தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்
1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள்…
சொல்லும் செயலும்
எனது கல்லூரியில் எழுதும் பயிற்சி வகுப்பிலிருந்த ஒரு மாணவனிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவசரத் தன்மையை வெளிப்படுத்தினது. கல்லூரியின் இறுதிப்பருவத்திலிருந்த அவனுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சற்று உயர்ந்த மதிப்பெண்கள் தேவை என்பதை உணர்ந்தான். அதற்கு அவன் என்ன செய்ய இயலும், செய்ய வேண்டிய பாடசம்பந்தமான சில வேலைகளை அவன் செய்யத் தவறி இருந்தான். ஆகவே அவனுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து விடுபட்ட வேலையை முடிக்கக் கூறினேன். “நன்றி அதனை உடனே செய்கிறேன்” என்று மாறுத்தரம் கூறினான்.
இரண்டு நாட்கள்…