முக்கியமான ஞாபகமூட்டிகள்
மனித வர்க்க ஆராய்ச்சியாளர் அந்தோனி கிரேஸ்ச், குளிர் சாதனப்பெட்டியின் வெளிப்பகுதி, மக்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குடும்பங்களை ஆராய்ச்சி செய்தபொழுது, கிரேஸ்சும், அவர் உடன் பணியாட்களும் அறிந்து கொண்டது என்னவெனில் - பள்ளிக்கூட நிகழ்ச்சி அட்டவணை, குடும்ப புகைப்படங்கள், சிறுவர்கள் வரைந்துள்ள படங்கள், காந்தங்கள் போன்று குறைந்த பட்சமாக 52 பொருட்கள் குளிர்சாதனப் பெட்டியின் மேல் ஓட்டப்பட்டிருந்தன என்று கணக்கிட்டனர். எனவே கிரேஸ்ச் குளிர்சாதனப்பெட்டியை “ஓர் குடும்பத்தின் ஞாபகார்த்த களஞ்சியம்” என்று கூறுகிறார்.…
நம் வாழ்க்கை முறை
இக்காலத்து வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூறிய சொற்றொடரை, ஒருவர் மேற்கோள் காட்டிய பொழுது அதிர்ச்சிக்குள்ளானேன். “நம் வாழ்க்கை முறை” என்ற சொற்றொடரைப்பற்றி கூகுளில் நான் தேடிப்பார்த்த பொழுது, மக்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை முறைகள் அச்சுறுத்துபவைகளாக இருப்பதைத் தாங்கள் உணர்வதை மையமாகக் கொண்டே அநேக பதில்கள் கூகுளில் காணப்பட்டது. அவ்வாறு உணரப்பட்ட அச்சுறுத்தல்கள் சீதோஷ்ணநிலை மாற்றம், தீவிரவாதம், அரசாங்கத்தின் அரசியல் போக்கு ஆகியவை ஆகும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய, உண்மையில் நமது வாழ்க்கை முறை உண்மையில் எப்படிப்பட்டது? வசதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையா? அல்லது இன்னும்…
தோல்வியா அல்லது வெற்றியா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ம் நாள் வாட்டாலூ யுத்தம் நினைவுகூரப்படும் நாள். அன்றைய வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம். 1815ம் ஆண்டு அன்றைய நாளில் நெப்போலியனின் பிரெஞ்சுப்படை, வெல்லிங்டன் பிரபு நடத்திச் சென்ற பன்னாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது. “உங்களை விட பலமுள்ளவர்களால் நீங்கள் தோற்கடிக்கப்படும் பொழுதோ அல்லது உங்களால் எதிர்கொள்ள முடியாத மிகக் கஷ்டமான பிரச்சனையை நீங்கள் சந்திக்கும்பொழுதோ” அவற்றைக் குறிக்க “உங்கள் வாட்டர்லூவை சந்திக்க” என்ற சொற்றொடர் அப்பொழுதிலிருந்து பழக்கத்திற்கு வந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும்பொழுது, இறுதியாக தோல்வி என்பது…
சோர்ந்து போகிறவனுக்கு பெலன்
சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல - எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற…
நம்மைப் போலவே நடந்தார்
டேவிட் டில்லர்ட், அவருக்குக் கீழாகப் பணி புரியும் இளம் கட்டிடக் கலைஞர்களிடம் அவர்கள், யாருக்கு வீடுகளை வடிவமைக்கிறார்களோ அவர்களோடு போய் தங்கி இருக்க அனுப்புவார். அவர்கள் மூத்தகுடிமக்கள் வாழும் இடத்திற்குச் சென்று அங்குள்ள 80, 90 வயதுள்ளவர்களைப் போலவே பைஜாமா அணிந்து கொண்டு, அவர்கள் வாழும் சூழ்நிலையிலேயே அவர்களைப் போலவே 24 மணி நேரம் வாழ்வார்கள். காது கேளாதவர்களைப்போல இருக்க அவர்களது காதுகளை மூடக்கூடிய காது கேட்க உதவும் கருவிகளை பொருத்திக் கொள்வார்கள். விரல்களின் வேலை செய்யும் திறனைக்குறைக்க அவர்களது விரல்களை ஒட்டும் நாடாவினால்…
எப்பொழுதும் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறோம்
அனுபவம் மிகுந்த செய்தி தொகுப்பாளரான ஸ்காட் பெல்லி, அவரது பணியின் நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது, ஒரு சிற்றலை ரேடியோ, காமெரா உடைக்க இயலாத கைப்பெட்டி, மடிக்கணினி, கைபேசி மேலும் அவசரகாலத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் அவரது இருப்பிடத்தை அறிவிக்கக்கூடிய ரேடியோ அலைகளை பரப்பும் கருவி ஆகியவைகள் இல்லாமல் எந்த ஒரு பயணத்தையும் மேற்கொள்ள மாட்டார். “இந்த ரேடியோ அலைகளை பரப்பும் கருவியின் அன்டனாவை இழுத்துவிட்டு, இரண்டு பொத்தான்களை அழுத்தினால் தேசியகடல் சார்ந்த, வளி மண்டலம் சார்ந்த காரியங்களை கவனிக்கும் நிர்வாகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டுள்ள செயற்கை…
இதற்கு மேலான சந்தோஷம் இல்லை
பாபும், இவான் பாட்டரும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உண்டு. திடீரென அவர்களது வாழ்க்கையில் ஆச்சரியமான ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1956ம் ஆண்டு ஓக்லஹோமா நகரத்தில் நடந்த பில்லி கிரஹாமின் சுவிசேஷ கூட்டத்திற்குச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் இருவரும் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். வெகுவிரைவில், அவர்கள் அறிந்துகொண்ட சத்தியத்தையும், அவர்களது விசுவாசத்தையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் வேதாகமத்தை கற்றுக்கொள்ள விரும்பும் உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தார்கள். என்னுடைய…
குழப்பத்திற்கும் மேலானவர்
பழைய ஏற்பாட்டில் 2 சாமுவேலின் புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவெனில் “வாழ்க்கை என்பது ஓர் குழப்பம்.” இக் கருத்து தொலைக்காட்சியில் வரும் குறுந்தொடர் மினி சீரியலின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இஸ்ரவேலின் அரசனாக தன் ஆட்சியை அங்கு நிறுவுவதற்கு தாவீது முயற்சித்த பொழுது அநேக இராணுவ சவால்களையும், அரசியல் சதித்திட்டங்களையும், நண்பர்கள், குடும்பத்தினரால் காட்டிக் கொடுக்கப்படும் காரியங்களையும் சந்தித்தான். தாவீதும் பத்சேபாளிடம் கொண்ட தவறான உறவினால் நிச்சயமாக அவன் குற்றமற்றவன் என்று கூறமுடியாது (2 சாமு 11-12).
ஆனால் 2 சாமுவேல் இறுதி அதிகாரங்களில்…
இன்றைய நாள்
1940ம் ஆண்டு டெக்ஸாஸில் உள்ள அபிலெனில் முதல் பெண் மருத்துவரான 27 வயதுள்ள டாக்டர். வெர்ஜீனியா கோனலி பல எதிர்ப்புகளையும், விமரிசனங்களையும் தைரியத்துடன் சந்தித்தார். 2012ம் ஆண்டு அவருடைய 100வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸ் மருத்துவச் சங்கம் அவருடைய புகழ்மிக்க சேவைக்காக டெக்சாஸின் மதிப்பு மிக்க மருத்துவர் என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. இந்த இரு குறிப்பிடத்தக்க கால கட்டங்களுக்கிடையே கோனலி, மிகவும் உற்சாகத்துடன் உலகமுழுவதும் சுவிசேஷத்தை பரப்பும் தாகத்தைப் பெற்றவராய், மருத்துவப் பணிப் பயணங்களை மேற்கொண்டு சேவையையே தன்…