“இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.” 2 கொரிந்தியர் 2:15
கிறிஸ்துமஸ் என்பது நிறைய காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலமாகும். அவற்றில் நிச்சயமாக ஒன்று வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் காரவகைகள், இது இந்திய வீடுகளில் பொதுவானவை. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு கிறிஸ்தவ வீடும் நறுமணத்தாலும் மற்றும் பரலோக சுவையாலும் நிரப்பப்படுகிறது! வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு தேங்காய் பர்பிகள்’, சுழல் வடிவ ‘குல்-குல்ஸ்’, ‘ரோஸ் குக்கீஸ்’ ஸ்னோஃப்ளேக் வடிவம் கொண்டவை அல்லது பலவகை சர்க்கரை நிறைந்த ‘லட்டு’ போன்றவை – இந்த இனிப்பான, மகிழ்ச்சி எல்லா புலன்களுக்கும் ஒரு உண்மையான விருந்து – மற்றும் ஒரே சுவையான காரம் ‘முருக்கு’ வெண்ணை மற்றும் காரமான கலவையுடன் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியத்தின்படி, வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விருந்துகள் பின்னர் நண்பர்கள் மற்றும் அயலவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு விருந்தாளிக்கும் பரிமாறபடுகிறது. அவைகள் அன்பாகவும் மற்றும் சிரமப்பட்டும், தாய்மார்கள், பாட்டி மற்றும் அத்தைகளால் தயாரிக்கப்பட்டது.
ஒரு சிறிய பெண்ணாக, ஒரு பிரகாசமான தட்டில் இந்த சுவையான உணவுகளை, வகைப்படுத்தி பின்னர் ‘கிறிஸ்மஸ்ஸி’ எனும் ஒரு துணியால் மூட என் அம்மாவுக்கு உதவுவதில் நான் மகிழ்ந்தேன். அது எங்கள் அயலார்களின் கைகளை அடையும் வரை அவற்றை மிக பொறுப்புடன் எடுத்துச் செல்வது எனது கடமை. ஒவ்வொரு வீட்டிலும் இனிப்புகள் பரிமாறப்பட்டன, நான் வீட்டிற்கு திரும்பி வந்த நேரம், அடுத்த தொகுப்பு கொடுப்பதற்கு தயாராக இருந்தது. காலங்கள் செல்ல செல்ல, இந்த வீட்டில் தயாரிக்கப்பட்டவை கடையில் வாங்கப்படும் இன்னபிற பொருட்களால் மாற்றப்பட்டுள்ளன, ஆனால் பகிர்வின் மகிழ்ச்சி அப்படியே உள்ளது.
கிறிஸ்துமஸ் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த நேரம் – சுவையானதை மட்டுமல்ல – ஆனால் அந்த காலத்தின் உண்மையான காரணத்தையும். அப்போஸ்தலராக பவுல் கூறுகிறது போல, நாங்கள் “கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.” அவரைப் பற்றிய அறிவின் நறுமணத்தை அனுபவித்திருக்கிறோம், அவருடைய கிருபையையும், அன்பையும் சேமித்துள்ளோம். கிறிஸ்துமஸ் என்பது நம் மீட்பரின் அந்த அன்பை பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ ஒரு சிறந்த நினைவூட்டல். நம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் இந்த அன்பையும், நித்திய நம்பிக்கையும் பகிர நாம் அழைக்கபட்டிருக்கிறோம்.
இந்த காலத்தில் நாம் அந்த நறுமணமாக இருந்து இயேசுவின் நறுமணத்தை நம் வாழ்வின் வழி பரப்பலாமா? கிறிஸ்துவின் அன்பைப் பகிரும் இந்த அணுகுமுறை நம் வாழ்க்கை முறையாக மாறட்டும், கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டும் அல்ல, ஆனால் ஆண்டு முழுவதும்.
– சுசன்னா தீப்தி
அன்புள்ள தந்தையே, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், இந்த காலத்தின் மகிழ்ச்சிகளை நான், எனது நண்பர்கள், அயலவர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் அன்பையும் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். ஆமென்.