Archives: ஆகஸ்ட் 2023

கிறிஸ்துவின் வல்லமை

2013 ஆம் ஆண்டில், சுமார் அறுநூறு ஆன்-சைட் பார்வையாளர்கள் கிராண்ட் கேன்யன் அருகே 1500 அடி அகலமுள்ள பள்ளத்தாக்கில் ஒரு இறுக்கமான கயிற்றின் மீது நிக் வாலெண்டா நடப்பதைக் கண்டனர். வாலெண்டா 2 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கயிற்றில் நடக்கையில், அவருடைய தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் அவருக்கு முன் இருந்த பள்ளத்தாக்கு தெரிகிற வேளையில் அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். அவர் அந்த பயங்கரமான பள்ளத்தாக்கில் ஒரு சாதாரண நடைபாதையில் நடப்பதுபோல் நடந்துசென்று, இயேசுவுக்கு நன்றி சொன்னார். தீடீரென்று காற்று வீச, அவர் நிலைகுலைந்து பின்பு சமநிலைப்பட்டார். காற்றில் அசைந்த அந்த கயிற்றை தேவன் சமநிலைப்படுத்தியதற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அந்த இறுக்கமான கயிற்றின் ஒவ்வொரு அடியிலும், அவர் கிறிஸ்துவின் வல்லமையை சார்ந்திருப்பதை அன்றும் இன்றும் கேட்கும் அனைவருக்கும் பிரதிபலித்தார். வீடியோ உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

கலிலேயா கடலில் சீஷர்களின் படகை பெருங்காற்று சூழ்ந்தபோது, அவர்கள் உதவிக்காய் கதறும் அளவிற்கு பயம் அவர்களை சூழ்ந்துகொண்டது (மாற்கு 4:35-38). இயேசு சலசலப்பை அடக்கிய பிறகு, அவர் காற்றையும் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தினார் என்பதை சீஷர்கள் அறிந்தனர் (வச. 39-41). மெல்ல மெல்ல அவர் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்கள் இயேசுவோடு நெருங்குவதற்கும் அவருடைய அசாதாரண வல்லமையை விளங்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.

வாழ்க்கையின் புயல்களை நாம் சந்திக்கும்போதோ அல்லது துன்பத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நீட்டிக்கப்பட்ட நம்பிக்கையின் இறுக்கமான கயிற்றில் நடக்கும்போதோ கிறிஸ்துவின் வல்லமையின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த முடியும். தேவன் நம்முடைய விசுவாச நடையை பயன்படுத்தி அவர் மீது நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டுவார்.

 

அவர் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:14

இன்றைய பெரும்பான்மையான தேவபக்தியுள்ள இயக்கங்களில் புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகளோ இயேசு கிறிஸ்துவின் மரணம் பற்றிய சிந்தையோஎதுவும் இல்லை; அவர்களுக்குத்…

 

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருப்பதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருங்கள். மத்தேயு 5:48

மனிதர்களிடம் நமது எல்லா நடத்தையில் உதாரத்துவமாக இருக்க வேண்டும் என்பதே இந்த வசனங்களில்…

 

பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:13-22

என்னைநானே காப்பாற்றி சுத்திகரிக்க முடியாது; என்னால் பாவத்திற்கு பரிகாரம் செய்ய முடியாது; நான் உலகத்தை…

 

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச்சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:16

ஜான்சோவர்ஸ் தனது ஃபாதர்லெஸ் ஜெனரேஷன் என்ற புத்தகத்தில் "ஒற்றை பெற்றோர் உள்ள…

 

இப்போழுதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலை நிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத்தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்;…

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். . . அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தா. . . என்னப்படும் (வ.6). ஏசாயா 9:1-7

லூசி தனது தற்காலிக அலுவலகத்தை…

பயபக்தி


இன்றைய உலகில் நாம் எவ்வாறு பயபக்தி உணர்வை பண்படுத்த முடியும்?

யாரும் சரியானவர்கள் அல்லவே! நாம் செய்கின்ற பாவம் நம்மைக் களங்கப்படுத்துகின்றது; நமது மனித இயல்பு நம்மைப் பற்றி தாழ்வாக உணர வைக்கின்றது. ஆனால் ஒருவர் தன்னில்தான் திருப்தி அடைவதற்கான வழி பயபக்தி - கடவுளின் மீதான பயபக்தி (Reverence). , தேவனுக்கு பயப்படும் பக்தியின் முக்கியத்துவத்தையே ஆன்மீக வளர்ச்சி மற்றும் அறநெறிகளுக்கான வழிமுறையாக பொதுவாக உலகக் கண்ணோட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால் உலகத்தைப் பற்றிய கிறிஸ்தவ பார்வை, வாழ்க்கைக்கு ஆழமான அர்த்தத்தைக் கொண்டுவருகிறது. இந்த பக்தி…