நாம் அனைவருமே உடல் நலம் குறைவுபட்ட அல்லது சோர்வாக உணர்ந்த நாட்களைச் சந்தித்திருப்போம். சிலர் தங்கள் வாழ்வில், இனி எந்தவொரு மகிழ்ச்சியுமே இல்லை என்று எண்ணத்தோன்றுகின்ற மந்தமான, நம்பிக்கையற்ற நாட்களைக் கடந்து வந்திருப்பார்கள். உங்களை எதுவுமே உற்சாகப்படுத்தவில்லை என்று தோன்றினாலோ அல்லது அப்படியே ஏதாவது உங்களை உற்சாகப்படுத்தினாலும் கூட அது நீண்ட நாட்கள் நிலைக்கப்போவதில்லை. சில நாட்கள் ஜெபிக்கக்கூட மனதில்லாத, உலகத்திற்கு முகம் கொடுக்கவோ அல்லது அந்நாளுக்கூடாகக் கடந்துவிடக்கூட பெலனற்ற நாட்களாகவோ இருந்திருக்கும். நம்மில் அநேகர் கடந்துசெல்லும் பாதைக்கு, “மன அழுத்தம்” என்கிற வார்த்தை வீரியம் கூடியதாக இருக்கக்கூடும், ஆனாலும் நம்மில் அநேகர் இப்படிப்பட்ட தருணங்களுடன் நமது வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதே உண்மை. நம்பிக்கையின்மை, சோர்வான மனப்பாங்கு, தகுதியற்ற நிலை மற்றும் அநாதரவான நிலை என்பவற்றுக்கு எதிராகப் போராடுகையில், இனி தொடர்ந்து நம்மால் பயணிக்க முடியுமா என்று திகைத்து நிற்கின்றோம். சிலர் தாங்களாகவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடனோ இந்தச் சூழ்நிலைகளிலிருந்து வெளிவருவதற்கு முயலுகிறார்கள்; இன்னும் சிலர் வல்லுணர்களின் உதவியோடு மேற்கொள்கின்றர். அதே சமயம், அநேகர் தங்களால் இயன்ற வழிகளில் சூழ்நிலைகளைச் சமாளிக்கப் பிரயாசப்படுகின்றனர்.

நம்முடைய பெலத்தையும், மீள் எழுகின்ற தன்மையையும் சோதிக்கும்படியான சவால்களை நமது வாழ்வு நமக்கு அடிக்கடி தருகிறது. அமைதியாயும் முழு நம்பிக்கையுடனும் காத்திருப்பதற்கான முயற்சியில் ஒவ்வொரு மனுஷனும் தனது சொந்தப் போராட்டங்களைச் சுமந்து திரிகிறான். நம்முடைய போராட்டங்களில் நாம் தனித்திருப்பதாக உணர்ந்தாலும், நாம் எப்பொழுதும் பற்றிப்பிடித்திருக்கக்கூடியதான ஒரு நிலையான மூலாதாரம் உண்டு – அவர்தான் நமது இறைவன். அவருடைய வார்த்தையானது, அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. மற்றும், நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளும் எல்லாமே நம்மைவிட்டுப் பிரிந்துபோனதாகத் தெரிந்தாலும், அவர் நம்முடன் இருப்பதை அது உறுதிப்படுத்துகிறது: அவரே நமக்கு அசைக்கமுடியாத வலிமை, உறுதியான கோட்டை, நாம் நிற்கக்கூடிய கன்மலை.

நீங்களோ, அல்லது உங்களுக்கு அறிமுகமான எவரோ விரக்தி, நம்பிக்கையின்மை, அல்லது மன அழுத்தம் என்பவற்றோடு போராடுபவராயின், தயவுசெய்து இதனைத் தொடர்ந்து வாசியுங்கள். நீங்கள் தனித்தவரல்ல என்பதை உறுதிப்படுத்த சில ஆதாரங்களை நாங்கள் இங்கே இணைத்துள்ளோம். உங்கள் தேவன் உங்களோடு இருக்கிறார், அதேபோல் நம்மில் அநேகர் ஒருவரை ஒருவர் அறியாமல் இருந்தாலும்கூட, அனைவரும் ஒரே போராட்டத்தையே போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த வாசிப்பிற்கான வளங்கள், தரவிறக்கம் செய்யக்கூடிய சிற்றேடுகள் மற்றும் காணொளிகள் உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கக்கூடியனவாகவும், மற்றும் தேவனைப் பற்றிப்பிடித்துக்கொள்ளவும், சுரங்கவழியின் இறுதியில் வெளிச்சத்தைக் கண்டடையவும் உங்களை உற்சாகப்படுத்தும். அத்தோடு ஒவ்வொரு நாளிலும், நீங்கள் எழுந்து நின்று வாழ்க்கைக்கு முகம்கொடுக்கும்படி உங்களுக்கு உதவக்கூடிய சில நடைமுறை சாத்தியமான படிமுறைகள் நம்மிடத்தில் உள்ளன. தேவையோடிருக்கும் அனைவருக்கும் இந்த வளங்கள் ஆசீர்வாதமாக அமையவேண்டும் என்று ஜெபிக்கின்றோம்.

Never Give Up

ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!

தேவன் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உங்களுக்குள் செயற்படுகிறார் என்பதை அறிந்து, மீண்டும் முயற்சி செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தைத் தொடர்ந்து கொண்டு வரும். தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. அவர் உங்களை ஒருபோதும்,  கைவிடமாட்டார்!

Does God Care?

தேவன் நம் மீது கரிசனை கொள்கிறாரா?

சங்கீதக்காரன் தேவனுடைய பிரசன்னத்தையும் உண்மையையும் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் மனச்சோர்வடைந்திருந்தபோது, ​​“ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டு, என்மீது இரக்கமாயிரும். ஆண்டவரே, எனக்குத் துணையாயிரும்” என்று கதறினார். தேவன் அவருக்குக் உற்சாகத்தையும் ஆறுதலையும் அளித்தார். இயேசுவை விசுவாசிப்பவர்களாகிய நாம், ஆண்டவர் எப்போதும் அருகில் இருக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

Dying For Encouragement

ஊக்குவிப்புக்காக எப்படியாவது முயற்சிப்பது

ஒவ்வொரு நாளும் நாம் புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​நம்மை ஊக்குவிக்க ஒரு ஊக்க வார்த்தை நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. ஆனால், வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ நமது அன்றாடப் பொறுப்புகளை நிறைவேற்றும்போது, ​​பாராட்டு மற்றும் புகழ்ச்சி வார்த்தைகளும் நமக்குத் தேவைப்படுகின்றன.

Practical steps to fight depression

மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் அதை மேற்கொள்ளவும் உங்களுக்கு உதவக்கூடிய சில நடைமுறை சாத்தியமான படிமுறைகளை வாசிக்க கீழுள்ள “மேலும் வாசிக்க” என்கிற பொத்தானை அழுத்துங்கள்.

He Can Lead You Out Of It

 

அதிலிருந்து உங்களை வெளியே கொண்டுவருவதற்கு அவரால் கூடும்.

நாம் சோர்வடைந்திருக்கும் நேரங்களில், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதையும், அவரைப் பற்றிய ஒரு புதிய தரிசனத்திற்கு நம்மை வழிநடத்த விரும்புகிறார் என்பதையும் நினைவில் கொள்வோம்!

Prescription For Anxiety

மனக்கவலைக்கான மருந்துச்சீட்டு

கவலை என்பது நாம் சுமக்க அழைக்கப்படாத ஒரு சுமை. அதற்குப் பதிலாக, நாம் கிறிஸ்துவில் நம்பிக்கையை வைக்க வேண்டும், ஏனென்றால் அவர் நம்மீது அக்கறை கொண்டிருக்கிறார் (1 பேதுரு 5:7; பிலிப்பியர் 4:6-7). இன்று உங்கள் இதயம் பாரமாக இருந்தால், நீங்கள் அவருக்குக் கொடுக்கும் எந்தப் பாரத்தையும் சுமக்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

The Cure For Anxiety

கவலைக்கு மருந்து

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றைவும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியா 4:6

 

Giving up on life or feeling that life has given up on you is a battle millions of people face in struggling with depression. In this booklet, counselor Jeff Olson takes a closer look at the nature and various components of depression. Discover how you can avoid being overwhelmed by the darkness of depression and experience the light of God’s hope for your future.

email-img

 

How can you survive the ride through the ups and downs of life? In this excerpt of his book The Upside Of Down, author Joe Stowell shares wisdom from James 1:2 to help you gain understanding and healing in the midst of trials. Find out how you can build your faith with a new perspective on the hope and joy God gives to bring you through when the going gets tough.