அறிந்து செயல்படல்
சீன தத்துவஞானி ஹான் ஃபீஜூ, “உண்மையை அறிந்து கொள்வது எளிது, ஆனால் அந்த உண்மையின்படி எப்படிச் செயல்படவேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்” என்று வாழ்க்கையைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட பிரச்சனையோடு ஓர் ஐசுவரியவான் ஒரு முறை இயேசுவிடம் வந்தான். அவன் மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்தவனாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றை ஒழுங்காகக் கைக்கொள்ளுபவனாகவும் இருந்தான் (மாற். 10:20). இதற்கும் மேலாக, இயேசு என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்பதை அறிய மிக ஆவலோடு இருந்தான், “நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான்…
நீண்டதூர ஜெப மராத்தான்
எந்தவித தடையுமின்றி உங்கள் ஜெபவாழ்க்கையில் தரித்திருக்க நீங்கள் போராடுகிறீர்களா? நம்மில் அநேகருக்கு அப்படிப்பட்ட அனுபவம் உண்டு. ஜெபம் மிகவும் முக்கியமானது என்று நாம் அறிவோம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதையும் நாம் அறிவோம். நமது ஜெபங்களில், சில நேரங்களில் தேவனோடு மிக ஆழமான தொடர்பு உடையவர்களாக இருப்போம்; சில சமயங்களில் நமது ஜெபம் ஏதோ மேலெழுந்த வாரியாக உள்ளது என்பதை உணர்வோம். நமது ஜெபங்களில் நாம் ஏன் இவ்விதமாக போராடவேண்டும்?
விசுவாச வாழ்க்கை என்பது ஒரு தொலைதூர ஓட்டப்பந்தயம். நம்முடைய…
இயேசு கண்ணீர்விட்டார்
நான் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது என் சிநேகிதி ஒருத்தி, நான் அப்படி என்ன வாசிக்கிறேன்? என்று குனிந்து உற்று நோக்கினாள். அவள் திகிலடைந்தவளாய் என்னைத் திரும்பிப்பார்த்து, “என்ன பயங்கரமான தலைப்பு?” என்று கூறினாள். நான் கிரிம் எழுதிய தேவதைகள் செயல்படும் கட்டுக்கதையாகிய “கண்ணாடி சவப்பெட்டி” என்ற கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சவப்பெட்டி என்ற வார்த்தை அவளைக் கலக்கத்திற்குள்ளாக்கியது. நம்மில் அநேகருக்கு மரணத்தைப் பற்றி நினைவுகூர்வது ஓர் விரும்பப்படாத காரியம். உண்மையாதெனில் 1000 பேர் வாழ்ந்தால், 1000 பேரும் மரித்துதான் போவார்கள்.…
நான் யாருக்காக உழைக்கிறேன்?
ஹென்றி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்கிறார். அவருடைய பணியை மனநிறைவுடன் செய்கிறார். தன் குடும்பத்திற்குத் தேவையான சிறந்த பொருட்களை வாங்கத் தேவையான பணத்தை தன் சம்பளமாகத் தன் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். தன் வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று பல முறை தீர்மானித்தும் அதை அவர் நடைமுறைப் படுத்தவில்லை. ஒரு நாள் மாலை தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு தனக்கு பதவி உயர்வு கிடைத்த நற்செய்தியுடன் தன் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் யாருமே இல்லை காலப்…
மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தல்
ஒரு பத்திரிக்கையாளர் நீல நிறத்தில் எழுதும் பேனாக்களை பயன்படுத்தாத ஒரு விசித்திரமான பழக்கத்தை உடையவராக இருந்தார். ஆகவே அவருடன் பணி செய்த ஒருவர், கடையிலிருந்து அவருக்காக ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்ட பொழுது, சில பேனாக்களை வாங்கி வரும்படி கேட்டார். “ஆனால் நீல நிற மைப் பேனாக்கள் வேண்டாம். ஏனெனில் நீல நிறம் எனக்கு பிடிக்காது. நீல நிறம் சலிப்பூட்டும் தன்மையுள்ளது. ஆகவே நீல நிறப் பேனாக்களை தவிர்த்து 12 பால்பாயின்ட் பேனாக்கள் வாங்கி வாருங்கள்” என்று கூறினார். அடுத்த நாள்…
பாட்டியம்மாவின் சமையல் குறிப்பு
அநேக குடும்பங்கள் அவர்களுக்கே உரிய இரகசியமான சமையல் குறிப்புகளை வைத்திருப்பார்கள். அக்குறிப்புகளை பயன்படுத்தி சிறப்பான முறையில் உணவை மிகவும் ருசியாக சமைப்பார்கள். சீனாவில் ஹக்காஸ் என்ற குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த எங்களுக்கு பாரம்பரியமான உணவாக அபாக்கஸ் மணிகள் என்ற ஓர் உணவு உண்டு அவை உருண்டையான குமிழ் மணிகளைப் போல இருப்பதால் அப்பெயர் பெற்றது. உண்மையில் நீங்கள் அதை ருசிபார்க்க முயற்சி எடுங்கள்.
ஆமாம், எங்களது பாட்டி மிகச்சிறந்த சமையல் குறிப்பு வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சீன புத்தாண்டின் பொழுதும் குடும்பக்கூடுகை நடக்கும். அப்பொழுது “இதை…
விசுவாசத்தின் குரல்
கேட்ட செய்தி மரத்துப்போகச் செய்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல கேள்விகள் எழுந்தன. பயம் அவளை ஆட்கொண்டு அச்சுறுத்தியது. இதுவரை வாழ்க்கை சுமுகமாகப் போய் கொண்டேயிருந்தது. ஆனால், திடீரென கஷ்டம் ஏற்பட்ட பொழுது எந்தவித அறிவிப்புமின்றி நிரந்தர மாற்றம் ஏற்பட்டது.
சோகமான காரியங்கள் பலவிதங்களில் நம்மைத் தாக்குகிறது - நாம் நேசிக்கும் ஒருவரின் இழப்பு, வியாதி – செல்வத்தை இழத்தல், அல்லது நமது வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவை. இது யாருக்கும், எந்த சமயத்திலும் நேரிடலாம்.
ஆபத்து வரப்போவதை ஆபகூக்…
அவர் பதிலளிப்பார்
என்னுடைய அபிமான கொரிய சினிமா நட்சத்திரத்தின் ட்விட்டர் பக்கத்திற்கு வந்த பொழுது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு குறிப்பு எழுத முடிவு செய்தேன் என்னால் இயன்ற அளவு ஒரு சிறப்பான செய்தியை பதிவு செய்து பதிலுக்காக காத்திருந்தேன். நான் ஒரு பதிலைப் பெறுவேன் என்பது சாத்தியமற்றது என்று எனக்குத் தெரியும். ஏனெனில், அவரைப் போன்ற பிரபலமான ஒரு நடிகைக்கு ஒரு நாளில் அநேக ரசிகர்களிடமிருந்து செய்தி வரும் என்று தெரியும். இருப்பினும், எனக்குப் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
நல்லவேளை,…
ஆர்வம் இல்லாமையை தவிர்த்தல்
நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வேலைகளை முடிக்க அழகிய சேலைகளைக் கட்டிய பெண்கள், அங்கும் இங்கும் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அந்த அறை முழுவதும் மனதை ஈர்க்கக் கூடிய பலவர்ண நிறங்களால் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் முன்பு இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்களது சொந்த நாட்டைப் பற்றிய கரிசனையுடன் இருந்தார்கள். இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு கிறிஸ்தவ பள்ளியின் பொருளாதாரத் தேவையைப்பற்றி கேள்விப்பட்டதோடு நின்று விடாமல், அப்பள்ளியின் தேவையைச் சந்திக்க முழு மனதோடு செயல் பட்டார்கள்.…