மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த அன்பான மற்றும் கடினமாய் உழைக்கும் பெற்றோரின் மகளாக, தங்கள் குடும்பங்களிலேயே முதலாவதாகச்  சிறந்த எதிர்காலத்திற்காக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த அவர்களின் துணிச்சலுக்காக நான் கடமைப்பட்டுள்ளேன். நியூயார்க் நகரத்தில் இளைஞர்களாகச் சந்தித்த அவர்கள், திருமணம் செய்துகொண்டு, என்னையும் என் சகோதரியையும் பெற்றெடுத்தனர், மேலும் அவரவருக்கான வணிகத்தைச் செய்தனர்.

ஒரு நியூயார்க் நகர வாசியாக, நான் எனது லத்தின் பாரம்பரியத்தைத் தழுவி வளர்ந்தேன். மேலும், பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களால் ஈர்க்கப்பட்டேன். உதாரணமாக, நான் ஒருமுறை முன்பு பிராட்வே காட்சியரங்கம் இருந்த இடத்தில் ஆராதிக்கும் பல கலாச்சார மக்கள் கொண்ட சபையில், ஒரு மாலை ஆராதனையில் எனது விசுவாச சாட்சியைப் பகிர்ந்துகொண்டேன். தேவனின் அன்பைப் பற்றிப் பல்வேறு கலாச்சாரக் குழுக்களுடன் பேசுவதும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றிணைவதைப் பார்ப்பதும், பரலோகம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறு கண்ணோட்டம் மட்டுமே.

வெளிப்படுத்துதலில், அப்போஸ்தலனாகிய யோவான் பரலோகத்தைப் பற்றிய இந்த அற்புதமான கட்சியை நமக்குத் தருகிறார்: “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்… சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” (வெளிப்படுத்துதல் 7:9) நம் இரட்சகராகிய தேவன், “சதாகாலங்களிலும்” “துதியும் மகிமையும்” பெறுவதற்கு பாத்திரர் (12).

பரலோகம் எப்படி இருக்கும் என்பதை இப்போது கண்ணோட்டமாகப் பார்க்கிறோம். ஆனால் ஒரு நாள், இயேசுவை நம்பும் நாம் அவரோடும், பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த  மக்களோடும் ஒன்றிணைவோம். தேவன் தேசங்களை நேசிப்பதால், கிறிஸ்துவில் உள்ள நமது உலகளாவிய குடும்பத்தை நாமும் நேசிப்போமாக.