அந்த நகரத்தைப் பற்றி நான் முதலில் கவனித்தது அதன் ஏழ்மை. அடுத்து, அதன் மதுபானக் கடைகள், “சேரிகள்,” மற்றும் மக்களிடமிருந்து பணத்தை சம்பாதிக்க என்னும் நுகர்வோர் உற்பத்தியாளர்களுக்கான மாபெரும் விளம்பர பலகைகள். நான் இதற்கு முன்பு இதுபோன்ற பல நகரங்களுக்குச் சென்றிருந்தபடியால், இந்த நகரம் ஒரு புதிய தாழ்வை எட்டியது போல் எனக்குத் தோன்றியது.

இருப்பினும், மறுநாள் காலை ஒரு டாக்ஸி டிரைவரிடம் பேசியபோது என் மனநிலை பிரகாசமாக இருந்தது. “எனக்கு உதவ விரும்பும் நபர்களை எனக்கு அனுப்புமாறு நான் ஒவ்வொரு நாளும் தேவனிடம் கேட்கிறேன்,” என்று அவர் கூறினார். “அடிமைகள், விபச்சாரிகள், உடைந்த வீடுகளில் இருப்பவர்கள் கண்ணீருடன் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் கூறுவார்கள். நான் காரை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்காக நான் ஜெபம் செய்வேன். இது என்னுடைய ஊழியம்” என்று அவர் சொன்னார். 

நம்முடைய விழுந்துபோன உலகத்திற்கு இயேசுவின் சந்ததிகளைக் குறித்து விவரித்த பிறகு (பிலிப்பியர் 2:5-8), அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து (வச. 13), “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு” (வச. 16), “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு” (வச. 15), “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற” (வச. 14) அனுபவத்திற்குள் நாம் கொண்டுவரப்படுகிறோம். அந்த டாக்ஸி டிரைவரைப் போல, இயேசுவின் ஒளியை இருளுக்குள் கொண்டு வருவோம்.

கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவர் உலகை மாற்றுவதற்கு உண்மையாக வாழ வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் டாசன் கூறுகிறார். ஏனெனில் அந்த வாழ்க்கையில், “தெய்வீக வாழ்வின் அனைத்து மர்மங்களும் அடங்கியுள்ளன” என்று கூறுகிறார். உலகின் இருண்ட இடங்களில் அவருடைய ஒளியைப் பிரகாசித்து, கிறிஸ்துவின் சந்ததியாய் உண்மையாக வாழ நமக்கு அதிகாரம் அளிக்க கர்த்தருடைய ஆவியானவரிடம் கேட்போம்.