Forgiveness Day5
முதல் அடியை எடுத்துவைத்தல்
தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். - 2 கொரிந்தியர் 5:19
தாம் டேஷீ தன் வாழ்வில் ஏதோ ஒரு குறையுள்ளதாக உணர்ந்தார். எனவே அவர் ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அதே ஆலயத்திற்குத்தான் அவருடைய மகளும் செல்வது வழக்கம். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து சென்றதில்லை. முந்திய நாட்களில் அவர் தன் மகளைக் காயப்படுத்தியிருந்தார். அது அவர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டது. எனவே அவர் ஆலயத்தில் பாடல் வேளை ஆரம்பித்தப்பின் தான் உள்ளே…
Forgiveness Day4
மன்னிக்கும்படி ஒரு ஜெபம்
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். - லூக்கா 6:27-28
1960 ஆம் ஆண்டு, ஆறு வயதாயிருந்த ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தை, தென் அமெரிக்காவிலுள்ள வெள்ளையரின் அனைத்து ஆரம்பநிலைப் பள்ளியை கலப்பினப் பள்ளியாக ஒருங்கிணைத்த முதல் குழந்தையாகும். கோபமான பெற்றோர் கூட்டத்தின் சாபக் குரல்களையும், பயமுறுத்தலையும், அவமானங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் ரூபி பள்ளிக்குச் செல்ல உள்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கினர். பள்ளியினுள் பாதுகாப்பாக, ஒரு…
Forgiveness Day3
நான் மன்னிக்க வேண்டுமா?
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். - கொலோசெயர் 3:13
ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’ (vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.
ஆனால், தேவன் என்னை எவ்வளவாக…
Forgiveness Day2
ஏன் மன்னிக்க வேண்டும்?
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள் - லூக்கா 23:34
என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தபொழுது மன்னிக்க வேண்டியதின் அவசியத்தை நான் அறிந்திருந்தும் அவளை என்னால் மன்னிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் அவளுடைய வார்த்தைகள் என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஊடுருவிச்சென்று என்னை வேதனையினாலும் கோபத்தினாலும் நிலைகுலையச் செய்தது. பின்பு இதைக்குறித்து நாங்கள் பேசினபொழுது, அவளை நான் மன்னித்து விட்டதாகக் கூறினேன். ஆனாலும்…
Forgiveness Day1
மன்னிக்கும் கலை
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் - லூக்கா 15:20
ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு…
Tamil Quarterly Subscription
If you would like to fill this form in English, please click here.
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் நமது அனுதின மன்னா தியான நூல் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நீங்கள் கடவுளிடம் நெருங்கி வருவதன் மூலம் உங்கள் விசுவாசத்தில் வளர உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
நமது அனுதின மன்னா காலாண்டு பதிப்பு தமிழில் அஞ்சல் மூலம் பெற கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும்.
[contact-form-7 id="168630" title="Subscriptions TA (IN)"]
நமது அனுதின மன்னா தமிழ்…