Archives: பிப்ரவரி 2024

வாழ்க்கை நம்பிக்கையற்றதாகத் தோன்றுகையில் தொடர்ந்து பயணித்தல்

வாழ்க்கை நம்பிக்கையற்றதாகத் தோன்றுகையில் தொடர்ந்து பயணித்தல்

சில ஆண்டுகளுக்கு முன்பு, வழிகாட்டி இல்லாமல் நேபாளத்தின் ஹெலம்புவில் சற்றே எளிமையான மலையேற்றம் செய்ய நானும் எனது நண்பரும் முயன்றோம். சில ஆய்வுகளுக்குப் பின், எங்கள் தொலைப்பேசியில் வரைபடங்களை பதிவேற்றிய பிறகு பயணத்தைத் தொடங்கினோம்.

மலையேற்றத்தின் முதல் பாதி சுமுகமாகச் சென்றது. ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி ஓய்விடத்தை அடைய முடிந்தது, அற்புதமான இயற்கைக் காட்சிகளால் தொடர்ந்து வியப்படைந்தோம். இருப்பினும், அதிக பனி பொழிவால் மலைப்பாதைகள் அடர்ந்த பனியால் மூடப்பட்டிருந்தன. ஆகிலும் சில உள்ளூர்வாசிகள் நம்பிக்கையூட்டும் விதமாக கவலைப்பட வேண்டாம்,…

நட்சத்திர வீரரின் தாழ்மை

ஒரு போட்டிக்குப் பின், ஒரு கல்லூரி கூடைப்பந்து நட்சத்திர வீரர், காகிதம் மற்றும் உணவுக் குப்பைகளை அகற்றிய துப்புரவாளர்களுக்கு உதவினார். இதை ரசிகர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதை, எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஒருவர் கூறுகையில், [அந்த வீரன்] "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகுந்த தாழ்மையான மனிதர்களில் ஒருவர்" என்றார். எந்த ஒரு கூடைப்பந்து வீரரும் தன் அணியின் வெற்றியை சகவீரர்களுடன் இணைந்து கொண்டாடுவது சகஜம். அதற்கு மாறாக, அவர் இப்படிப்பட்ட கைமாறு கிடைக்காத சேவைக்கு முன்வந்தார்.

தாழ்மையின் விசேஷித்த குணம் இயேசுவில் காணப்பட்டது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:7). இயேசு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் மனமுவந்து இதைச் செய்தார். பூமியில் அவருடைய ஊழியத்தில் போதிப்பது, குணப்படுத்துவது, அனைவரையும் நேசித்து அவர்களை இரட்சிக்க மரித்து உயிரோடு எழுவது ஆகியவை அடங்கும்.

நம்மை மிகவும் அற்பமான வேலையை செய்யும்படி உந்தலாம், இருப்பினும் இந்த தாழ்மை பிறருக்கான நமது அணுகுமுறையில் கலந்து வெளிப்படுமானால், அது இன்னும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும். மெய்யான தாழ்மை என்பது நம் உள்ளார்ந்த சுபாவமாகும். இது நமது செயல்களை மட்டுமல்லாமல், நமது முக்கியத்துவங்களையும் மாற்றும் "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” (வ.3) தூண்டுகிறது.

எழுத்தாளரும், பிரசங்கியாருமான ஆண்ட்ரூ முரே, "தாழ்மை என்பது பரிசுத்தத்தின் மலர்ச்சியும் அழகும்" என்று கூறினார் அவருடைய ஆவியின் வல்லமையால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலித்திட, நம் வாழ்வும் இவ்வழகைப் பிரதிபலிக்கட்டும். (வ.2:5).