என் தோழி அவள் தீட்டிக் கொண்டிருந்த ஒரு நீர்வர்ண ஓவியத்தை என்னிடம் காட்டியபோது, வரைதிரையில் இருந்த சித்திரம் வேலூர் கோட்டை என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். நான் ஓவியர் அல்ல, ஆனால் யாராவது சுவருக்கு வண்ணம் தீட்டினால், அவர்கள் முழு சுவரையும் ஒரே வர்ணத்தில் பூசுவார்கள் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால், அவள் வரைந்த சுவர் நேர்த்தியாகப் பல வண்ணங்களிலிருந்தது. ஒரு கல் காவி நிறம், மற்றொன்று பொன்னிறம். ஒரு பாசி பச்சை மற்றும் ஒரு மாதுளை ஊதா கூட இருந்தது. நான் மிகவும் கவரப்பட்டு, “சுவர் எப்படி வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டேன். அவள், “ஏனென்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு பாறையிலிருந்து வருகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு சாயல்களைக் கொண்டுள்ளது” என்று பதிலளித்தாள். அப்போதிருந்து, நான் ஒரு கல் சுவரைப் பார்க்கும்போதெல்லாம், அதன் பல கற்களின் அமைப்புகளையும், நிறங்களையும் மற்றும் வடிவங்களையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியாது.

பேதுரு நம்மை “ஜீவனுள்ள கற்கள்” (வ.5) என்று அழைக்கிறார். என் தோழியின் ஓவியத்தில் உள்ள கற்களைப் போல, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நாங்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறோம் மற்றும் பலவிதமான அனுபவங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் கட்டிடத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கல் போல நாம் தனிமையில் வாழ வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து நம்மை ஒன்று சேர்த்தார் (வ.4). ஒரு கல் ஒரு சுவரை உருவாக்காது என்றாலும், தேவன் நம்மை ஒன்று சேர்க்கும்போது, அவர் நம்மை “ஆவிக்கேற்ற மாளிகையாக” (வ. 5) கட்டுகிறார். மூலைக்கல்லாகிய இயேசுவால் ஒன்றுபட்டு, நாம் “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” (வ.5-9) ஆக்கப்படுகிறோம்.

நாம் நிராகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது எங்கும் பொருந்த முடியாத அளவுக்கு வித்தியாசமானவர்களாகவோ உணரும்போது (வ.11-12), பேதுரு சொல்வதை நினைவில் கொள்வோம்: “அதின்மேல் (இயேசுவின்மேல்) விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை” (வ.6). தேவன் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்க இயேசுவின் மூலம் நம்மைத் தேர்ந்தெடுத்தார் (வ.5). நமது தனித்துவம் தேவனின் சமூகத்தில் சரியாகப் பொருந்துகிறது.