குழந்தைகளாக, அம்மா வீட்டில் ஆண்டுதோறும் ஊறுகாய் தயாரிக்கும் முறையில் எரிச்சலூட்டும் பகுதியே “அந்த ஜாடியைத் தொடாதே!” என்ற என் அம்மாவின் கடுமையான கண்டனங்கள்தான். அதின் வாசனையை நுகர ஒரு நொடிப் பொழுது கூட நான் அனுமதிக்கப்படவில்லை. அப்போதுதான் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டேன். அவசியப்பட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கடந்து, மாங்காய்கள் அல்லது எலுமிச்சைகள் எண்ணெய்யிலும் மசாலாவிலும் ஊறின பிறகு, என் அம்மா எங்களுக்கு ருசிக்க ஒரு சிறிய அளவை கரண்டியில் தருவார். அந்த காரம் மற்றும் புளிப்பு ஆகியவற்றின் அற்புதமான கலவையாக என் சுவையுணர்வுகளை நிரப்ப நான் உணரும் மகிழ்ச்சி இணையற்றது!
தேவவார்த்தையில் திளைப்பது ஆவிக்குரிய முதிர்ச்சியில் வளர்வதற்கான திறவுகோலாகும். மேலும் ஊறுகாய் தயாரிக்கும் செயல்முறையைப் போலவே, சரியான நேரத்திற்கு முன்பே நாம் பிரிக்கப்பட்டால், நாம் ஆயத்தப்படாமல் இருப்போம். ஆவிக்குரிய முதிர்ச்சியடைய நேரம் எடுக்கும். யாக்கோபு தனது நிருபத்தில், இரக்கம், இச்சையடக்கம், பொறுமை, சமத்துவம், உதாரத்துவம் மற்றும் பரிசுத்தம் போன்ற ஆவிக்குரிய முதிர்ச்சி ஏற்படுத்துபவர்களைப் பற்றிப் பேசுகிறார் (வ.19,27). தேவவார்த்தையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது இந்தப் பண்புகள் நம்மில் வளர நேரம் எடுக்கும். நாம் “பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து” (வ.22) நடக்கும்படி யாக்கோபு கூறுகிறார். நிச்சயமாக, நாம் அங்குக் கற்றுக்கொண்டதை மறந்துவிடக் கூடாது; ஆனால் நாம் “நிலைத்திருந்து” அது சொல்வதைச் செய்ய வேண்டும் (வ.25).
நாம் இன்னும் ஆவியில் வளரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கலாம், ஆனால் உண்மையில் அதை நடைமுறைப்படுத்துவதில் போராடுவோம். நாம் எவ்வளவு அதிகமாக வார்த்தையைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு எளிதாகத் தேவனின் சுபாவத்தை நறுமணமாக வீசும் ஜனங்களாக மாறுவோம். “செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” (யாக்கோபு 1:25). நம் வாழ்க்கை மற்றும் செயல்களின் மூலம் தேவனுக்கு மகிமையுண்டாக, நாம் தேவவார்த்தையில் மூழ்குவோமாக (மத்தேயு 5:13-16).
ஆவிக்குரிய முதிர்ச்சி அடைவதற்கான வேதனைகளை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? தேவவார்த்தையால் உங்களை எவ்வாறு ஆயத்தப்படுத்திக்கொள்ள முடியும்?
ஆண்டவரே, நீர் விரும்பும் நபராக நான் வளர, உமது வார்த்தையைக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் எனக்குப் பொறுமை தாரும்.
