எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

கிறிஸ்மஸ் புதிர்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ள கிறிஸ்மஸ் கேரல் என்ற நாவலின ஆரம்பத்தில் அக்கதையில் வரும் எபினேசர் ஸ்குரூஜ் என்பவருடைய வாழ்க்கை ஒரு புதிராகவே உள்ளது. ஏன் அவர் அற்பப் புத்தியுடையவராக இருக்கிறார்? அவர் எப்படி மிகவும் மோசமான சுய நலக்காரராக மாறினார் என்பது புதிராகவே இருந்தது. பின்பு கதையில் வரும் கிறிஸ்மஸ் உற்சாகம் ஸ்குரூஜின் கடந்தகால அனுபவத்தின் வழியாக அவனை நடத்திச் சென்ற பொழுது அவரது செயல்பாடுகள் பற்றி தெளிவு உண்டாகிறது, மகிழ்ச்சியான வாலிபனாக வாழ்ந்த ஸ்குரூஜ் தன்னலம் வாய்ந்த போலியாக மாற, அவனில் ஏற்பட்ட…

டிரம் அடிக்கும் சிறுவன்

1941ல் எழுதப்பட்ட “டிரம் அடிக்கும் சிறுவன்” கிறிஸ்மஸ் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ஆரம்ப நாட்களில் டிரம்மின் கிறிஸ்மஸ் பாடல் என்று அழைக்கப்பட்டது. அது செக் நாட்டின் பாரம்பரிய கிறிஸ்மஸ் பாடலைச் சார்ந்து மத்தேயு 1-2, லூக்கா 2 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் டிரம் அடிக்கும் சிறுவனைப் பற்றி எதுவும் கூறப்படாவிட்டாலும், கிறிஸ்மஸ் பாடல்கள் ஆராதனையின் உண்மையான அர்த்தம் என்னவென்று விளக்குகின்றன. அந்தக் கிறிஸ்மஸ் பாடலில் கிறிஸ்து பிறந்த இடத்திற்கு வரும்படி மூன்று சாஸ்திரிகள் அந்த சிறுவனைக் கேட்டுக் கொண்டார்கள் அந்த சாஸ்திரிகள்…

கிறிஸ்மஸ் ஓய்வு

நான் சிறுவனாக இருந்தபொழுது பணம் சம்பாதிப்பதற்காக வீடுகளில் செய்தித்தாள் போட்டேன். அது காலை வெளியீடாக இருந்தபடியினாலும், நான் போட வேண்டிய 140 செய்தித்தாள்களையும் அந்தந்த வீடுகளிலே காலை 6 மணிக்கு சேர்க்க வேண்டியதிருந்தாலும், வாரம் 7 நாட்களிலும் நான் அதிகாலை 3 மணிக்கு எழும்ப வேண்டியதிருந்தது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒருநாள் வேறுபட்டதாக இருந்தது. கிறிஸ்மஸ் நாளுக்குரிய காலை செய்தித்தாளை, கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் மாலையே போட்டு விடுவோம். ஆகவே கிறிஸ்மஸ் அன்று மட்டும்தான் நான் மற்றவர்களைப் போல காலையில் நன்றாக உறங்கி…

பகிர்ந்து கொள்ளப்பட்ட துன்பங்கள்

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் முதலாம் உலகப் போரில் இணைந்து போராடிய, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாட்டின் தரைப்படை வீரர்களை கனப்படுத்தும் வகையில் 2015 ஏப்ரல் 25ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு100வது ஆண்டின் நினைவு விழா ஆரம்பமாகும். அந்த இரு நாடுகளும் தனிப்பட்டு போரை சந்திக்க வேண்டிய நிலைமையை இவ்விரு நாட்டின் வீரர்கள் இணைந்து செயல்பட்டதினால் தவிர்க்கப்பட்டதை அந்த நாள் நினைப்பூட்டுகிறது. இரு நாட்டின் வீரர்களும் போரினால் வரும் ஆபத்துக்களை இணைந்தே சந்தித்தனர்.

வாழ்க்கையின் துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற…

சிலுவையும் கிரீடமும்

லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆபி என்ற ஆலயம் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் பெனிடிக்டைன் குழுவைச் சேர்ந்த சமயத்துறவிகள் அனுதினம் வழக்கமாக அங்கு கூடி ஆராதித்து வந்தார்கள். இன்றும் கூட அந்த ஆராதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆபி என்ற அந்த இடம் அநேக புகழ்பெற்ற மனிதர்களை அடக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. 1066ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆங்கிலேய மன்னரும் இங்கு தான் முடி சூட்டப்பட்டு வருகிறார்கள். அதில் 17 மன்னர்கள் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டுள்ளார்கள். எங்கு அவர்களது ஆட்சி துவங்கினதோ…

பின்னடைவிலும் நன்மைகள்

1984 – 2008 வரை நடந்த ஐந்து வேறு, வேறு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த டாரா டோரஸ் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். பின் நாட்களில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அவள் ஏற்படுத்திய சாதனையை அவளே உடைத்தெறிந்தாள். ஆனால் எப்பொழுதுமே பதக்கங்களும் சாதனைகளுமல்ல அவள் ஒரு விளையாட்டு வீரராக காயமடைதல், அறுவை சிகிச்சைக்கு உட்படுதல், போட்டிபோடும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வயதுடைய நிலைமை ஆகிய அநேக தடைகளை அவள் சந்தித்தாள். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே ஒவ்வொரு…

நம்பிக்கை என்ற சிற்றலை

1966ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உயர்பதவியிலிருந்த ராபர்ட் கென்னடி தென் ஆப்பிரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு பயணத்தை மேற்கொண்டார். அங்கு கேப் டவுன் பல்கலைக் கழகத்தில் நிற வெறிக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் புகழ்பெற்ற “நம்பிக்கை” என்ற சிற்றலை என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சில் ஒரு குறிக்கோளுக்காகவோ அல்லது பிறருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது அநீதியை எதிர்த்தோ ஒரு தனிமனிதன் நின்றால் அவன் நம்பிக்கை என்ற சிறு அலையை தோற்றுவிக்கிறான். இதுபோல பல்லாயிரக்கணக்கான சிற்றலைகள் பல்வேறு மையங்களிலிருந்து தோற்றுவிக்கப்படும்பொழுது,…