““நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”
2 கொரிந்தியர் 3:18
கிறிஸ்துமஸ் என்பது காற்றில் அற்புதம் இருக்கும் காலம். மின்னும் வண்ணமயமான தொடர் விளக்குகள், எல்லாவற்றையும் பிரகாசிப்பிக்கும். அவை உயிரற்ற பொருட்களைக்கூட உயிருள்ள பொருள்போல தோன்றபண்ணும், அவை நம்மை நோக்கி கண் சிமிட்டுகிறது. குழந்தையாக, எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்று குடில் அல்லது மாட்டு தொழுவம் அமைப்பது. ஒவ்வொரு ஆண்டும், களிமண் சிலைகளை வைத்திருந்த அட்டை பெட்டி, பரணிலிருந்து கீழே இறக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் கவனமாக வெளியே எடுக்கப்பட்டு, சுற்றப்பட்ட வைக்கோல் கொத்துகள் அவிழ்க்கப்படும். அவை ஒரு சிறிய மூலையில் மேசையின் மேல் அமைக்க மிகவும் அன்புடனும் கவனத்துடனும் கையாளப்படும். எது முதலிடம் பிடித்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை – எப்போதும் ‘குழந்தை இயேசு’ தான் மேடையின் மையத்தை எடுத்துக்கொள்ளும். இந்த உருவத்தை கீழே, வைக்கோல் மேல் வைத்த பிறகு, நீல நிறத்தில் ‘மரியாள்’ மற்றும் தடியை பிடித்து கொண்டிருக்கும் ‘யோசேப்பு’ சிலை; குழந்தைக்கு அடுத்து வைக்கப்படும். பிரகாசமான வண்ணமயமான ஆடைகளிலுள்ள ‘மூன்று ஞானிகள்’ ஒரு புறத்திலும், ‘மேய்ப்பர்கள்’ மறுபுறத்திலும் வைக்கப்படுவர். ஒரு சில ஆடுகள் அங்கும் இங்கும் சிதறடிக்கப்பட்டனவாய் வைக்கப்படும். அது அனைத்தும் செய்யப்பட்டு முடிந்ததும் நாம் அனுபவித்த திருப்தி, மகிழ்ச்சி அளவற்றது! கதாபாத்திரங்கள் உயிரோடு வந்துவிட்டது போன்று தோன்றியது.
குடிலில் இரட்சகரும் கதாநாயகனுமான – நமது கிறிஸ்துவை சுற்றியிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே சொந்தமான ஒரு கதை இருந்தது. அந்த கதாநாயகன் அனுமானிக்க முடியாத குழந்தை, அங்கே படுத்துக் கொண்டு, மிகவும் சாந்தமாகவும் பணிவாகவும் காணப்பட்டது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் இணைக்கும் பொதுவான ஒரு தொடர்பு மறுரூபமாக்கப்படுதல். மரியாளிடம் ஆரம்பத்தில் இருந்த கவலை மற்றும் பயம், ஒரு பக்தியாவும் விசுவாசத்தின் உணர்வாகவும் உருகியது; யோசேப்பின் பயம் மற்றும் அவமானம், உறுதிப்படுத்தல் மற்றும் நோக்கமாக மாற்றப்பட்டது; ஞானிகளின் சந்தேகங்களும் குழப்பங்களும், மெய்ப்பட்ட கனவாகவும் நம்பிக்கையாகவும் மாறியது; சாதாரணமான மேய்ப்பர்கள் கடவுளின் மாபெரும் கரத்தில் ஆச்சரியப்பட்டார்கள். இது மறுரூபமாக்கப்படுதலின் ஒரு சக்திவாய்ந்த கதை.
அதே கிறிஸ்து தம்முடைய ஆவியானவர் மூலமாக நம்மில் இன்னும் செயல்படுகிறார். நாம் உண்மையிலேயே அவரைத் தேடி நம்முடைய வாழ்க்கையில் அவரை செயல்பட அனுமதிக்கும்போது நாம் அனுதினமும் மறுரூபமாக்கப்படுவோம். அவருடைய மகிமையை பற்றி நாம் சிந்தித்து, மனந்திரும்பும் ஜெபத்தில் அவரிடம் நெருங்கி வருவதால், இந்த கிறிஸ்துமஸ் இன்னொரு மாற்றத்தை கொண்டுவரட்டும். அவரைப்போல மாற்றப்பட, அவருக்கு நம் வாழ்வை கொடுப்போம்.
அன்புள்ள பிதாவே, இந்த காலத்தில் என் இதயத்தின் ஆவல் உங்களிடம் நெருங்குவதாக இருக்கட்டும், அதனால் இயேசுவின் நாமத்தில் நான் ‘மாற்றப்படுவேன்’. ஆமென்.
– சுசன்னா தீப்தி