பிங்கலி வெங்கையா இந்தியத் தேசியக் கொடியின் அசல் வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார். ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அதை ஒரு சுதந்திர நாடாகக் கண்டார், மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் கொடியைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் இந்தியாவுக்கான தேசியக் கொடி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார், அதில் அவர் பரிசீலனைக்கு 24 வடிவமைப்புகளை வழங்கியிருந்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் மகாத்மா காந்தியைச் சந்தித்து சுதந்திரம் விடிவதற்கு முன்பே தேசியக் கொடியின் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது விடாமுயற்சியின் காரணமாக, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே காந்தி பரிந்துரைத்த சில திருத்தங்களுடன் கொடி இறுதி செய்யப்பட்டது.
இயேசு மற்றொரு நபரின் விடாமுயற்சியைப் பற்றிப் பேசுகிறார்,அவர் ஒரு விதவை. லூக்கா 18:1-8 இல் உள்ள உவமையில், ஒரு விதவையின் விடாமுயற்சி ஒரு அநீதியான நியாயாதிபதியைப் பணியச் செய்தது, உண்மையில் அவருக்கு நியாயமாக நடந்துகொள்ள மனமில்லை (வ.5). இந்த உவமையில் உள்ள விதவை, இயேசுவின் சீடர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவர்கள் விரைவில் அதிக உபாத்திரப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார் (வ.1). நியாயாதிபதியிடம் விதவை செய்ததைப் போல, நம்பிக்கையை விட்டுவிடாமல், இத்தகைய துன்பங்களை எதிர்கொண்டாலும் விடாமுயற்சியுடன் ஜெபிக்கும்படி கிறிஸ்து அவர்களை ஊக்குவித்தார் (வ.6). ஊக்கமான மற்றும் சோர்ந்துபோகாத ஜெபமும் அயராத கிரியை செயல்படும் இடத்தில், தேவனின் உண்மைத்தன்மை நீதியை நிலைப்படுத்தும் (வ.8). பாடுகளும் அநீதியும் நம் உலகில் பெருகுகிறது. வன்முறை, வெறுப்பு மற்றும் சீர்கேடுகளுக்கு மத்தியில், நாம் தொடர்ந்து ஜெபத்தில் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஏனென்றால், நாம் விடாப்பிடியாக இருக்கும்போது, நம்முடைய பரலோக நியாயாதிபதி நமக்கு நீதி வழங்குவதாக வாக்களிக்கிறார். இயேசு நமக்குக் கற்பித்தபடி, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிப்போம். அவர் திரும்பி வரும்போது நாம் ஜெபத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக (லூக்கா 18:8).
உங்களைச் சுற்றி அநீதியைக் காணும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள், அதைக் குறித்து என்ன செய்வீர்கள்? இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை நாம் வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்கான சில வழிகள் யாவை?
அன்பு இயேசுவே, எனது ஊக்கமான ஜெபத்திலும், உமக்கான உண்மையுள்ள பயபக்தியிலும் நீதிக்கான உமது உள்ளம் என்னில் செயல்படட்டும்.
