அவருடைய கண் மணி
என் சிநேகிதியின் குழந்தையை வலிப்பு நோய் தாக்கியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள் தன் மகளுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்த சமயம் அவள் இதயம் வேகமாக பட, பட வென்று துடித்தது, பொங்கிவரும் பாசத்துடன் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பற்றி பிடித்திருந்த பொழுது; நாம் தேவனுடைய கண்ணின் மணியைப் போல் அருமையாக இருப்பதால் அவர் எவ்வளவுக்கதிமாய் நம்மை நேசிக்கிறார் என்று சிந்திக்கலானாள்.
பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்கள் விடுதலை பெற்று எருசலேமுக்கு திரும்பி வந்த பொழுது அவர்களை சகரியா தீர்க்கதரிசி தேவனுடைய…
பழக்கமில்லாதவர்களும் வெளிநாட்டினரும்
கேம்பிரிட்ஜின் வரைபடத்தை எனது விரல்களால் தடவிப்பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டு என் மிதிவண்டியை நிறுத்தினேன். திசைகள் பற்றி தெளிவில்லாத நிலையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல கட்டிடங்களைக் கொண்ட அந்த சாலைகளின் வலைபோன்ற அமைப்பில் நான் எளிதாக தொலைந்து போகக் கூடிய நிலையில் இருந்தேன்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலேயரை திருமணம் செய்ததினால் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்புதிய இடத்தில் யாரோடும் பிணைக்கப்படாதது போல உணர்ந்தேன். நான் வாய்பேசாமல் இருந்தால் அந்த புதிய…
வாழ்க்கைக்கான பயிற்சி
சமீபத்தில் தன் சரீரத்தையும், மனதையும் கூடுமானவரை பயன்படுத்தின ஓர் பெண்மனியைச் சந்தித்தேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்டாள், மரணத்தை சந்தித்தாள். கின்னஸ் உலக சாதனையையும் கூட முறியடித்தாள். இப்பொழுது அவள் வேறுவிதமான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் ஈடுபட்டிருக்கிறாள். அதாவது மாற்றுத் திறனாளியான தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு வந்தது. மலை ஏற்றத்தின் பொழுது அவள் பயன்படுத்திய தைரியம், நம்பிக்கையை இப்பொழுது தன் தாய்மைக்குரிய செயல்களுக்காக அர்ப்பணித்தாள்.
1 கொரிந்தியர் நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் பந்தய சாலையில் ஓடும் ஓர் ஓட்ட வீரனைப் பற்றி…