ஜூன் 2023 இல் கொலம்பியாவின் அமேசான் காட்டில் ஒன்று முதல் பதின்மூன்று வயதுள்ள நான்கு உடன்பிறந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது உலகமே வியந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி, தங்கள் தாயை இழந்த பிறகு, அவர்கள் காட்டில் நாற்பது நாட்கள் உயிர் பிழைத்துள்ளனர். காட்டின் கடுமையான நிலப்பரப்பை நன்கு அறிந்த குழந்தைகள், காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தடிகளில் ஒளிந்துகொண்டு, ஓடைகள் மற்றும் மழைநீரைப் புட்டிகளில் சேகரித்து, விமான சிதைவிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு போன்ற உணவைச் சாப்பிட்டனர். எந்த காட்டுப் பழங்கள் மற்றும் விதைகளை உண்பது பாதுகாப்பானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
தேவன் அவர்களை ஆதரித்தார்.
அவர்களின் நம்பமுடியாத கதை, நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை தேவன் எவ்வாறு அற்புதமாகத் தாங்கினார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது, இது யாத்திராகமம் மற்றும் எண்ணாகவும் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு வேதாகமம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தங்கள் தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்றினார்.
தேவன் கசப்பான நீரூற்று நீரைக் குடிநீராக மாற்றினார், இரண்டு முறை பாறையிலிருந்து தண்ணீரை வழங்கினார், மேலும் பகலில் மேக ஸ்தம்பத்திலும் இரவில் நெருப்பு ஸ்தம்பத்திலும் தம் ஜனங்களை வழிநடத்தினார். அவர்களுக்கு மன்னாவையும் வழங்கினார். “அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்” (யாத்திராகமம் 16:15-16).
அதே தேவன் நமக்கு “வேண்டிய ஆகாரத்தை இன்று” (மத்தேயு 6:11) வழங்குகிறார் . “கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே ” (பிலிப்பியர் 4:19) நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார் என்று நாம் நம்பலாம். எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்!
தேவனின் முன்னேற்பாட்டை நீங்கள் எவ்வாறு அனுபவித்தீர்கள்? நீங்கள் தற்போது எதற்காக அவரை நம்புகிறீர்கள்?
அன்பு தேவனே, எனது ஒவ்வொரு தேவையையும் சந்திப்பதற்கு நன்றி.