நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்வோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4).
நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம்.
கர்த்தருடைய சத்தத்தைக் கேட்பதில் உங்களுக்கு சிக்கல் இருக்கிறது என்பதை எப்படி எண்ணுகிறீர்கள்? மேய்ப்பன் இன்று உன்னிடம் என்ன சொல்கிறார்?
தேவனே, நீங்கள் பேசுகிறீர்கள் என்பதையும், நான் கேட்கிறேன் என்பதையும் எனக்கு அவ்வப்போது நினைவுபடுத்தும். கவனம் செலுத்த எனக்கு உதவிசெய்யும். கேட்கவும் பதிலளிக்கவும் எனக்கு உதவிசெய்யும்.