எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

நீலக்கல் திருச்சபை மணிகள்

நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். 

இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார். 

நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?

தகவலும் ஆதாரமும்

டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தபோது, ​​அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியைப் பற்றி ஏற்கனவே சுமார் பதினான்காயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பது அவரை மிரட்டியது. இந்த அன்புத் தலைவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? தளராத குட்வின் பணியின் விளைவுதான் A Team of Rivals: The Political Genius of Abraham Lincoln. லிங்கனின் தலைமைத்துவ பாணி பற்றிய அவரது புதிய கண்ணோட்டம், அதைச் சிறந்த மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட புத்தகமாக உருவாக்கியது.

அப்போஸ்தலராகிய யோவான் இயேசுவின் ஊழியம் மற்றும் பாடுகள் பற்றிய தமது சுவிசேஷத்தை எழுதுகையில், வித்தியாசமான சவாலை எதிர்கொண்டார். யோவானின் நற்செய்தியின் இறுதி வசனம், "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்." (யோவான் 21:25) என்கிறது. யோவானிடம் அதிகமான காரியங்கள் இருந்தன. 

எனவே யோவானின் உத்தியானது, அவருடைய சுவிசேஷம் முழுவதும் இயேசுவின் "நானே" கூற்றுக்களை ஆதரிக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அற்புதங்களில் (அடையாளங்கள்) மட்டுமே கவனம் செலுத்துவதாகும். ஆயினும்கூட, இந்த உத்திக்குப் பின்னால் இந்த நித்திய நோக்கம் இருந்தது: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது " (வச. 31). மலைபோன்ற ஆதாரங்களில், இயேசுவை நம்புவதற்கு யோவான் ஏராளமான காரணங்களைச் சொன்னார். இன்று அவரைப் பற்றி யாரிடம் சொல்ல முடியும்?

மக்கள் கூட்டம்

தத்துவஞானியும் எழுத்தாளருமான ஹேன்னா அரெண்ட் (1906-75), “சரித்திரத்தில் மனிதர்கள் மிகவும் பலம்வாய்ந்த பேரரசர்களையும் எதிர்த்து அவர்கள் முன்பு தலைவணங்க மறுத்திருக்கின்றனர்” என்று குறிப்பிடுகிறார். மேலும், “அதில் சிலர் மக்கள் கூட்டத்தை எதிர்க்கவும், கலகக்கார கூட்டத்திற்கு முன் துணிச்சலாய் நிற்கவும், ஆயுதமில்லாமல் அவர்களின் வெறித்தனமான செய்கைகளை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றனர்” என்று சொல்லுகிறார். அரெண்ட் ஒரு யூத பெண்மணியாக, அவளுடைய சொந்த தேசமான ஜெர்மனியில் இதை நேரில்  பார்த்திருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப்படுவது என்பது பயங்கரமான ஒரு காரியம். 

பவுல் அப்போஸ்தலரும் அதுபோன்ற ஒரு புறக்கணிப்பை அனுபவித்திருக்கிறார். பரிசேயனாகவும் யூத போதகராகவும் பயிற்சிபெற்ற அவர், உயிர்த்தெழுந்த இயேசுவை சாட்சியிட்டபோது, அவருடைய வாழ்க்கை தலைகீழாய் மாறியது. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும்பொருட்டு தமஸ்குவுக்கு பவுல் கடந்துபோகிறான் (அப்போஸ்தலர் 9). அவருடைய மனந்திரும்புதலுக்கு பின்னர், அவர் தம்முடைய சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்பட்டார். அவர்களால் அவருக்கு நேரிட்ட துன்பங்களை பவுல் தன்னுடைய 2 கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், “அடிகள்” மற்றும் “காவல்கள்” ஆகியவைகள் உள்ளடங்கும் (6:5).  

அந்த புறக்கணிப்பை கோபத்துடனும் கசப்புடனும் கையாளுவதற்கு பதிலாக, அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்பினார். அவர் எழுதும்போது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது... மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3) என்று சொல்லுகிறார். 

தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் வரவேற்கும்போது, நம்முடைய சத்துருக்களையும் அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளட்டும். 

நான் மணி சத்தம் கேட்டேன்

1863 ஆம் ஆண்டு, ஹென்றி வாட்ஸ்வர்த் லாங்பெல்லோ எழுதிய  "கிறிஸ்துமஸ் தினத்தன்று மணியோசைக் கேட்டேன்"  என்ற பாடல், பொதுவான கிறிஸ்துமஸ் பாடலை  போன்றதல்ல. கிறிஸ்துமஸின் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டிய வரிகளில், புலம்பலும், அழுகையும் இருந்தது. "விரக்தியில் நான் தலைகவிழ்ந்தேன், பூமியில் சமாதானம் இல்லையென்றேன், வெறுப்பு வலிதாய் உள்ளதால், அது பூமியிலே சமாதானம் என்ற பாடலை பரிகசிக்கிறது". எனினும் இந்த புலம்பல், நம்பிக்கைக்கு நேரே பயணித்து "தேவன் மரித்துவிடவில்லை, அவர் தூங்கவும் இல்லை, தீமை தோற்று சத்தியம் மேற்கொண்டு, மனுஷர்மேல் பிரியமும் பூமியிலே சமாதானமும் உண்டாகும்" என வாக்குறுதி அளிக்கிறது.

புலம்பலிலிருந்து நம்பிக்கை தோன்றும் இந்த வகையான வேதத்தின் புலம்பல், சங்கீதங்களிலும் காணப்படுகின்றது. சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனக்கு எதிராய் வரும் சத்துருக்களைக் குறித்துப் புலம்புவதில் துவங்குகிறது (வ.1) மேலும், அவனுடைய தேவன் அவனை மறந்துவிட்டது  போல அவனுக்குத் தோன்றியது (வ.2). ஆனால் சங்கீதக்காரன் புலம்பிக்கொண்டே இருக்கவில்லை; தன்னால் முழுவதுமாய் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் தான் நம்புகிற தேவனை நோக்கி, "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." (வ.5) என்று பாடுகிறான்.

நமது வாழ்விலும் புலம்புவதற்கு அநேக காரணங்கள் உண்டு, அவைகளை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அந்தப் புலம்பல் நம்மை நம்பிக்கையின் தேவனுக்கு நேரே நடத்த நாம் அனுமதித்தால், நமது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகும்.

சாக்ரடிக் கிளப்

1941 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சாக்ரடிக் கிளப் என்று ஒன்று நிறுவப்பட்டது. இது கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் மற்றும் அஞ்ஞானவாதிகள் ஆகியோருக்கு இடையே விவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்டது.

ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகத்தில் மார்க்கத்தைக் குறித்த விவாதம் புதியது அல்ல. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சாக்ரடிக் கிளப்பின் பதினைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தவர், சிறந்த கிறிஸ்தவ அறிஞர் சி. எஸ். லூயிஸ். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையானது, கடும் எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடியது என்று அவர் நம்பினார். இயேசுவை நம்புவதற்கு சரியான பகுத்தறிவு ஆதாரம் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

ஒரு விதத்தில், உபத்திரவத்தினால் சிதறிக் கிடக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு பேதுருவின் ஆலோசனையை லூயிஸ் நடைமுறைப்படுத்தியிருக்கக்கூடும், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15). பேதுரு இரண்டு முக்கிய குறிப்புகளை கூறுகிறார்: கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு நேர்த்தியான காரணங்கள் உள்ளன. மேலும் நமது நியாயத்தை “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” முன்வைக்க வேண்டும்.

கிறிஸ்துவை நம்புவது என்பது மார்க்கத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ அல்லது சுய விருப்பமோ கிடையாது. நம்முடைய விசுவாசமானது, சரித்திரப்பூர்வமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரங்களினாலும், சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிப்புகளினாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய ஞானத்தையும் அவருடைய ஆவியின் பெலத்தையும் சார்ந்துகொள்ளும்போது, நம்முடைய மேன்மையான விசுவாசத்தை நம்புவதற்கான காரணங்களை நாம் அறியக்கூடும்.

கோபமான இருதயம்

“குயர்நிகா” என்பது பிக்காசோவின் தலைசிறந்த அரசியல் ஓவியம். 1937ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பானிய பட்டணத்தின் வரைபடம். இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஸ்பானிய புரட்சியின்போது, நாசிச ஜெர்மானிய விமானங்கள் தங்கள் குண்டுகளை இந்த பட்டணத்தில் பரிசோதித்துப் பார்க்க ஸ்பானிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்கை பல உயிர்களைப் பலிவாங்கியது. இந்த அநாகரீகமான யுத்த பயிற்சி உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிக்காசோவின் இந்த ஓவியம், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகத்தைக் கற்பனையாகச் சித்தரித்து, ஒருவர் மற்றவர்களை அழிக்கும் அநாகரீகமான செயல்களைப் பேச்சுப் பொருளாய் மாற்றியது.
அநியாயமாய் இரத்தஞ்சிந்துதல் நடைபெறவில்லை என்று எண்ணுகிறவர்கள், இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூரவேண்டியுள்ளது. “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும்... தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத்தேயு 5:21-22). நிஜத்தில் கொலைசெய்யப்படவில்லை என்றாலும் இருதயத்தில் மற்றவர்களை கொலைசெய்வது சாத்தியம்.
மற்றவர்களை அழிக்கும் அளவிற்கான கோபம் நமக்கு ஏற்படுமானால், நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலும், கட்டுப்பாடும் அத்தியாவசிய தேவை என்பதை உணரவேண்டும். மாம்சீக எண்ணங்கள் ஆவியின் கனிகளால் மாற்றப்படவேண்டும் (கலாத்தியர் 5:19-23). அதன் பின்பு அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நம்முடைய உறவுகளில் வெளிப்படும்.

வீட்டைக் கட்டுதல்

19 ஆம் நூற்றாண்டில், தனிநபர்குடியிருப்பு கட்டும் இந்தியாவின் பெரிய கனவுத்திட்டம் துவங்கியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ராஜபரம்பரை வீடாக அந்தத் திட்டம் நிறைவுபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த வடோதராவிலுள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் அந்த வீடு. இந்த அரண்மனைதான் இந்தியாவிலேயே பெரிய தனிநபர் குடியிருப்பாகும். 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேலான இடம், 170 அறைகள், பராமரிக்கப்பட்ட மொசைக்கற்கள், அலங்கார தொங்குவிளக்குகள், எலிவேட்டர்கள் என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக நம்பப்பட்டது. 

இந்த கட்டிடம் ஒரு "கனவுத்திட்டம்" தான், ஆயினும் மத்தேயு 16 இல் இயேசு தமது சீடர்களிடம் கூறிய கட்டிடத்தைக் குறித்த நோக்கோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. பேதுரு, இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" (வ.16) என்று உறுதிப்படுத்திய பின்னர்; "நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." (வ.18) என்று இயேசு அறிவித்தார். வேதாகம வல்லுநர்கள் அந்தக் "கல்லை" குறித்து பல கருத்துடையவர்களாய் இருந்தாலும், இயேசுவின் நோக்கம் ஒன்றுதான். பூமியின் கடைமுனைமட்டும், அவர் தமது சபையைக் கட்டுவார் (மத்தேயு 28:19–20), உலகெங்கிலும் உள்ள அனைத்து நாட்டவரும், இனத்தவரும் இதில் அடங்குவர் (வெளிப்படுத்தின விசேஷம் 5:9).

இந்த கட்டுமான பணிக்கான விலை? சிலுவையில் இயேசு பலியாகிச் சிந்திய இரத்தமே (அப்போஸ்தலர் 20:28). அவருடைய கட்டிடத்தின் உறுப்பினர்களாக (எபேசியர் 2:21) இம்மாபெரும் விலைக்கிரயத்தால் வாங்கப்பட்ட நாம் அவருடைய அன்பின் தியாகத்தால் பூரித்து இந்த மாபெரும் திட்டத்தில் அவரோடு இணைவோம்.

இறங்குமிடம்

மான் குடும்பத்தை சேர்ந்த, இம்பாலா என்று அழைக்கப்படும் ஒருவகையான மான் இனம், பத்து அடி உயரம், முப்பது அடி நீளம் வரை தாவக்கூடியது. அது வாழும் ஆப்பிரிக்க காடுகளில், இந்த சுபாவம் அதற்கு தேவைதான். ஆனால் மிருகக்காட்சிசாலைகளில் இவ்வகை இம்பாலா மான்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் மதிற்சுவர்களின் உயரம் வெறும் மூன்று அடிதான் இருக்குமாம். இந்த அளவிற்கு உயரம் தாண்டக்கூடிய மான்களை குறுகிய சுவருக்குள் எப்படி அடைத்து வைக்கமுடியும்? இது எப்படி சாத்தியமாகிறது என்றால், இம்பாலா மான்கள் தரையிரங்கும் இடத்தை பார்க்க இயலாவிடில், அது தாவ முயற்சிக்காதாம். மூன்று அடி உயரமுள்ள சுவர்கள், தூரத்தை பார்க்கவிடாமல் அதின் பார்வையை மறைப்பதால், அந்த சுவரின் மறுபக்கத்தில் இருப்பதென்ன என்பது அதற்குத் தெரியாது, அதினால் அது தாவ முயற்சிக்காதாம்.

மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. நாம் அடுத்த அடி எடுத்து வைக்குமுன்னரே விளைவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசுவாச வாழ்க்கையும் சிலவேளைகளில் அப்படியிருக்கிறது. கொரிந்து சபைக்கு பவுல் எழுதும்போது, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:7) என்று நினைவூட்டுகிறார்.

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும்படிக்கு இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அதற்காக அதின் விளைவை நாம் முன்கூட்டியே அறியமுடியும் என்று அர்த்தமல்ல. விசுவாசத்தில் வாழ்வதென்பது, தேவனுடைய சித்தத்தை நாம் அறியமுடியாவிட்டாலும், அவருடைய நன்மையான நோக்கத்தை நம்பி நடப்பதென்பதுதான். வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறும்வேளைகளில் அவருடைய மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைக்கமுடியும். வாழ்க்கை நம்மை எங்கு தூக்கி எறிந்தாலும் “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க” நாடுவோம் (2 கொரிந்தியர் 5:9).