வாசியுங்கள்: பிரசங்கி 3:1-8

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்ட; புலம்ப ஒரு காலமுண்டு நடனம்பண்ண ஒரு காலமுண்டு (வ.4).

கடந்த ஆண்டு சில மணிநேரங்களில் எனக்கு இரண்டு சோகமான செய்திகள் கிடைத்தன. அன்பு நண்பர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி முதலில் வந்தது. 60 வயதான ஸ்டீவ், இயேசுவையும் அவருடைய குடும்பத்தையும் நேசித்த ஓர் சிறந்த மனிதர். சில மணிநேரங்களுக்குப் பிறகு, திருமணத்திற்கு அப்பாற்பட்டு உறவால் முறிந்த ஓர் அன்பான தம்பதியின் விவகாரத்தின் செய்தி சோகத்தை ஏற்படுத்தியது.

இரண்டு செய்திகளும் என்னை மிகவும் பாதித்தன. ஒன்று போதுமான வலியினை தந்தது; ஒன்றாக அவைகள் இரண்டும் என்னை ஓர் விளிம்பில் நெருக்கித்தள்ளி அச்சத்தை ஏற்படுத்தியது.

அன்று இரவின் பிற்பகுதியில், நான் இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ய ஆசைப்பட்டேன். நான் தனிப்பட்ட முறையில் மதுவின் மூலம் வலியிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று ஒருபோதும் உணர்ந்ததில்லை. உணவு பொதுவாக என் விருப்பமான ‘மயக்க மருந்து’. ஆனால் நான் என் உணர்ச்சிகளுடன் மல்லுக்கட்டும்போது, ஓர் அன்பான நண்பரின் மரணம் மற்றும் திருமண பந்தம் ஆரோக்கியமானது என்று நான் நினைத்தபோது, எனது கைகளில் கொஞ்சம் மதுவை எடுத்து மனவலியைப் போக்க அதனைப் பருக வாஞ்சித்தேன்.

அவை நல்ல திட்டம் இல்லை என்பது எனக்கு தெரியும்.

இழப்பின் வலியிலிருந்து ஓடுவது ஓர் மோசமான யோசனை என்பதை அறியும் அளவுக்கு நான் துயரத்தை அனுபவித்திருக்கிறேன். ஆழ்ந்த இழப்பின் வலியை மேற்கொள்ள போதை அல்லது மனச்சோர்வு போன்ற வேறு வகையில் அகப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பிரசங்கியின் எழுத்தாளர் துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆத்துமாக்களுக்கு ஓர் பயனுள்ள முன்னோக்கை வழங்குகிறார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.” “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்ட; புலம்ப ஒரு காலமுண்டு நடனம்பண்ண ஒரு காலமுண்டு” (பிரசங்கி 3:1, 4).

துக்கத்தின் பருவங்கள் நம் வாழ்நாள் முழுவதும் வந்து செல்கின்றன. மேலும் நமது இழப்புகளின் தன்மையை நாம் உணர அனுமதிக்க வேண்டும். கடவுளின் குணப்படுத்தும் வேலையின் மூலம் மகிழ்ச்சியின் புதிய பருவங்களுக்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான வழிகளில் துக்கப்படுங்கள் (மத்தேயு 5:4; வெளிப்படுத்துதல் 21:4). அவர் “நொருங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமானவர்” மற்றும் “நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்கீதம் 34:18).

-ஜெஃப் ஓல்சன்

மேலும்

2 கொரிந்தியர் 1:3-4 ஐ வாசித்து, இந்த வாழ்க்கையில் நாம் இழப்பினால் துக்கப்படும்போது தேவன் என்ன செய்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

அடுத்தது

நீங்கள் துக்கத்துடன் போராடும் இழப்பின் பருவத்தில் செல்கிறீர்களா? அவை மோசமானதாக மாறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன் கடவுளிடமும், தெய்வீக நண்பரிடமும் பிரார்த்தனை செய்யுங்கள்.