் சொல்லவும் - அவரவர் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள் (யோபு 2:11). யோபு துக்கத்தோடே தரையிலே உட்கார்ந்திருந்தார்.
அவருடைய நண்பர்கள் வந்தபோது, அவர்களும் யோபுடன் உட்கார்ந்து - ஏழு நாட்கள் - அவருடைய துக்கம் கொடிதாயிருந்ததினால் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
பிறகு, தங்களுடைய மனிதத்தன்மையின் அடிப்படையில் யோபுவின் நண்பர்கள் அவருக்கு உணர்வற்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் முதல் ஏழு நாட்கள், வார்த்தைகளற்ற மென்மையான பரிசாகிய அவர்களுடைய பிரசன்னத்தை மட்டும் கொடுத்தார்கள்.
மற்றவர்களுடைய துக்கத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், வெறுமனே அவர்களோடு கூட இருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அன்பு செலுத்த இந்த புரிந்துக்கொள்ளுதல் தேவையற்றது.
உமக்குள்ளாக எனக்கு இடம்
முதிர்வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கடின இருதயமுள்ளவர். ஒரு நாள் அவர் நண்பர் அவர் மேல் அக்கறை கொண்டு அவருடைய ஆவிக்குரிய நம்பிக்கையை குறித்து விசாரித்தார். வெறுப்புடன் "அந்த தேவனுக்கு என்னை போல் ஒருவனுக்கு இடம் இருக்காது" என்று சலிப்புடன் கூறினார்.
ஆனால் தேவனோ கடின இருதயம் உள்ளவர்களுக்கும், குற்ற இருதயம் உள்ளவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடம் ஒதுக்கி அவர் சமூகத்துக்குள் வந்து சேர்ந்து செழிக்கும் படி அழைக்கிறார். இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும் போது இதை நாம் பார்க்கிறோம். எருசலேம் மக்களால் ஒதுக்கப்பட்ட கலிலேய மீனவர்களை தெரிந்தெடுத்தார், ஏழைகளிடம் இருந்து வரி வசூலித்த மத்தேயுவை தெரிந்தெடுத்தார். ரோம அரசாங்கத்தை எதிர்த்து அமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்த சீமோனை தெரிந்தெடுத்தார்.
சீமோனை நாம் தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்றாலும், ரோமருக்கு எதிரான இயக்கத்தில் இருந்தபடியால், இஸ்ரவேலராய் இருந்தும் ரோமர்களுடன் ஆலோசனை செய்து தம் சொந்த மக்களிடமே வரி வசூலித்து வந்த மத்தேயு போன்ற தேசத்துரோகிகளை அவர்கள் பகைத்தார்கள். . இருப்பினும் இயேசு சீமோனையும், மத்தேயுவையும் அழைத்து அவர்களை தம்மோடு சேர்த்துக் கொண்டார்.
நாம் யாரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கக்கூடாது. இயேசு அவர் வார்த்தைகளில் "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்" (லுக் 5:32). நம்மைப்போல் கடின இருதயமுள்ளவர்களுக்கு அவரிடம் அதிகமாகவே இடம் இருக்கிறது.
பிடிவாத குணம்
டாக்டர் சியூஸ் இன் ஒரு விசித்திரமான கதைகளில் வடக்கே போகும் கோடாரி தெற்க்கே போகும் கோடரி ஒரு சம புல்வெளியில் சந்திப்பதை பற்றி சொல்கிறார். இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் போது இரு கோடாரியும் ஒதுங்கிப்போவதாக இல்லை. முதலாவது கோடாரி கோபத்துடன் “உலகமே நின்றாலும் நான் நகரப்போவதில்லை என்று ஆணை இடுகிறது. (ஆனால் உலகம் குழப்பமடையாமல் முன் நகருகிறது; அவர்களை சுற்றி ஒரு நெடுஞ்சாலை உருவாக்குகிறது)
இந்த கதை மனிதனுடைய துல்லிய குணத்தை நன்றாக விளக்குகிறது. ‘நாம்தான் சரி’ என்ற ஒரு உணர்வு நமக்குள் இருக்கிறது. நமக்கு கேடு வரும் என்றாலும் அந்த உணர்வை விடுவதற்க்கு நமக்கு மனதில்லை.
ஆனால் நல்ல வேளை, இறைவன் கடினமான இதயங்களை மென்மை படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இதை அறிந்திருந்தார். பிலிப்பிய சபையிலே இருவருக்கு சச்சரவு வந்தபோது பவுல் அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார் (பிலிப்பியர் 4:2): “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2:5). பின்னர்; “சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்ட என் உடன்வேலையாட்களாகிய அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி” (பிலிப்பியர் 4:3) என வேண்டிக்கொண்டார். சமாதானம் அடைவதும், ஞானம் உள்ள நடு பாதையை தேர்ந்தெடுப்பதும் ஒரு கூட்டு முயற்சி போல.
சில நேரங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுதான். ஆனால் கிறிஸ்துவினுடைய அணுகுமுறை, விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை விட மிக வித்தியாசமாகவே இருக்கும். வாழ்க்கையில் பல காரியங்களுக்காக நாம் சண்டை போட அவசியமே இல்லை. சின்னஞ் சிறு காரியங்களுக்காக நாம் மற்றவர்களோடு மோதிக்கொள்வோமானால் ஒருவரையொருவர் அழித்துக்கொள்வோம் (கலாத்தியர் 5:15)
நாம் நம்முடைய பெருமையை சற்று விழுங்கி, ஞான அறிவுரைபடி நடந்தால் ஒற்றுமையாக வாழலாம்.
விசித்திரமான ஆறுதல்
நலம் பெற வாழ்த்தி வந்த அட்டையில் எழுதியிருந்த வசனம் அவளுடைய நிலைமைக்கு பொருந்துவதாக லீசாவுக்கு தெரியவில்லை: “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”. 2 இராஜாக்கள் 6:17 எனக்கோ புற்றுநோய் உள்ளது. ஒரு குழந்தையை இப்போதுதான் இழுந்து போனேன். தேவதூதர்களை பற்றிய இந்த வசனம் எனக்கு அல்ல என்று குழம்பினாள்.
பிறகு, ஒவ்வொருவராக தேவதூதர்கள் வர ஆரம்பித்தார்கள்! புற்றுநோயிலிருந்து குணமான அநேகர் தங்களுடைய நேரத்தை அவளுக்கு ஒதுக்கி அவளோடு பேசினார்கள். அவளுடைய கணவன் வெளிநாட்டில் இராணுவத்திலிருந்து சீக்கிரமாக விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினான். அவள் கூட ஜெபிக்க, நண்பர்கள் வந்தார்கள். ஆனால் அவள் எப்பொழுது இறைவனுடைய அன்பை மிகவும் உணர்ந்தாள் தெரியுமா? அவளுடைய தோழி ப்பட்டி (Patty) இரண்டு திசு காகிதம் (tissue) பெட்டிகளுடன் அவளுடைய வீட்டுக்கு வந்து லீசா பக்கத்தில் அதை வைத்து விட்டு அழத் தொடங்கின போதுதான், ப்பட்டிக்கு தெரியும். அவளுக்கும் குழந்தைகளை இழந்த அனுபவம் இருந்தது.
“மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் இது எனக்கு மிகவும் அருமையானது” என்றாள் லீசா. அங்த வாழ்த்து அட்டை இப்பொழுது புரிகிறது. தேவதூதர் எப்பொழுதுமே என்னை சுற்றி இருந்திருக்கிறார்கள்.
எலிசாவை ஒரு படை சுற்றி இருக்கும்போது தேவதூதர்கள் எலிசாவை காத்துக் கொண்டனர். அவனுடைய வேலைக்காரன் அவர்களை பார்க்க முடியவில்லை. எலிசாவை நோக்கி: “ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்” என்றான் ( வ 15). அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” (வ 17) என்றான்;
நாம் தேவனை நோக்கி பார்க்கும்பொழுது தான் நாமிருக்கும் அந்த நெருக்கடியில் எது முக்கியம் என்று தெரிய வரும்; அவர் நம்மை தனியே விடமாட்டார். கர்த்தருடைய ஆறுதலளிக்கும் சமுகம் நம்மை விடுவதில்லை. பல வழிகளில் அவர் தம்முடைய அன்பை நமக்கு காண்பிக்கிறார்.
பாலைவனத்தில் தீ
1800ன் பிற்பகுதியில், அமெரிக்காவின் ஒரு பாலைவனத்தில் சவாரி செய்யும்போது, ஜிம் வைட் ஒரு விசித்திரமான மேகம் வானத்தை நோக்கி சூழன்றதைக் கண்டார். அது காட்டுத்தீ என சந்தேகித்து, மாடு மேய்க்கும் இளைஞான ஜிம், அந்தத் தீ வரும் இடத்தை நோக்கி சென்றபோது, தரையில் ஒரு துளையிலிருந்து வெளியேறும் வெளவ்வால்களின் திரள்கூட்டம் என்பதைக் அறிந்துக் கொண்டார். ஜிம் கண்ட இந்த மகத்தான மற்றும் கண்கவர் அமைப்பு, பின்னர் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தளமாக மாறியது.
ஒரு மத்திய கிழக்கு பாலைவனத்தில் மோசே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது, அவரது கவனத்தை ஈர்த்த ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தார் - ஒரு முட்செடி அக்கினியினால் ஜுவாலித்து எரிந்தும் வெந்து போகாமல் இருந்தது (யாத். 3:2). தேவனே முட்செடியிலிருந்து பேசினது, மோசே தான் முன்பு கண்ட காட்சியிலும் மகத்தான ஒன்றாக உணர்ந்தார். தேவன் மோசேயை நோக்கி “நான் உன் பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனாயிருக்கிறேன்”
(வச. 6) என்றார். தேவன், ஒரு அடிமைப்படுத்தப்பட்ட மக்களை சுதந்திரத்திற்கு நேராக வழி நடத்தி அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் என்ற உண்மையான அடையாளத்தைக் காட்டினார் (வச. 10).
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் “பூமியில் உள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:3) என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணியிருந்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் பயணம் - அந்த ஆசீர்வாதத்தின் ஒரு படிதான் - ஆபிரகாமின் சந்ததியான மேசியா மூலமாக தன்னுடைய சிருஷ்டிப்பை மீட்க தேவனின் திட்டமாகும்.
தேவன் இந்த மீட்பை எல்லோருக்கும் வழங்குவதால், இன்று நாம் அந்த ஆசீர்வாதத்தின் பலன்களை அனுபவிக்கலாம். இந்த முழு உலகத்தின் பாவத்திற்காக கிறிஸ்து மரிக்கும்படியாக உலகத்தில் வந்தார். அவரை விசுவாசிப்பதால், நாமும் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகளாகிறோம்.
அன்பிற்குள் ஓடுதல்
சாரா சிறிய உருவம் கொண்டவள். ஷிரெயா முரட்டு குணமுடையள், உருவத்தில் பெரியவள், வெறுப்போடு சாராவைப் பார்த்தாள், சாரா அவளைக் கட்டாயப் படுத்தவில்லை. ஷிரெயா, ஏன் அந்த கருகலைப்பு ஆலோசனை மையத்தில் நிற்கின்றாள் என்பதையும் தெரிவிக்கவில்லை. அவள் ஏற்கனவே “அந்த குழந்தையை அகற்றி விட” தீர்மானித்து விட்டாள். எனவே, சாரா மென்மையாகச் சில கேள்விகளைக் கேட்டாள். வேதாகமத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும், ஷிரெயா அவற்றை முரட்டுத்தனமாக தவிர்த்தாள். ஷிரெயா தன்னுடைய கர்ப்பத்தை கலைத்துவிடுவதில் உறுதியாக இருப்பதைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தாள்.
ஷிரெயாவிற்கும் கதவுக்கும் இடையேயிருந்த சிறிய இடைவெளியில் நுழைந்த சாரா, “நீ போவதற்கு முன்பு நான் உன்னை அணைத்துக் கொண்டு, ஜெபிக்கலாமா?” என்றாள். இதுவரை அவளை யாருமே, நல்லெண்ணத்தோடு அணைத்ததில்லை, திடீரென, எதிர்பாராத விதமாக அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
சாரா தேவனுடைய இருதயத்தை அழகாக வெளிப்படுத்தினாள். தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலை, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” (எரே. 31:3) என்கின்றார். அந்த ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய வழிகாட்டலை மீறினதால், அதன் கடினமான பின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், தேவன், “காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன். மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (வ.3-4) என்கின்றார்.
ஷிரேயாவின் கதை மிகவும் சிக்கலானது (நம்மில் அநேகருடையதும்). அன்று அவள் தேவனுடைய உண்மையான அன்பிற்குள் ஓடி வரும் மட்டும், தேவனும், தேவனைப் பின்பற்றுபவர்களும் அவளைக் குற்றவாளியென்று ஒதுக்குவர் என்று நினைத்திருந்தாள். ஆனால், சாரா வேறுவிதமான ஒன்றைக் காட்டினாள், தேவன் நம்முடைய பாவத்தை வெறுத்தாலும், நாம் நினைப்பதற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம்மை தனது விரிந்த கரங்களுக்குள் அழைக்கின்றார், நாம் அவரை விட்டு ஓடிப் போகத் தேவையில்லை.
கடலில் தோன்றிய மெல்லிய பிரகாசம்
“பழைய மதுபானத்தாலும், விரக்தியாலும் நிறைந்தவனாய் நான் படுக்கையில் படுத்திருக்கின்றேன், இந்த அண்டத்தில், நீண்ட நாட்களாக ஒரு துளி வெளிச்சத்தையும் காணாமல், தனிமையில் இருக்கின்றேன்” என்று ஓர் அரசாங்கத்தின் ரகசிய ஏஜென்டாகப் பணிபுரியும் ஒரு பிரசித்தி பெற்ற நபர், தன்னுடைய வேலையில், ஒரு சோகமான மாலைப் பொழுதைக் குறித்து எழுதுகின்றார்.
இந்த நிலையில், அவரது மனதுக்கு எது சரியென்று தோன்றியதோ அதைச் செய்ய முற்பட்டார். அவர், தன்னை மூழ்கடிக்க நினைத்தார். அருகிலுள்ள கடற்கரைக்கு காரை ஓட்டிச் சென்றார், தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழக்கும் வரை நீண்ட தூரம் நீந்திக் கொண்டிருந்தார், திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தார், தூரத்தில் தெரிந்த கடற்கரையில் வெளிச்சத்தைக் கண்டார். அந்த வேளையில் என்ன காரணத்திற்காக என்பதை அறியாமலேயே, அந்த ஒளியை நோக்கி நீந்த ஆரம்பித்தார். அவருடைய சோர்வின் மத்தியில் “ஓர் அடக்க முடியாத மகிழ்ச்சியை” அவர் உணர்ந்தார்.
முகெரிட்ஜ்(Muggeridge) என்ற அவர், அது எப்படி நடந்தது என்பதை அறியாவிட்டாலும், அந்த இருண்ட வேளையில், தேவன் அவரைச் சந்தித்தார் என்பதை மட்டும் நன்கு உணர்ந்தார், அவருக்குள், இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையை உணர்ந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் இத்தகைய ஒரு நம்பிக்கையைக் குறித்து அடிக்கடி எழுதுகின்றார். கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன்பு நாம் அனைவரும் “(நம்முடைய) அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாய், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்” இருந்தோம் (எபே.2:1,12), ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வ.4-5).
இந்த உலகம் நம்மை ஆழத்தினுள் இழுத்துச் செல்கின்றது, ஆனாலும், நாம் விரக்திக்குள் அமிழ்ந்து போகத் தேவையில்லை. முகெரிட்ஜ், தான் கடலில் நீந்திய அநுபவத்தைக் கூறும் போது, “இருள் என்பதேயில்லை என்பதை நான் நன்கு தெளிவாகப் புரிந்து கொண்டேன், நித்தியமாக வீசிக்கொண்டிருக்கும் ஒளியை நாம் காணத்தவறுவதே அதற்குக் காரணம்” என்றார்.
எப்படி காத்திருப்பது?
ஆலயத்தைக்குறித்து விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த, பதினேழு வயது நிரம்பிய தாமஸ், அநேக ஆண்டுகளாக வைத்திருந்த கேள்விகளுக்கு விடையைத் தேடினான். அவனுடைய தேடலின் பயனாக, அவனுடைய ஏக்கங்களுக்கு தீர்வோ அல்லது அவனுடைய கேள்விகளுக்கு பதிலோ கிடைக்கவில்லை.
அவனுடைய பயணம், அவனை அவனுடைய பெற்றோருக்கு அருகில் கொண்டுவந்தது. ஆயினும் அவனுக்குள் கிறிஸ்தவத்தைக் குறித்து அநேக சந்தேகங்கள் இருந்தன. ஒரு சம்பாஷணையின் போது, அவன், “வேதாகமம் முழுவதும் வெறுமையான வாக்குத்தத்தங்களால் நிறைந்திருக்கின்றது” என்று வருத்தத்தோடு கூறினான்.
மற்றொரு மனிதன் ஏமாற்றத்தையும், கஷ்ட நேரத்தையும் சந்தித்தபோது, இவனுடைய சந்தேகங்களை இன்னும் தூண்டியதைப்போல ஆயிற்று. ஆனால், தன்னைக் கொல்ல நினைத்த எதிரிகளிடமிருந்து தப்பி ஓடிய தாவீது, தேவனை விட்டு ஓடிவிட எண்ணவில்லை, மாறாக அவன் தேவனைத் துதித்தான். “என் மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாய் இருப்பேன்” (சங்.27:3) என்று பாடுகின்றார்.
ஆயினும், தாவீதின் பாடல், அவனுக்குள் இருந்த சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றது. அவன், “எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச் செய்யும்” (வ.7) என்று கதறுகின்றான், இது பயத்தால் நிறைந்த மனிதனின் கேள்விகளைப் போன்று உள்ளது. “உமது முகத்தை எனக்கு மறையாதேயும்,…… தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (வ.9) என்று கெஞ்சுகின்றான்.
தாவீதின் சந்தேகங்கள் அவனை முடக்கி விடவில்லை. அந்த சந்தேகங்களின் மத்தியிலும், “நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்” (வ.13) என்கின்றான். பின்னர், அவர் வாசகர்களை நோக்கி: உன்னையும், என்னையும், இவ்வுலகில் தாமஸ்ஸைப் போன்றுள்ளோரையும் நோக்கி, “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (வ.14) என்கின்றார்.
நம்முடைய பெரிய கேள்விகளுக்கு உடனடியாக, எளிய பதில் வரும் என எதிர் பார்க்க முடியாது. ஆனால், நாம் தேவனுக்கு காத்திருக்கும் போது, பதில் நிச்சயம் வரும். அவர் நம்பிக்கைக்குரிய தேவன்.