நாம் அவருடையவர்கள்
நாம் அவருடையவர்கள் தேவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தத்தெடுப்பு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை என்று நினைத்தாலும், தத்தெடுப்பு என்று ஒன்றிருக்கிறது. ஒரு வகையில், நாம் ஒவ்வொருவரும் அனாதையாகத்தான் இருக்கிறோம்.
லோரிலி கிராக்கர் தத்தெடுப்பு பற்றிய தனது ஆழ்ந்த தனிப்பட்ட கதையைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாம் ஒவ்வொருவரும் வியக்கத்தக்க நடைமுறை பயன்பாடுகளைப் பெற முடியும். கிராக்கரைத் தத்தெடுத்தவர் இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாயும், அனாதை இதயம் கொண்ட இளவரசி ஃபோபியின் வளர்ப்புத் தாயுமாவாள்.
கிராக்கர் தத்தெடுப்பை உள்ளார்ந்த "ஆன்மீக முயற்சியாக" பார்க்கிறார். "அனாதைகள்" நம்மைச் சுற்றிலும் உள்ளனர்.…
தேவ பிரசன்னத்தின் முக்கியத்துவம்
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.
இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிடட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).
நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழக்;கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.
அடைக்கல மக்கள்
பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.
ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.
ஒரு நாள் இரவில் ரூத் போவாஸ_டைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).
வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
தேவனோடு ஆழமான உறவை வளர்ப்பது எப்படி!
நாம் தனிமையில் இருக்கும்போது நமது பாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அல்லது ஆறுதல்படுத்தப்படவும் யாரேனும் ஒருவர் நம் இதயத்தில் உள்ளதை இயேசுவிடம் சொல்வதை விரும்புகின்றோம். ஆனால் நாம் எப்படி இயேசுவின் நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பற்றி எத்தனை முறை நினைக்கின்றோம்? அவரிடமிருந்து பெற்றுக்கொள்வது என்ற மேலோட்டமான உறவைத் தாண்டி அவருடன் அந்த ஆழமான நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது எப்படி?
எல்லா சூழ்நிலைகளிலும், கைகளைத்தட்ட இரண்டு கைகள் தேவை. தேவனை ஒர் பரிபூரணமான, நிலையான நண்பராக எண்ணி நாம் வளரும்போது, அவருடன் இன்னும் ஆழமாக வளர்வது…
பாவ அறிக்கை
“அதை மறைக்க கூடாது” என வின்ஸ்டனுக்குத் தெரியும். எனவே அவன் ஒரு தந்திரமான யுக்தியைக் கையாண்டான். "தந்திரமாக மறைப்பது" என்று அதைப் பற்றிக் கூறுவோம். வின்ஸ்டன் தூக்கி எறியப்பட்ட, கவனிக்கப்படாத காலணிகளை கண்டால், சாதாரணமாக அந்தத் திசையில் வளைந்து, அதை எடுத்துவிட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக நடந்து செல்வான். கதவைத் தாண்டும்வரை தன்னை எவரும் பார்க்கவில்லை என்று அறிந்துகொண்டால், வின்ஸ்டன் உங்கள் காலணிகளை எடுத்துக்கொண்டு மெதுவாக செல்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
சில சமயங்களில் "தேவன் நம் கடந்தகால பாவத்தை கண்டுகொள்ள மாட்டார்" என நாமும் தந்திரமாக நடக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. அவர் கவனிக்கமாட்டார் என்ற நினைவில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். இது பெரிய விஷயமில்லை, "அது" எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நம்மை நாமே பகுத்தறிகிறோம். ஆனால், வின்ஸ்டனைப் போன்றதான இந்நடவடிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, நம் பாவத்தின் அவமானத்தின் காரணமாக நாம் அப்பாவங்களை மறைக்க முயற்சிக்கலாம் (ஆதியாகமம் 3:10) அல்லது எதுவுமே நடக்காதது போல் நடிக்கலாம். ஆனால் வேதாகமம் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நம்மை அழைக்கிறது: தேவனின் இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் அவரிடம் ஓட சொல்கிறது. நீதிமொழிகள் 28:13 நமக்குச் சொல்லுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று
நம் பாவத்தை யாரும் கவனிக்கவில்லையென்று, அதை நாம் செய்யாதது போல் தந்திரமாக நடக்க முயற்சிக்க வேண்டியதில்லை. நம் தவறுகளைப்
பற்றிய உண்மையை நம்பகமான நண்பரான தேவனிடம் சொல்லும்போது, இரகசியப் பாவச்சுமையிலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை பெறுவோம் (1 யோவான் 1:9).
தேவன் அருகில் இருக்கிறார்
ந மது வேகமான எப்போதும் மாறிவரும் உலகில், வழிகாட்டுதலையும், நோக்கத்தையும் கண்டறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குழப்பங்களுக்கு மத்தியில், கிறிஸ்துவிலுள்ள நம்பிக்கை நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஏனென்றால் விசுவாசிகளாகிய நாம், வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆவியானவரால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகின்றோம். தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக, ஆறுதலளிப்பவராக இருக்கிறார் என வேதம் நமக்குக் கற்பிக்கிறது. பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த பிரசன்னத்தின் மூலம், நாம் தேவனுடன் ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான உறவை அனுபவிப்பதன் மூலம், நம் அன்றாட வாழ்வில் அவர் நம்மை வழிநடத்த…
குழப்பமான உலகில் அமைதியைக் கண்டறிதல்
இ ந்த கொந்தளிப்பான உலகில் நாம் எங்கே அமைதியைக் காண கூடும்? வன்முறையை இன்னும் அதிக வன்முறையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர், "வாழுங்கள், வாழ விடுங்கள்" என்கிறார்கள். இன்னும் சிலர், “அன்புதான் பதில்” என்கிறார்கள். இன்னும் அதிகாரம் உள்ளவர்கள் அதை தங்கள் சொந்த நலனுக்காக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. பலமுள்ளவன் எளியவர்களை ஆளும்போது, உண்மையான அமைதிக்கு வாய்ப்பு உண்டா?
நம் பிரச்சனை என்னவென்றால், கொந்தளிப்பு நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறது. நம் உள்ளங்கள் பயத்தாலும் பீதியாலும் கலங்குகின்றன. அமைதி சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
ஆசிரியரும் பேச்சாளருமான பில்…
எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்
நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது.
வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன்.
ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.
அனைத்தும் இயேசுவுக்காக
ஜெஃப் பதினான்கு வயதாக இருந்தபோது, அவரது அம்மா அவனை ஒரு பிரபல பாடகரை பார்க்க அழைத்துச் சென்றார். அவருடைய காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற பாடகர்களைப்போலவே, அமெரிக்க பாப் மற்றும் நாட்டுப்புற பாடகரான பி.ஜே. தாமஸ், இசைக்காக சுற்றித் திரியும்போது தன்னையே அழித்துக்கொள்ளும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தார். அந்த வாழ்க்கை முறை, அவரும் அவருடைய மனைவியும் இயேசுவை அறிவதற்கு முன்பாக இருந்தது. அவர்கள் கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாறியபோது அவர்களின் வாழ்க்கை தீவிரமாக மாறியது.
அந்த இரவு இசை நிகழ்ச்சியின்போது, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை தன்னுடைய பாடல் திறமையின் மூலம் ஈர்க்க முற்பட்டார். அவருக்கு தெரிந்த சில பரீட்சயமான பாடல்களை பாடிய பின்பு, கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் “இயேசுவின் பாடல் ஒன்று பாடு” என்று கேட்க, அவர் எந்தவித தயக்கமுமின்றி, “நான் நான்கு பாடல்களையும் கிறிஸ்துவுக்காகத் தான் பாடினேன்” என்று சொன்னாராம்.
அவருடைய பழைய வாழ்க்கை மாற்றப்பட்டு சில தசாப்தங்கள் கடந்துவிட்டன. எனினும், நாம் செய்யும் அனைத்தும் இயேசுவுக்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அந்த தருணத்தை ஜெஃப் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். மத சம்பந்தப்படாத விஷயங்களைக் கூட இயேசுவுக்காக செய்யவேண்டும் என்று அவர் கருதுகிறார்.
சில சமயங்களில் நாம் வாழ்க்கையில் செய்யும் காரியங்களைப் பிரித்து புரிந்துகொள்ளுகிறோம். வேதாகமத்தைக் படியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு பாடலைப் பாடுங்கள். புனிதமான பொருட்களை சேகரியுங்கள். புற்களை வெட்டுங்கள். ஓட்ட பயிற்சி செய்யுங்கள். நாட்டுப்புறப் பாடலைப் பாடுங்கள். இவைகள் மதச்சார்பற்ற விஷயங்கள்.
கொலோசெயர் 3:16இல் போதித்தல், பாடல் பாடுதல், நன்றியுள்ளவர்களாயிருத்தல் போன்ற செய்கைகளில் தேவன் வாசம்பண்ணுகிறார் என்று பார்க்கிறோம். ஆனால் 17ஆம் வசனத்தில், “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்(யுங்கள்)” (கொலோசெயர் 3:17) என்று தேவனுடைய பிள்ளைகளுக்கு வலியுறுத்துகிறார்.
நாம் அனைத்தையும் அவருக்காகவே செய்கிறோம்.