இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு, ஆழ்துளை கிணறு மற்றும் ஒரு எளிய வீட்டு…
i am thirsty
நான் தாகமாயிருக்கிறேன்
never forsaken
ஒருபோதும் கைவிடப்படுவதில்லை
என் தாத்தா…
a word of care
கரிசனையுள்ள ஒரு வார்த்தை
too bad too late
மிகவும் மோசமானதா? மிகவும் காலதாமதமா?
கிறிஸ்டோபர்…
grace to forgive
மன்னிப்பதற்கான கிருபை
1999, ஜனவரி மாதம் 23ம் திகதி…
lk Easter 2026
பரிகாசம்பண்ணப்பட்டு, சிலுவையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்" (மாற்கு 15:37) என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் அவருடைய இறுதி வார்த்தைகள் என்ன? “முடிந்தது" (யோவான் 19:30). தமது நோக்கத்தைத் தாம் நிறைவேற்றிவிட்டதையும், மரணம் என்பது முடிவல்ல என்பதையும் இயேசு அறிந்திருந்ததால், இயேசுவின் இந்த இறுதிக் கூக்குரலானது வலி மிகுந்ததாயினும் தேவனிடத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற உண்மைத்துவம் உள்ள கதறுதலாய் இருந்தது. இயேசு சிலுவையில் கூறிய ஒவ்வொன்றையும், அவருடைய இறுதி வார்த்தை வரைக்கும் பேசுவதற்கு முன்பதாக கூறிய அனைத்தையும் இந்த உயிர்த்தெழுந்த…

சட்டப்பூர்வமான விடுதலை
இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் அல்லது பந்துவா மஸ்தூரி 1976 இல் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது. மக்கள் தங்களுடைய உழைப்பை அடகு வைத்து, திருப்பிச் செலுத்த முடியாத கடனைப் பெறும்போது கொத்தடிமை சுழற்சி தொடங்குகிறது. அவர்களுக்குக் கடன் வழங்குபவர்கள் தங்களுக்கு வேலை செய்து கடனைச் செலுத்தக் கோருகிறார்கள், ஆனால் அவர்களுக்குச் சொற்ப ஊதியமே தருகின்றனர். இதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனளிப்பவரின் சொத்தாகவே வாழ்ந்து, சில சமயங்களில் தலைமுறைகளுக்கு நீட்டிக்கப்படும் கடன்களை அடைக்க முயல்கின்றனர். சட்டப்படி, அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், மறுவாழ்வு பெறத் தகுதியுடையவர்களாகவும் இருந்தாலும், பல தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கானோர் அடிமைத்தனத்தில் தவிக்கின்றனர்.
கிணற்றருகே இருந்த சமாரிய ஸ்தீரியும் சமூக நெறிகளுக்கு அடிமையாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கை முறையின் காரணமாக அவள் ஜனங்களால் ஒதுக்கப்பட்டதால் அவள் தனியாக வந்தாள். இதைச் சிக்கலாக்கும் வகையில், யூதக் கண்ணோட்டத்தில், அவள் ஒரு சமாரிய பெண்; புறக்கணிக்கப்பட்டவள் (வ.20). ஆனால் இயேசுவுடனான உரையாடல் அவளை அங்கீகரிக்கப்பட்டவளாகவும், திடப்பட்டவளாகவும் உணரச் செய்தது. இயேசு அவளை இரட்சிக்க வந்திருந்தபோதும், அதை அவள் அறியவில்லை. குடிக்க அவளிடம் தண்ணீர் கேட்டபோது, அவரது அசாதாரணமான பார்வை மற்றும் செயலால் அவள் திகைத்தாள். ஆனால் அவர்தான் எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை அவள் உணர்ந்தபோது, அவள் மகிழ்ச்சியுடன் தன் கிராம மக்களை இயேசுவிடம் கொண்டு வந்தாள்.
இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 3:16). இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தபோது நம்முடைய பாவங்களின் கடன் அடைக்கப்பட்டது. அவர் நமது சுயாதீனத்தை விலைக்கு வாங்கி, நம்மை என்றென்றும் விடுதலையாக்கினார். மூடநம்பிக்கை, பாரம்பரியம் அல்லது சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் போன்ற பாரங்களை நாம் சுமக்க வேண்டாம் . அவர் வழங்குவதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் விடுதலை பெறுகிறோம்.
