தேவனின் திறந்த வாசல்கள்
ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் "சிறந்த" வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.
இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே" (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், "ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்" (வ.7) அவர்களுக்கு "எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் " (வ.8) என்றார்.
நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு "நானே வாசல்" என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம்.
இயேசுவைபோல் கோபப்படுதல்
வாசிக்க: எபேசியர் 4:17–5:2
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (4:26).
உங்களைக் கோபப்படுத்துவது எது? சாலை நெரிசல், வீங்கிய கால், அவமரியாதை, யாரோ உங்களை நேரத்தில் சந்திக்கவில்லையா அல்லது இரவு…
மூர்க்கமா அல்லது சாந்தமா?
வாசிக்க: சங்கீதம் 4:1-8
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (வ. 4)
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் போர்ச் செயலாளர் எட்வின்…
கோபமும் கவலையும்
வாசிக்க: எபேசியர் 4:17-31
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். (வ. 27)
சிறுவர்களுக்கான ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது "நீ கவலைப்படாதே, நீ சோா்வடையாதே, கடவுள் உன்னை இதுவரை ஏமாற்றியதில்லை என்பது…
கோபத்தை அடக்குதல்
வாசிக்க: 1 சாமுவேல் 24:1-22
ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். (நீதிமொழிகள் 29:8)
“உன் கோபத்தை என்னால் உணர முடிகிறது. நான் பாதுகாப்பற்றவன். உன் ஆயுதத்தை எடு! உனது வெறுப்பு முழுவதும்…
கோபத்தை கையாளுதல்
வாசிக்க: எபேசியர் 4:17-29
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள் (சங்கீதம் 4:4)
"ரோட்டு சண்டையில், ஒருவரைக் காயப்படுத்தியதாக போதகர் குற்றம் சாட்டப்பட்டார்" என்று தலைப்புச் செய்தியை படித்ததும் என்னுடைய முதல் யோசனை,…
கோபத்தின் அபாயம்
வாசிக்க: மத்தேயு 18:21-35
அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு…
கோபத்தை மேற்கொள்ளுதல்
எபேசியர் 4:26-27, "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்" இந்த வசனங்கள் விசுவாசிகள் கோபத்தை தொடராமல், அதை உடனடியாக தீர்க்க ஊக்குவிக்கிறது. ஒரு காயம் சீழ்பிடித்து, பின்னர் நமக்கு மேலும் மேலும் வலியை உண்டாக்குவது போல, நம்முடைய கோபமும் குறிப்பாகத் தேவனுடைய வார்த்தையின் ஞானத்துடன் அதனைக் கையாளாதபோது, அது அதிக தீங்குண்டாக்கலாம். இது நட்பு, திருமணம், பெற்றோர்-குழந்தை உறவுகள் மற்றும் பலவகையான உறவு முறிவுக்கு வழிவகுக்கும். அடுத்த சில நாட்களில், இந்த தியான கட்டுரைகள் நீங்கள்…