மோகன்தாஸ் கே. காந்தி, மற்றவர்களுடன் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கியெறிய முக்கிய பங்காற்றினார். அவரது சுயசரிதையான ‘சத்திய சோதனை’ என்ற புத்தகத்தில், காந்தி “மலைப் பிரசங்கம் என் மனதுக்குள் ஆழமாக . . . ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு’ என்ற இந்த வசனங்கள் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கியது” என்று எழுதுகிறார். அகிம்சை அல்லது அறப் போராட்டம் மூலம் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான காந்தியின் எதிர்வினையாற்றா எதிர்ப்பை இயேசுவின் வார்த்தைகள் ஊக்குவித்தன.
இயேசு அகிம்சையை மட்டும் போதிக்கவில்லை. அவர் அன்பைப் போதித்தார், இது எதிர்வினையாற்றா எதிர்ப்பை காட்டிலும் ஆக்கப்பூர்வமான செயலாகும். அவரது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வன்முறை ஒரு தீர்வல்ல என்பதை அவர் காட்டினார். இயேசு குற்றமற்றவராக இருந்தபோதும், அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டது. ஆனாலும், அவர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, அவர் அமைதியாக இருந்து, அவமானகரமான மரணதண்டனைக்குத் தன்னை விட்டுக்கொடுத்தார் (வ.7-8). கடுமையான வெறுப்புக்கும் கோபத்திற்கும் அப்பாலுள்ளதை இயேசு கண்டார், அதனால் அவர் துன்பங்களைச் சகித்தார், ஏனென்றால் பாவத்திலிருந்து மனிதக்குலத்தைக் காப்பாற்ற அதுவே ஒரே வழி என்று அவர் அறிந்திருந்தார். இயேசுவின் அன்பின் பலி நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்தது. சமாதானத்தை நாடுவது குறிப்பாக அன்பாயிருப்பது சில சமயங்களில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், குறிப்பாகக் கோபம், வெறுப்பு அல்லது வன்முறை நிறைந்த வார்த்தைகள் அல்லது செயல்களால் பிறர் நம்மை எதிர்க்கும்போது. ஆனால், நாம் ஒடுக்கப்படும்போது, அமைதியின் வழியில் நடந்து, அன்பை வெளிப்படுத்திய, அடக்குமுறைகளைப் பொறுமையாகச் சகித்துக் கொண்ட நம் ஆண்டவரைப் பின்பற்ற வேண்டும். நமது செயல்கள், வார்த்தைகள் மற்றும் நமது நோக்கங்கள் கூட அவரைப் பிரதிபலிக்க வேண்டும், அதனால் அவர் நம் மூலம் மாற்றத்தையும் குணப்படுத்துதலையும் கொண்டு வர முடியும்.
எதிர்ப்பை சமாதானமான முறையில் சமாளிக்க நீங்கள்
என்ன செய்யலாம்? சாதகமற்ற சூழ்நிலையில் சமாதானம் பெறத்
தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவுவார்?
ஆண்டவரே, உமது அன்பால் இடைக்கட்டிக்கொள்வதை நினைவில் வைக்க எனக்கு உதவும், அதனால் நான் எவ்வாறு தூண்டப்பட்டாலும் சமாதானம் மற்றும் அன்பின் வழியில் நிலைத்திருப்பேன்.
