வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலம் மெல்ல மெல்ல வறுமையிலிருந்து மீண்டு வருகிறது. அவர்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், நற்செய்தி முதன்முதலில் இந்தப் பகுதிக்கு வந்ததிலிருந்து, இயேசுவின் விசுவாசிகள் “கைப்பிடி அரிசி” என்று அழைக்கப்படும் உள்ளூர் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உணவைச் சமைப்பவர்கள், ஒரு பிடி சமைக்காத அரிசியை ஒதுக்கி சபைக்குக் கொடுக்கிறார்கள். மிசோரம் சபைகள், உலகத் தரத்தில் ஏழ்மையானவை, ஆனால் மிஷனரிகளுக்கு இலட்சகணக்கான பணத்தை வழங்கியுள்ளன மற்றும் உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்பியுள்ளன. தங்கள் சொந்த மாநிலத்திலும் பலர் கிறிஸ்துவிடம் வழி நடத்தப்பட்டுள்ளனர்.
2 கொரிந்தியர் 8 இல், பவுல் இதேபோன்ற சவாலுக்குட்பட்ட சபையை விவரிக்கிறார். மக்கெதோனியாவில் உள்ள விசுவாசிகள் ஏழைகளாக இருந்தனர், ஆனால், அது அவர்களை மகிழ்ச்சியுடனும் ஏராளமாகவும் கொடுப்பதைத் தடுக்கவில்லை (வ. 1-2). அவர்கள் கொடுப்பதை ஒரு பாக்கியமாகக் கருதி, பவுலுடன் பங்காற்ற “தங்கள் திராணிக்கு மிஞ்சியும் ” (வ. 3) கொடுத்தார்கள். தாங்கள் தேவனுடைய வளங்களின் உக்கிராணக்காரர் மட்டுமே என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். நமது எல்லா தேவைகளையும் சந்திக்கும் அவர் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டும் ஒரு வழியாகக் கொடுத்தல் இருந்தது.
கொடுத்தலில் அதே அணுகுமுறையுடன் கொரிந்தியர்கள் இருக்கும்படி ஊக்குவிக்க, பவுல் மக்கெதோனியர்களை மாதிரியாக பயன்படுத்தினார். கொரிந்தியர்கள் “விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும்.. அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும்” பெருகி யிருந்தார்கள். இப்போது அவர்கள் “இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்” (வ.7)..
மக்கெதோனியர்கள் மற்றும் மிசோரமில் உள்ள விசுவாசிகளைப் போல நாமும் நம்மிடம் உள்ளதைத் தாராளமாகக் கொடுப்பதன் மூலம் நம் தகப்பனின் உதாரகுணத்தைப் பிரதிபலிக்க முடியும்.
தியாகமாகக் கொடுப்பதையை நீங்கள் எங்கே கண்டீர்கள்? தேவன் உங்களுக்குத் தாராளமாகக் கொடுத்ததற்கு பிரதிபலனாக நீங்கள் எவ்வாறு உதாரத்துவமாகக் கொடுக்க முடியும்?
தகப்பனே, மிசோரம் சபை உமது பணிக்குத் தொடர்ந்து உதாரத்துவமாய் வழங்கி வந்திட நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன்.