Archives: பிப்ரவரி 2024

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்கு வேலண்டைன் தின வாழ்த்துக்கள்!

இது ஆண்டின் இந்தக் காலத்தில் மீண்டும் அன்பு நம்மை சுற்றிலும் உள்ள காற்றில் இருக்கிறது, பூக்கடைகளில் இருக்கும் இதய வடிவ பலூன்கள் முதல், தொலை தொடா்பின் வலைத்தள ஒலிபரப்புகள் வரை, அனைத்து திசையிலிருந்தும் நம் புலன்களை ஈா்க்கும் காதல் விளம்பர வாசகங்கள் மூலம் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை வேலண்டைன் தினம் நமது கொண்டாட்டமாக இல்லாவிட்டாலும், நம் அனைவருக்கும், நேசிக்கப்படவும், நேசிக்கவும் உள்ளார்ந்த ஆசை இருப்பதை மறுக்கமுடியாது.

நம் அனைவருமே அன்புக்காக ஏங்கும் ஒரு இதய வடிவான துளையை உடையவா்களாயிருக்கிறோம். திருமண நிலை எதுவாக…

தேவனிடம் சரணடைதல்

ஒரு பண்ணை வீட்டில் பிறந்த ஜட்சன் வான் டிவென்டர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், ஓவியக் கலை பயின்று, ஒரு கலை ஆசிரியரானார். ஆனால், தேவன் அவருக்கு வைத்திருந்த திட்டம் வேறாயிருந்தது. திருச்சபையில் அவரது பனியின் அருமை அறிந்த நண்பர்கள் அவரை சுவிசேஷ பணிசெய்ய உற்சாகப்படுத்தினர். ஜட்சனும் தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார், ஆனால் ஓவிய பணிக்கான ஈடுபாட்டை விடுவது கடினமாக இருந்தது. அவர் தேவனோடு போராடினார். இறுதியில் அவர், "என் வாழ்க்கையின் முக்கியமான நேரம் வந்தது, நான் அனைத்தையும் தேவனிடம் ஒப்படைத்தேன்" என எழுதினார்.

தேவன் ஆபிரகாமை தன் மகன் ஈசாக்கை பலியாக அர்ப்பணிக்க அழைத்தபோது அவர் மனம் பட்டபாடுகளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. "அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்" (ஆதியாகமம் 22:2). தேவன் நம்மைப் பலியிட அழைக்கும் விலைமதிப்பற்ற பொருள் எது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்? தேவன் இறுதியில் ஈசாக்கைக் காப்பாற்றினார் என நாம் அறிவோம் (வ.12). ஆனால் நோக்கம் நிறைவேறிற்று: "தனக்கு மிகவும் விலைமதிப்புள்ளதை ஆபிரகாம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தார்". மிகவும் கடினமான அழைப்பின் மத்தியில் தேவன் வழங்குவார் என்று அவர் நம்பினார்.

தேவன் மீது அன்பு கூறுகிறோம் என்கிற நாம், நமக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? சுவிசேஷ பணிக்காகத் தேவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜட்சன் வான் டிவென்டர் பின்னர் "இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்" என்ற அற்புதமான பாடலை எழுதினார். பிற்காலத்தில், தேவன் ஜட்சனை மீண்டும் ஆசிரியரான பணியாற்ற வாய்ப்பளித்தார். அவரது மாணவர்களில் ஒருவர்தான் இளம் பில்லி கிரஹாம்.

நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் நாம் கற்பனை செய்ய முடியாத நோக்கங்களைக் கொண்டுள்ளது. நமக்குப் பிரியமானதைக் கொடுக்க நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். நாம் செய்யக்கூடியது இது தான் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய ஒரே மகனைப் பலியிட்டார்.

நம்பிக்கை - ஒரு உண்மையான ஆதாரத்தை கண்டுபிடித்தல்

 

கிறிஸ்துவை தீவிரமான அர்ப்பணிப்புடன் பின்பற்றுபவா்கள் கூட நம்பிக்கையற்ற தருணங்களை தங்கள் வாழ்நாளின் ஏதாவது ஒரு காலத்தில் கடந்துசெல்லும் வாய்ப்புள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் வாழ்வில் இப்படிப்பட்ட அனுபவத்தை கண்டுள்ளாா். நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிபாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று என்று 2 கொரிந்தியர் 1:8ல் குறிப்பிட்டுள்ளாா். அது அவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு உதவி செய்வதாகவும், நன்மைக்கேதுவாகவே இருந்தது என்கிறாா், அதனால் அவர் தன்மீது நம்பிக்கையை வைக்காமல், கா்த்தராகிய ஆண்டவைரச் சார்ந்திருக்க கற்றுக்கொள்கிறேன் என்கிறாா் (வச. 9).

நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது என்ற…

நாள் 5: அவரே போதுமானவர்

“உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்” (மத்தேயு 15: 27).

சில சமயங்களில் நாம் வாழ்க்கையால் மூழ்கடிக்கப்படுகிறோம். ஏமாற்றம், தீராத கடன், வேலை இழப்பு…

நாள் 4: சிலுவை பேசுகிறது

“…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,” (1 கொரிந்தியர் 15: 3-4)

சிலுவைகள் தேவாலயத்தின் செங்குத்தான கோபுரங்களையும் அலங்கரிக்கின்றன, கல்லரைத் தோட்டங்களிலும் புதைக்கப்படுகின்றன.…

நாள் 3: புகைப்பட கிறிஸ்தவம்

கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?... நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு…

நாள் 2: திருச்சபைக்கு ஏன் செல்ல வேண்டும்?

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்…

நாள் 1: துண்டிக்கப்பட்டுள்ளீர்களா?

“உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.” (சங்கீதம் 31:22)

அண்டார்டிக்காவின்…