இப்பொழுதே அந்த நாள்
நர்சரி வகுப்பில் படிக்கும் என் பேத்தி மேகியும் கிண்டர்கார்டன் படிக்கும் அவளது சகோதரி கேட்டியும் சில போர்வைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றனர். அங்கு போர்வையால் கூடாரம் அமைத்து அதில் விளையாட முயன்றனர். கொஞ்ச நேரம் கழித்து மேகி தனது தாயாரை அழைக்கும் சத்தம் கேட்டது.
“அம்மா, இங்கே சீக்கிரம் வாங்க!” என கத்தினாள். “நான் இயேசுவை எனது உள்ளத்தில் அழைக்க விரும்புகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள்” என்று பின்பு கூறினாள். விளை யாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென அவள் தன் வாழ்விற்கு இயேசு மிகவும் தேவை என்பதை உணர்ந்து அவர் மேல் அவளது விசுவாசத்தை வைக்க முடிவுசெய்தாள்.
இயேசுவை விசுவாசிக்க உதவியை நாடிய மேகியின் அவசர தொனியில் ஒலித்த குரலானது
2 கொரிந்தியர் 6ல் பவுல் இரட்சிப்பை பற்றிக் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேசியாவாகிய கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் வந்துவிட்டார் என்றும், அவரது மரணமும், உயிர்த்தெழுதலின் மூலமும், “அநுக்கிரக காலம்” ஆரம்பித்ததை குறித்தும் போதித்து வந்தார். நாம் அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இன்று இரட்சிப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) என்று அவர் கூறினார். யாரெல்லாம் பாவமன்னிப்பிற்காக இயேசுவை இன்னும் விசுவாசிக்க வில்லையோ, உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகச் சீக்கிரமாக இந்த முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.
ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கான தேவையை உங்கள் உள்ளத்தில் தோன்றச் செய்திருக்கலாம். மேகியைப் போல் நீங்களும் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவண்டை ஓடி வாருங்கள். இன்றே அந்த நாள்.
சுற்றிச் சூழ்ந்த ஒலி
சினிமாவில் இசையைக் கேட்பதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் (Walt Disney Studios) அறிமுகம் செய்தது. அது எத்திசையிலும் எழும்பும் ஒலி அல்லது சூழ் ஒலி (Stereophonic sound) என கூறலாம். சினிமா பார்ப்பவர்கள் இசையை ஒரு புதிய வகையில் கேட்டு ரசிக்க தயாரிப்பாளர்கள் விரும்பியதால், இது உருவாக்கப்பட்டது.
ஆனால் “சுற்றும் சூழ்ந்த ஒலியை” பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் பல 1000 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் கட்டி எழுப்பிய எருசலேமின் மதில் சுவரை பிரதிஷ்டை செய்யும் பொழுது, இந்த முறையை நெகேமியா அறிமுகம் செய்தார். “அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்” (நெகே. 12:31) என்று அவர் விவரிக்கிறார். மதில் சுவரின் தென் பகுதியில் உள்ள குப்பை மேட்டு வாசலில் தொடங்கி, இரண்டு பாடற்குழுவினரும் இடதுபுறமும், வலதுபுறமுமாக பிரிந்து, துதியோடு எருசலேமைச் சுற்றி ஆலயத்தை வந்தடைந்தார்கள் (வச. 31, 37-40).
பாடகற் குழுவினர் ஜனத்தை மிகுதியான சந்தோஷத்திற்குள் நடத்திச் சென்றனர். ஏனெனில், “தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்” (வச. 43).
அவர்களுடைய கொண்டாட்டம், “தூரத்திலே கேட்கப்பட்டது,” சன்பலாத் போன்ற எதிரிகளின் எதிர்ப்பை மேற்கொண்டு, மறுபடியும் மதில் சுவரைக் கட்ட தேவன் செய்த உதவியை எண்ணி அவர்கள் துதி செலுத்தினார்கள். நம்முடைய மகிழ்ச்சி துதியாகப் புரண்டு வரும்படி தேவன் நமக்கு என்ன செய்தார்? நம் வாழ்வில் தேவனுடைய தெளிவான வழிகாட்டுதலா? அல்லது நம்முடைய துயர நேரத்தில் அவர் மட்டுமே அளிக்கக்கூடிய ஆறுதலா? அல்லது நம்முடைய தலைசிறந்த ஈவாகிய இரட்சிப்பா?
ஒருவேளை நம்மால் “சுற்றும் சூழ்ந்த சத்தத்தை” நம் துதியின் மூலம் உண்டாக்க முடியாமல் போகலாம். ஆனால், தேவன் நமக்கு அளித்த “மகிழ்ச்சியில்” களிகூரலாம். அப்படி செய்யும் பொழுது, பிறர் நம்முடைய துதியை கேட்டு, நம்முடைய வாழ்வில் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை அறிந்துக் கொள்வார்கள். !
அழகானது
இரண்டு வாலிபப் பெண்களை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். முதல் பெண் நல்ல பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கிறாள். மற்றொரு பெண்ணோ சக்கர நாற்காலியில் அமர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து செயல் பட முடியாத நிலையில் கட்டுண்டிருக்கிறாள். அந்த சக்கர நாற்காலியில் இருப்பதால் பல மனப் போராட்டங்களையும் உடலில் வலிகளையும், வேதனைகளையும் அடைகிறாள்.
ஆனால் அந்த அழகான இரு பெண்களும் சேர்ந்து இருக்கும் பொழுது ஆனந்தமாக சிரித்து மகிழ்ந்து ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்து அவர்களுக்குள் அமைந்த விலையேறப்பெற்ற நட்பை பார்த்தனர்.
இயேசுவும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை போன்ற மனிதர்கள் மேல் அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டார். வாழ்நாள் முழுவதும் உடற் சுகவீனத்தால் கஷ்டப்படுவர் மீதும், உடல் குறைபாடுகள் உள்ளவர் மீதும், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இயேசு அதிக கவனம் செலுத்தினார். மதத் தலைவர்களால் அலட்சியம் செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மீது எண்ணெய் பூசிய பொழுது அதை அங்கீகரித்து வரவேற்றார் (லூக்:7:39). மற்றொரு சமயத்தில், வேறொரு பெண் அதைப் போலவே செய்த பொழுது அவளது செயலை பலரும் இகழ்ந்து பேசி விமர்சித்தனர். அப்பொழுது இயேசு, “அவளை விட்டுவிடுங்கள்.......... என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (மாற். 14:6) என்றார்.
தேவன் எல்லோரையும் சமமாக மதிப்பிடுகிறார். அவரது கண்களில் ஏற்றதாழ்வுகள் இல்லை. உண்மையில் நமக்கெல்லாம் கிறிஸ்துவின் அன்பும், மன்னிப்பும் தேவை. நம் மீது இருக்கும் எல்லையற்ற அன்பினால் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.
எல்லோரையும் தேவசாயலில் படைக்கப்பட்டவராகவும், அவரது அன்பிற்கு பாத்திரவான்களாகவும் இயேசு பார்ப்பது போல நாம் அனைவரையும் பார்க்கக் கடவோம். ஆகவே நாம் கிறிஸ்துவைப் போல் எல்லோரையும் சமமாக பாவித்து அவரைப் போலவே பிறரது அழகைக் காண அறிந்து கொள்ள வேண்டும்.
அது ஒருக்காலும் தீர்ந்து போவதில்லை
பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.
பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.
நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.
ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.
ஏவியின் தீர்மானம்
ஒரு அமெரிக்க உயர்நிலைப் பள்ளியிலுள்ள பாடகர் குழுவின் 25 வாலிபப் பெண்களில் ஒருத்தியாக ஏவியும் (Evie), ஜமாய்க்கா நாட்டிற்கு சென்று வேறு கலாசாரத்தையுடைய மற்றோரு தலைமுறையினருக்கு தேவனுடைய அன்பைக் காண்பிக்கவும், சாட்சி பகிரவும், பாடவும் பயணித்தாள். ஏவிக்கு அப்பயணத்தின் ஒரு நாள் மிகவும் மறக்கமுடியாததாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் அமைந்தது.
அன்று அப்பாடகர் குழுவினர் ஒரு தனியார் மருத்துவ விடுதிக்கு சென்று பாடவும், அங்குள்ளவர்களை சந்திக்கவும் சென்றனர். அவர்கள் பாடி முடித்த பின்பு ஏவி, அவ்விடுதியில் தங்கியிருந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்தாள்.…
தேவன் பேசுகிறார்
சமீபத்தில் என் மருமகன், என் பேத்தி மேகியிடம் நாம் தேவனோடு பேசலாமென்றும், அவர் அவருடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார் என்றும் விளக்கிக் கொண்டிருந்தார். எனது மருமகன் ஈவிங், சில சமயங்களில் தேவன் வேதவசனங்கள் மூலம் நம்முடன் பேசுவார் என்று சொன்னபொழுது, அவள் எந்தவித தயக்கமுமின்றி: “அவர் என்னிடம் ஒருக்காலும் எதுவும் சொன்னதில்லை. கடவுள் என்னோடு பேசினதை நான் ஒருக்காலும் கேட்டதுமில்லை” என்று மறுமொழி கூறினாள்.
“உன் வீட்டை விற்றுவிட்டு தூரமான தேசத்திற்குச் சென்று அங்குள்ள அனாதைகளை கவனி” என்று நாம் செவியால் கேட்கக்கூடியபடி…
யார் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்?
2016ம் ஆண்டு ரியோ டி ஜெனரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கச் செல்லும் விளையாட்டு வீரர்கள் அந்த ஊரில் எங்கு இருந்தாலும் இயேசுவைக் காணலாம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த ஊரில் 2310 அடி உயரமுள்ள கார்க்வோடா என்ற மலையின் உச்சியில், 100 அடி உயரமுள்ள கிறிஸ்து எனும் மீட்பர் என்ற மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கைகள் இரண்டையும் விரித்தபடி நிற்கும் இந்த பெரிய இயேசுவின் சிலை விரிந்து பரவிக்கிடக்கும் அந்த ஊரின் எந்தப் பகுதியிலிருந்தும், இரவும் பகலும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
கான்கிரீட்டாலும், சோப்புக்கல்லாலும்…
இலகுவான பாதையா?
வாழ்க்கைப் பாதை எப்பொழுதும் கடினமானதே. தேவன் எப்பொழுதும் இலகுவான பாதையிலே நடத்துவார் என்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் பயணிக்கும் பாதை கடினமாகும் பொழுது தேவனிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்.
நீங்கள் எப்பொழுதாவது அவ்வாறு செய்ய நினைத்திருந்தீர்களானால், இஸ்ரவேல் மக்களை நினைத்துக் கொள்ளுங்கள். பல நூறு ஆண்டுகளாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்தபொழுது, தேவன் எளிதான நேர்வழியில் அவர்களை நடத்தவில்லை. “பெலிஸ்தரின் தேசவழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தவில்லை” (யாத். 13:17). அதற்கு மாறாக…
வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்
நான் சிறுவனாக இருக்கும்பொழுது, மாதந்தோறும் குடும்பமாக ஒகாயோவிலிருந்து மேற்கு வர்ஜீனியாவிலுள்ள எங்கள் தாயின் வழி தாத்தா, பாட்டியைப் பார்க்க பயணம் மேற்கொள்வோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் பண்ணை வீட்டின் வாசலை அடைந்தவுடன் எங்கள் பாட்டி லெஸ்டர் “உள்ளே வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்” என்று எங்களை வரவேற்பார்கள். நாங்கள் சிறிது நேரம் வசதியாக உட்கார்ந்து அனைவரையும் ஈர்க்கத்தக்க விதத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறுவார்கள்.
வாழ்க்கை மிக மிக வேகமாக நிற்கக்கூட நேரமின்றி சென்று கொண்டிருக்கலாம். தொழிலையே முக்கியமாகக்…