க்வென்டோலின் ஸ்டுல்கிஸ் தனது திருமண த்திற்கு, தான் அதிகமாக விரும்பிய ஆடையை அணிந்திருந்தார். பிறகு அவள் தான் அறியாத ஒரு நபருக்கு அதைக் கொடுத்துவிட்டாள். தூசிபடிய ஒரு அலமாரியில் இருப்பதைவிட மேலான நோக்கம் ஆடைக்கு உண்டு என்று ஸ்டுல்கிஸ் நம்பினார். மற்ற மணப்பெண்களும் இதற்கு இசைந்தனர். தற்போது ஏராளமான பெண்கள் திருமண ஆடைகளை நன்கொடையாக வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். ஒரு நன்கொடையாளர் “இந்த ஆடை ஒரு மனைகளிடமிருந்து வேறு ஒரு மணமகளுக்கென்று தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன்; மேலும் மேலும் இது பயன்படுத்தப்படுவதால் தேய்ந்து, கிழிந்து போய் அதன் வாழ்க்கையின் இறுதியில் சிதைந்து போகிறது” என்கிறார்..
தாராளமாகக் கொடுக்கும் குணம், உண்மையில் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். எழுதப்பட்டதுபோல, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” (நீதிமொழிகள் 11:24-25)
அப்போஸ்தலன் பவுல் புதிய ஏற்பாட்டில் இக்கொள்கையைப் போதித்தார். அவர் எபேசுவின் விசுவாசிகளிடம் விடைபெறுகையில், அவர்களை ஆசிர்வதித்தார் (அப்போஸ்தலர் 20:32) மற்றும் உதாரத்துவமாகக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டினார். பவுல் தனது நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.” (வ. 35).
நம் வாழ்வில் உதாரத்துவமாய் கொடுத்தல் தேவனைப் பிரதிபலிக்கிறது. “அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். . . . (யோவான் 3:16). அவர் நம்மை வழிநடத்திட, அவருடைய மகிமையான முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
சமீபத்தில் நீங்கள் கொடுத்த நல்ல பரிசு எது? உங்கள் பரிசு எவருக்கானாலும் எவ்வாறு உதவியது?
அன்புள்ள தந்தையே, உமது அன்பு என் இருதயத்தில் இருப்பதால் மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி என் கைகளைத் திறந்தருளும்.