சமூக ஊடகங்கள் செயல்மிகு பயனர் (இன்ஃப்ளூயன்சர்) என்ற புதிய வகையைக் கண்டறிந்துள்ளது. இந்த செயல்மிகு பயனர்கள் எப்போதும் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நட்சத்திரங்கள் அல்லது கிரிக்கெட் வீரர்கள் அல்ல, அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள், கிராமவாசிகள், தனிநபர் பயிற்சியாளர்கள், இயந்திர வல்லுநர்கள், குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் மற்றும் பலர். அவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட காணொளிகளை உருவாக்குகிறார்கள், அவற்றால் ஒரு நிகழ்வை நம்பத்தகுந்ததாகக் கூறலாம், அன்றாட பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பரிந்துரைக்கலாம், வேடிக்கையான நடனங்கள் அல்லது ஒரு நல்ல நகைச்சுவையை உருவாக்கலாம், விரைவில் இவர்கள் பிரபலமாகின்றனர். அவர்களின் அணுகல், பின்தொடர்பவர்களை ஈர்க்கும் அதே வேளையில், சில பின்தொடர்பவர்களின் கருத்துகள் கண்ணியமானதாகவும், சிலதோ தவறாகவும் இருக்கும். இந்த மோசமான வார்த்தைகள் இந்த செயல்மிகு பயனர்களைக் காயப்படுத்தலாம், இருப்பினும் அவர்கள் காணொளிகளை உருவாக்கி பிறரிடம் தாக்கம் ஏற்படுத்துகின்றனர்.
வேறுவகையான செயல்மிகு பயனர்களாக இருக்கும்படி வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. நாம் சொல்வதை ஜனங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், உண்மையில் அவர்கள் நம்மை அச்சுறுத்தவும் கூடும் என்றும் பேதுரு குறிப்பிடுகிறார். ஆனால், இவை அனைத்தின் வாயிலாகவும் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம் (வ.14). எதிர்ப்பை எதிர்கொண்டாலும், நமது மென்மையான மற்றும் மரியாதையான பதில்களும், உத்தமமான வாழ்க்கையும் பிறரை நன்மையை நோக்கிச் செல்ல ஈர்க்கிறது (வ.15-16). கிரயம் செலுத்தவேண்டியிருந்தாலும் நாம் தாக்கம் ஏற்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். இந்த வழியில், கிறிஸ்துவில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான காரணத்தை நம்மைச் சுற்றிலும் நாம் தாக்கம் ஏற்படுத்துபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிறிஸ்துவுக்காக ஒரு செயல்மிகு பயனராக இருப்பது அச்சமூட்டலாம். குறிப்பாக நம் அலங்கோலமான உலகில் மென்மை, மரியாதை மற்றும் நேர்மை ஆகியவை பலவீனமென்று தவறாகக் கருதப்படலாம். ஆனால் பேதுரு சொல்வது போல், அது நம்மைத் தடுக்கக்கூடாது. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது அவருடைய சீஷர்களாகிய நமக்கு ஒரு பாக்கியமும் பொறுப்பும் ஆகும். எனவே, என்ன விலை செலுத்தவேண்டியிருந்தாலும் நன்மை செய்ய முயலுவோம்.
உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எவ்வாறு சாதகமாகத் தாக்கத்தை
உண்டாக்க முடியும்? உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் ஏற்றுக்
கொள்ளத் தூண்டப்படும்படி நீங்கள் என்ன செய்ய முடியும்?
கர்த்தாவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உமக்காகத் தாக்கம் ஏற்படுத்தும்படிக்கு நான் அழைக்கப்படுகிறேன் என்பதை தயவுசெய்து
எனக்கு உணர்த்தும். மேலும் எனது செயல்கள் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் அதற்கேற்ப இருப்பதாக.
