“ஜேக்கப் டயமண்ட்” உலகின் ஐந்தாவது பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிறமற்ற வைரம், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் தனது மறைந்த தந்தையின் காலணியில் அதைக் கண்டுபிடிக்கும் வரை பல ஆண்டுகளாக இந்த விலைமதிப்பற்ற கல் தொலைந்து போனதாகவும் மறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வினோதமாக, நிஜாம் இந்த அரிய பொக்கிஷத்தை இந்திய ரிசர்வ் வங்கியால் 108 கோடி ரூபாய்க்குப் பாதுகாக்கும் வரை, பல ஆண்டுகளாக தாட்கட்டையாக பயன்படுத்தினார். அவரது தந்தை தனது காலணியில் விட்டுச்சென்ற வைரத்தின் மூலம் நிஜாமின் வாழ்க்கையைச் செழிப்பாக்கினார்.

அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபையாரின் கவனத்தை இயேசுவிடமாய் திருப்புகிறார்; அவர் நம்முடைய பிதாவாகிய தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற பொக்கிஷம் (வ.4). கொரிந்தியர்கள் இயேசுவோடு அவருடைய ஆவியின் மூலம் கொண்டிருந்த ஐக்கியத்தின் காரணமாக அவர்கள் “சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டனர்” என்று பவுல் எழுதுகிறார் (வ.5-9). கிறிஸ்து என்ற இந்த விலைமதிப்பற்ற ஈவை மதிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். அவர்கள் அவரை உடையவர்களாய் இருந்தால், அவர்களுக்கு ஒன்றும் குறைவிருக்காது என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். இது தவிர, தேவன் அவர்களுக்கு வழங்கிய பல “ஆவிக்குரிய வரங்களை” கருத்தில் கொள்ளுமாறு பவுல் சபையாரை வலியுறுத்துகிறார் (வ.5-7). கிறிஸ்துவாகிய இந்தப் பொக்கிஷத்தைச் சபையானது பாதுகாக்கும் போது, அவர் திரும்பும் நாள் வரை குற்றமற்றவர்களாக இருக்க அது அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.

வாழ்க்கையில் நாம் அதிருப்தி அடையும்போது, குறிப்பாக நம்மிடம் இல்லாததைப் பற்றி முணுமுணுக்கும்போது, நாம் இயேசுவைக் கொண்டிருப்பதால் நாம் உள்ளார்ந்த ஐசுவரியவான்கள் என்பதை நினைவில் கொள்வோம். இழப்பு, நிதி நெருக்கடி, குடும்பக் கஷ்டம் அல்லது வேறு ஏதேனும் கொந்தளிப்பு ஏற்படும் நேரங்களில், நாமும் நம் தகப்பனால் எல்லா வகையிலும் உண்மையிலேயே “சம்பூரணம்” அடைந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தின் மூலம் கிறிஸ்தென்னும் பொக்கிஷத்தை அவர் நம்மில் விதைத்துள்ளார் (2 கொரிந்தியர் 1:22).