நமது நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வருதல்
எனது சிறு பிள்ளைப்பிராயத்தில் உலகை மிகவும் அச்சுறுத்தக் கூடிய வியாதி “போலியோ” என்ற இளம் பிள்ளைவாதமாகும்.” ஏனெனில் அதனால் அதிகமான அளவு சிறுபிள்ளைகள் தான் பாதிக்கப்பட்டார்கள். 1950களின் மத்தியில் போலியோவிற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 20,000 பேர் போலியோவினால் பாதிக்கப்பட்டதோடு, ஏறக்குறைய 1000 பேர் அதனால் ஒவ்வொரு ஆண்டும் மரித்தார்கள்.
ஆதிக்காலத்தில் திமிர்வாதம் என்பது குணமாக்க இயலாத நிரந்தரமான நம்பிக்கையற்ற நிலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கூட்ட மக்கள் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவர்களது சிநேகிதனை…
என்னுடைய கவனம் எங்குள்ளது
2011ம் ஆண்டு செப்டம்பர் மாத துவக்க நாட்களில் மத்திய டெக்ஸாசிலுள்ள பாஸ்ட்ராப் என்ற நகரிலும், அதைச் சுற்றிலுமிருந்த 600 வீடுகளை பயங்கரமான காட்டுத்தீ அழித்து நிர் மூலமாக்கிவிட்டது. சில வாரங்கள் கழித்து ஆஸ்டின் அமெரிக்கன் ஸ்டேட்மேன் என்ற பத்திரிக்கையில் “அநேகத்தை இழந்த மக்கள், இழக்காத பொருட்கள்மீது கவனத்தைச் செலுத்தினார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை, சமுதாயத்தினர் தாராளமாய்ச் செய்த உதவிகளையும், உதவி பெற்றோர், தாங்கள் இழந்தவற்றைவிட, உதவிய அயலகத்தார் நண்பர்கள், சமுதாயத்தினரை அதிக மேன்மையாகக் கருதினர்.
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்…
தேவனுடைய வழி
100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின்போது, Y.M.C.A. சார்பாக பிரிட்டனின் நேச நாடுகளின் படைவீரர்களுக்கு போதகராகப் பணியாற்ற 41 வயதுடைய ஆஸ்வால்டு சேம்பர்ஸ் எகிப்திற்கு சென்றார். கெய்ரோவிற்கு 6 மைல் தூரம் வடக்கே இருந்த செய்டூன் முகாமில் பணி செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு தங்கி இருந்து முதல் நாள் இரவு, அதாவது 1915, அக்டோபர் 27ம் தேதி அன்று “இங்குள்ள படைவீரர்கள் உள்ள பகுதி பாலைவனம் போன்று உள்ளது. தேவனுக்கென்று பணிசெய்ய மிகச்சிறந்த சந்தர்ப்பம். இது போன்ற சூழ்நிலையில் நான் ஒருபொழுதும்…
ஒவ்வொரு வினாடியும் முக்கியம்
24 மணிநேரத்தை ஒரு நாளுக்குள் அடக்கினால் “70 ஆண்டு வாழும் சாதாரண வாழ்க்கை இப்பொழது எனது வாழ்க்கையில் மாலை 8:30 மணி நேரமாக இருக்கும். காலம் வெகு வேகமாக கடந்துபோகிறது” என்று எனது 59 வயது சிநேகிதன் பாப் போர்ட்மேன் எழுதினான். இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்ற உண்மை “டிக்கர்” என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுத்தது. நேரத்தை காண்பிக்கும் அந்தக்கடிகாரம் இந்த உலகில் நீங்கள் வாழ இருக்கும் காலத்தை கணக்கிட்டு உங்களது வாழ்க்கையில் எஞ்சியுள்ள காலத்தைக் கணக்கிட்டுக் கூறும்.…
அதைக் கொடுத்து விடுங்கள்
பலவிதமான தேவையிலுள்ள ஏழைமக்களுக்கு உதவிசெய்யும் அநேக தொண்டு நிறுவனங்கள், தங்களது தேவைக்கும் அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு தேவையற்ற துணிமணிகள், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் போன்ற நன்கொடைகளையே சார்ந்துள்ளார்கள். நமக்குப் பயன்படாத பொருட்களை பிறருடைய பயன்பாட்டுக்கு கொடுத்துவிடுவது நல்லது. ஆனால் நாம் அனுதினமும் பயன்படுத்தும் விலையுயர்ந்த பயனுள்ள பொருட்களை கொடுக்க பொதுவாக மனதில்லாமல் இருப்போம். பவுல் சிறைச்சாலையிலிருந்த பொழுது நம்பக் கூடிய சிநேகிதர்களின் ஊக்கமும், உறவும் தேவைப்பட்டது. ஆனாலும் அவருக்கு மிக நெருங்கிய இரு சிநேகிதர்களை பிலிப்பு பட்டணத்திலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய…
விடிகாலை 2 மணி சிநேகிதர்கள்
கிறிஸ்துவுக்குள்ளான ஆழமான விசுவாசத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழு மக்களைப் பற்றி என் சிநேகிதன் என்னிடம் கூறினான். “யாருக்காவது ஏதாவது அவசரமான உதவி தேவை என்று நான் எண்ணினால், தயக்கமில்லாமல் உங்களில் யாரையாவது அதிகாலை 2 மணிக்கு உதவிக்குக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களில் 93 வயது நிரம்பிய ஒரு பெண் கூறினாள். அந்த அவசர உதவி ஒருவேளை ஜெபத்தேவையாகவோ, உதவக்கூடிய செயலாகவோ அல்லது தேவைப்படும் சமயத்தில் யாராவது உதவிக்கு இருக்கவேண்டும் என்ற சூழ்நிலையோ, எதுவாக இருந்தாலும் அந்த விசுவாசக் கூட்டத்திலிருந்த…
தொடரும்
1950களில் வளர்ந்த நான் சனிக்கிழமைகளில் உள்ளுர் திரைப்பட அரங்கில் மதியக் காட்சிகளை அடிக்கடிப் பார்த்து வந்தேன். கேலிப்படங்களோடு, சாகசச் செயல்களில் ஈடுபடும் கதாநாயகி அல்லது கதாநாயகன் பற்றிய திரைப்படத் தொடர்ச்சி காண்பிக்கப்படும். அத்தொடர்கதை எளிதில் முடிவடையாது ஒவ்வொரு வாரமும் “தொடரும்” என்ற வார்த்தைகளோடு முடியும்.
பவுல் அப்போஸ்தலன் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் சூழ்நிலைக்கு புதியவரல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றபொழுது, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அடிபட்டார், கல்லெறியுண்டார், கப்பல் சேதங்களை சந்தித்தார். என்றோ ஒருநாள் அவர் மரிக்கப்போவதை அவர் அறிந்திருந்தார்.…