பல ஆண்டுகளாக, உடற்பயிற்சி வல்லுநர்கள் இருதய ஆரோக்கியத்திற்காக ஓடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் சமீபத்திய அறிவியல் ஆய்வுகள், தினசரி நடைப்பயிற்சியும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது. தேசிய சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, “ஒரு நாளைக்கு 8,000 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் நடக்கும் பெரியவர்கள், ஒரு நாளைக்கு 4,000 அடிகள் மட்டுமே நடப்பவர்களைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டுகளில் மரிக்கும் அபாயத்தைக் குறைத்துள்ளனர்”. நடப்பது நமக்கு நல்லது.

வேதாகமம் முழுவதும், நடப்பது என்பது தேவனுடனான ஐக்கியத்திற்கு ஒரு உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதியாகமம் 3 இல், தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுடன் “பகலில் குளிர்ச்சியான வேளையிலே” (வ.8) உலாவினதை பற்றி நமக்குக் கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 5, ஏனோக்கின் கதையைப் பகிர்கிறது, அவர் முந்நூறு வருஷம் தேவனோடே நடந்தார் (வ.22). ஒரு நாள் ஏனோக்கு தனது சிருஷ்டிகருடன் செலவழித்த வழக்கமான நேரம், அவரை நேரடியாகத் தேவனுடன் இருக்கும்படி அழைத்துச் சென்றது (வ.23). ஆதியாகமம் 17ல், தேவன் ஆபிராமுடன் தம் உடன்படிக்கையைப் புதுப்பித்தபோது, ​​அவருக்கு முன்பாக உத்தமமாக நடக்க அழைத்தார் (வ.1). யாக்கோபு தனது வாழ்வின் இறுதியில், தேவனைத் தனது மேய்ப்பராக விவரித்தார் மற்றும் உண்மையுடன் நடந்த (48:15) தனது முற்பிதாக்களை பற்றிப் பேசினார். புதிய ஏற்பாட்டில், பவுல் நமக்கு “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” (கலாத்தியர் 5:16) என்று அறிவுறுத்தினார்.

ஏனோக்கு மற்றும் ஆதியாகமத்தில் உள்ள முற்பிதாக்களைப் போல, நாமும் தினமும் தேவனுடன் நடக்க முடியும். இயேசுவிடம் நம் வாழ்க்கையை ஒப்படைத்து, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதன் மூலம் நாம் அவ்வாறு செய்கிறோம். அதுவே மெய்யன் ஆரோக்கியத்திற்கான வழி.

உங்கள் நடை எவ்வாறுள்ளது?