உன்னைக் குறித்த தேவதிட்டம்
ஆறு ஆண்டுகளாய் ஏக்னஸ் தன்னை ஒரு நேர்த்தியான ஊழியரின் மனைவியாய் மாற்றிக்கொள்வதற்கு பிரயாசப்பட்டார். அவருடைய மாமியாரைப்போன்று (அவரும் போதகரின் மனைவி) தன்னை மாற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் ஒரு ஊழியரின் மனைவியாய் தன்னுடைய எழுத்து திறமையையும் ஓவியத் திறமையையும் வெளிக்காட்ட முடியாது என்று எண்ணி அதை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டாள். அது அவளை தற்கொலைக்குத் தூண்டியது. ஒரு போதகரின் ஜெபத்தினால் அந்த இருளான சூழ்நிலையிலிருந்து அவள் விடுபட்டாள். அவர் அவளுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் 2 மணி நேரம் எழுதக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அதினால் அவள் விழிப்படைந்து, தேவன் அவளுக்குக் கொடுத்த அழைப்பை “முத்திரையிடப்பட்ட நியமனம்” என்று அழைக்கிறாள். அவள் இப்படியாக எழுதுகிறாள், “நான் நானாகவே இருப்பது என்பது – தேவன் எனக்குக் கொடுத்த திறமைகளை சரியாய் செயல்படுத்தும் வழியை கண்டறிவதாகும்.”
அவள் தன்னுடைய அழைப்பை எவ்வாறு தெரிந்துகொண்டாள் என்பதை தாவீதின் பாடல் வரிகள் மூலம் தெரிவிக்கிறாள்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). அவள் தன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, தன்னை தேவன் வழிநடத்துவார் என்று அவர் மீது நம்பிக்கையாயிருந்தாள் (வச. 5). அவளுக்கு எழுதுவதற்கும் ஓவியம் வரைவதற்கும் மாத்திரமல்லாது, மற்றவர்களை தேவனிடத்தில் உறவாடச் செய்வதற்கும் தேவன் வழி செய்தார்.
நாம் அவருடைய பிரியமான பிள்ளைகள் என்பதை மட்டுமல்லாது, நம்முடைய தாலந்துகள் மற்றும் திறமைகள் மூலம் அவருக்கு இன்றும் நேர்த்தியாய் எப்படி ஊழியம் செய்வது என்பதைக் குறித்த “முத்திரையிடப்பட்ட நியமனங்களை” தேவன் வைத்துள்ளார். அவரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது அவர் நம்மை வழிநடத்துவார்.
தேவனிடத்தில் பாதுகாப்பாக இருப்பது
நான் வாலிப வயதானபோது என்னைக் குறித்து நிச்சயம் இல்லாதிருந்ததையும் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும் நினைவு கூர்ந்தேன். என் பிள்ளைகள் வாலிப வயதை அடைந்ததால், நம்முடைய அடையாளத்தை குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதினேன். “நீங்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளும்போது நீங்கள் யாருக்குரியவர்” என்பதை அறிந்துக்கொள்ள வழிநடத்தும் என்று கூறினேன். தேவன் நம்மை உருவாக்கினார் என்று நாம் புரிந்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளும்போது, நாம் யாராயிருக்க நம்மைப் படைத்தாரோ அதிலே நாம் சமாதானமாய் இருக்க முடியும். நாம் அதிகமாய் அவரைப்போல மாற அவர் ஒவ்வொரு நாளும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அடையாளப்படுத்த வேதத்தில் அடித்தளமான பகுதி உபாகமம் 33:12. “கர்த்தருக்குப் பிரியமானவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;. அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.” தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு தேவன் வாக்களித்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாயிருந்தபோது, மோசே தன்னுடைய மரணத்திற்கு முன் இந்த ஆசீர்வாதத்தை பென்யமீன் கோத்திரத்தாருக்கு அறிவித்தான். அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் என்றும் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றும் அடையாளத்தினால் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளத்தை அறிந்துகொள்வது எல்லோருக்கும் - பதின்மை பருவத்தினர், வாழ்க்கையில் நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் நீண்ட வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் - மிக முக்கியமானது. தேவன் நம்மை உருவாக்கினார் என்றும் அவர் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் நாம் புரிந்துக்கொள்ளும்போது நாம் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பைக் கண்டுக்கொள்ள முடியும்.
இயேசுவை பகிர்தல்
டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம்.
பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.
தேவனுடைய உதவியை நாடுதல்
அமெரிக்காவின் ஒரு சிறிய ஊரிலிருந்து உருவாகிய வெட்டுக்கிளிகள், 1800 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தேசத்தின் பயிர்களை நாசம் செய்தது. விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பிடிப்பதற்கு தாரை ஊற்றியும், அதின் முட்டைகளை அடியோடு அழிக்க தங்கள் வயல்களை எரிக்கவும் செய்தனர். பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த மக்கள், தேவனுடைய உதவியை நாடும்பொருட்டு, மாநிலந்தழுவிய ஜெப நாளை ஒழுங்குசெய்ய தீர்மானித்தனர். ஏப்ரல் 26ஐ ஜெப நாளாக ஜனாதிபதி அறிவித்தார்.
எல்லோரும் சேர்ந்து ஜெபித்த பின், தட்பவெப்பநிலை சீராக, முட்டைகளிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் உயிர்பெறத் துவங்கியது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் நான்கு நாட்களில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை அந்த வெட்டுக்கிளிகளை அடியோடு அழித்தது. மக்கள் மீண்டும் சோளம், கோதுமை போன்ற தானியங்களை அறுவடை செய்யத் துவங்கினர்.
யோசபாத் ராஜாவின் நாட்களில் மக்களைப் பாதுகாத்ததற்கு ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. பெரிய இராணுவம் நம்மை நோக்கி வருகிறது என்பதைக் கேள்விப்பட்ட ராஜா, தேவ ஜனத்தை ஜெபிக்கும்படியாகவும் உபவாசிக்கும்படியாகவும் கேட்கிறார். தேவன் தங்களுடைய கடந்த காலத்தில் தங்களை எப்படி காத்துவந்தார் என்பதை மக்கள் நினைவுகூறுகின்றனர். இந்த அழிவு நமக்கு நேரிடும் என்றால், “எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால்” தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிப்பார் என்பதை அறிவோம் என்று யோசபாத் அறிவிக்கிறார் (2 நாளாகமம் 20:9).
எதிரிகளின் கைகளிலிருந்து தேவன் தன்னுடைய ஜனத்தை மீட்டுக்கொண்டார். நம்முடைய இக்கட்டில் அவரை நோக்கி கதரும்போது அவர் நம் ஜெபத்தைக் கேட்கிறார். உங்களுடைய தேவைகள் எதுவாயினும், உறவு விரிசலோ அல்லது அச்சுறுத்தும் எந்த பிரச்சனையோ, ஜெபத்தில் தேவனிடத்தில் முறையிடுங்கள்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை.
திருப்தியின் இரகசியம்
நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.
ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).
நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள்.
உன் விசுவாசத்தைப் பகிர்தல்
அயர்லாந்தில் தங்கியிருந்த எழுத்தாளரும் சுவிசேஷகருமான பெக்கி பிப்பர்ட், தான் செல்லும் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஹீதர் என்ற பெண் பணியாளருக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பினார். ஆனால் ஹீதருக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை. தன் பேச்சை எப்படி துவங்குவது என்று தயங்கிய பெக்கி, அவளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பிற்காய் ஜெபித்தாள்.
ஒரு நாள் அழகு நிலையத்திற்கு சென்ற பெக்கி, அங்கிருந்த மாத இதழைப் புரட்டிக்கொண்டிருக்க, அதில் இடம்பெற்றுள்ள ஒரு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஹீதர், அவள் யார் என்று கேட்க, அது மாடலிங் துறையில் பல ஆண்டுகளாய் இருக்கும் தன்னுடைய சிநேகிதி என்று பெக்கி பதிலளித்தாள். அத்துடன், தன் சிநேகிதி கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சாட்சிகளையும் அவளிடம் தொடர்ந்து சொல்ல, ஹீதரும் ஆர்வத்துடன் கேட்டாள்.
அயர்லாந்தை விட்டு திரும்பிவந்த பெக்கி, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு போக நேரிட்டது. ஆனால் அதற்குள் ஹீதர் பணிமாற்றம் செய்துகொண்டு வேறிடத்திற்கு போய்விட்டாள் என்பதைக் கேள்விப்பட்டாள். பெக்கி, “சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி தேவனிடத்தில் கேட்டேன்; அவர் கொடுத்தார்” என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.
தன் பெலவீனத்தில் பெக்கி, பவுல் அப்போஸ்தலரைப் போல தேவனுடைய உதவியை நாடினாள். பவுலும் தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து தேவனிடத்தில் மன்றாடியபோது, “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்று தேவன் நம்பிக்கைக் கொடுக்கிறார். சிறியதோ அல்லது பெரியதோ, எந்த காரியத்திலும் தேவனைச் சார்ந்து வாழ பவுல் பழகிக்கொண்டார்.
நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களை நேசிக்கும் இருதயத்தை தேவனிடத்தில் கேட்டால், நம்முடைய விசுவாசத்தை அதிகாரப்பூர்வமாய் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
அவருக்கு சொந்தமானவர்கள்
அவளும் அவளது கணவரும் தங்கள் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற்றபோது ஷெபா மகிழ்ச்சியுடன் அழுதாள், தத்தெடுப்பு சட்டப்பூர்வமாகக்கப்பட்டது என்பதை என்னி. இப்போதிருந்து மீனா எப்போதுமே அவர்களின் மகளாக இருப்பாள், என்டென்றும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பாள். ஷெபா சட்ட செயல்முறையை யோசித்தபோது , நாம் இயேசுவின் குடும்பத்தின் அங்கமாகும் போது நடக்கும் "உண்மை பரிமாற்றத்தையும்" அவள் எண்ணினாள்: "இனி நாம் பாவம் மற்றும் முறிவின் பிறப்புரிமையால் இழுக்கப்படாமல்" மாறாக, அவள் தொடர்ந்தாள், தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்போது தேவனுடைய ராஜ்யத்தின் பூரனத்தில் சட்டப்பூர்வமாக நுழைகிறோம்.
அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், ஒரு ரோமானிய குடும்பம் ஒரு மகனைத் தத்தெடுத்தால், அவருடைய சட்டபூர்வமான நிலை முற்றிலும் மாறும். அவனது பழைய வாழ்க்கையிலிருந்த எந்தவொரு கடன்களும் ரத்து செய்யப்படும், மேலும் அவன் தனது புதிய குடும்பத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவான். இந்த புதிய அந்தஸ்து அவர்களுக்கும் பொருந்தும் என்பதை இயேசுவின் விசுவாசிக்கிற ரோமானிய விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார் . இனி ஒருபோதும் அவர்கள் பாவத்திற்கும் கண்டனத்திற்கும் கட்டுப்பட்டவர்களல்ல, ஆனால் இப்போது அவர்கள் “ஆவியின் படி” வாகிறார்கள் (ரோமர் 8: 4). மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (வச. 14-15). அவர்கள் பரலோகத்தின் குடிமக்களாக மாறியபோது அவர்களின் சட்ட நிலை மாறியது.
இரட்சிப்பின் பரிசை நாம் பெற்றிருந்தால், நாமும் தேவனின் பிள்ளைகள், அவருடைய ராஜ்யத்தின் வாரிசுகள், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறோம். பரிசாகிய இயேசு தன்னை தான் பலியாக கொடுத்ததின் மூலம் நம் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாம் இனி பயத்திலோ அல்லது கண்டனத்திலோ வாழத் தேவையில்லை.
எங்கள் இதயங்களில் வசிப்பது
சில சமயங்களில் குழந்தைகளின் வார்த்தைகள் தேவனின் சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மைத் தூண்டக்கூடும். என் மகள் இளமையாக இருந்தபோது ஒரு நாள் மாலையில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உன்னத இரகசயத்தை பற்றி அவளிடம் சொன்னேன் - தேவன் தம்முடைய குமாரன் மற்றும் ஆவியின் மூலமாக அவருடைய பிள்ளைகளுள் வாசம்செய்கிறார். நான் அவளை படுக்கையில் கட்டிக்கொண்டபோது, இயேசு அவளுடனும் அவளுக்குள்ளும் இருப்பதாக சொன்னேன். "அவர் என் வயிற்றில் இருக்கிறாரா?" என்று அவள் கேட்டாள். "உன்மையில், நீ அவரை விழுங்கவில்லை," என்று நான் பதிலளித்தேன். "ஆனால் அவர் உன்னுடன் இருக்கிறார்."
இயேசுவை “அவள் வயிற்றில்” வைத்திருப்பதாக என் மகள் நேரடியாக அர்தம் கொண்டபோது என்னை நிதானித்தேன், இயேசுவை என் இரட்சகராகக் வரும்படி கேட்டபோது, அவர் வந்து எனக்குள் எப்படி வாசம்பன்னினார் என்பதைக் கருத்தில் கொண்டேன்.
பரிசுத்த ஆவியானவர் எபேசுவில் உள்ள விசுவாசிகளை பலப்படுத்துவார் என்று பிரார்த்தனை செய்தபோது அப்போஸ்தலன் பவுல் இந்த இரகசியத்தை குறிப்பிட்டார், இதனால் கிறிஸ்து “விசுவாசத்தினாலே [அவர்களுடைய இருதயங்களில்] வாசம்பன்னுவார்” (எபேசியர் 3:17). இயேசு உள்ளே வாசம்பன்னுவதால், அவர் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அன்பினால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சியடைவார்கள், அன்பின் உண்மையை பேசும்போது மற்றவர்களை மனத்தாழ்மையுடனும் மென்மையுடனும் நேசிப்பார்கள் (4: 2, 25).
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குள் வாசம்பன்னுவது என்றால், அவருடைய அன்பு அவரை வரவேற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் விட்டு விலகாது. அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது (3:19) நம்மை அவரிடம் வேரூன்ற செய்து, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் இதைச் சிறப்பாகச் எடுத்துரைக்கும்: “ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்!”
இரக்கத்தை அதீதப்படுத்தல்
ருவாண்டன் இனப்படுகொலையில் தனது கணவனையும், குழந்தைகளில் சிலரையும் கொன்ற மனாசேயை அவர் எவ்வாறு மன்னித்தார் என்பதைப் பிரதிபலிக்கும் பீட்டா, “நான் மன்னிப்பது இயேசு செய்ததை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு தீய செயலுக்கான தண்டனையை அவர் எல்லா நேரத்திலும் எற்றுக்கொண்டார். அவருடைய சிலுவையே நாம் வெற்றியைக் காணும் இடம்- ஒரே இடம்!” சிறையில் இருந்து பீட்டாவுக்கு மனாசே ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருந்தார், அவரிடமும் தேவனிடமும் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு பெற வேண்டும் என்ற சிந்தனையால் அவரைப் பாதித்த வழக்கமான துர்கனவுகளையும் அவர் விவரித்தார். முதலில் அவள் தன் குடும்பத்தாரை கொன்றதின் நிமித்தம் அவனை வெறுத்தாகக் கூறி, இரக்கம் காட்ட மறுத்தாள். ஆனால் பின்னர் “இயேசு அவளுடைய எண்ணங்களுக்குள் ஊடுருவினார்”, தேவனின் உதவியுடன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவள் அவனை மன்னித்தாள்.
இதில், மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கும்படி சீடர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுறுத்தலை பீட்டா பின்பற்றினார். அவர்கள் “ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாக பாவம் செய்தாலும், ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: 'நான் மனஸ்தாபப்படுகிறேன்,'என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார் (லூக்கா 17: 4). ஆனால், மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம், சீடர்களின் எதிர்வினையில் நாம் காண்கிறபடியால்: “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” (வச.. 5).
மன்னிக்க இயலாமை குறித்து ஜெபத்தில் போராடியதால் பீட்டாவின் விசுவாசம் அதிகரித்தது. அவளைப் போலவே, நாமும் மன்னிப்பதற்கு சிரமப்படுகிறோம் என்றால், அவ்வாறு செய்ய நமக்கு உதவும்படி அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் தேவனிடம் கேட்கலாம். நம்முடைய விசுவாசம் அதிகரிக்கும் போது, மன்னிக்க அவர் நமக்கு உதவுகிறார்.