“நான் சந்திக்கும் ஒவ்வொரு துக்கத்தையும் அளவிடுகிறேன்,” என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிஞர் எமிலி டிக்கின்சன் எழுதினார்: “குறுகிய ஆய்வு கண்களால் அது கடினமானதாயிருக்கிறதா அல்லது அவை எளிதானதுதானா என நான் ஆச்சரியப்படுகிறேன்”. மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் காயப்படுத்தப்பட்ட விதவிதமான வழிமுறைகளை இந்த கவிதை எதிரொலிக்கிறது. ஏறக்குறைய தயக்கத்துடன், அவரது ஒரே ஆறுதலாக, கல்வாரியில் அவரது சொந்த காயங்கள் தனது இரட்சகரின் காயங்களில் “துளைக்கப்பட்ட ஆறுதலாக” பிரதிபலிக்கப்பட்டதை கண்டு ”அக்காயங்களை என் காயங்களைப் போலவே உணருகிறேன்” என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் நம் இரட்சகராகிய இயேசுவை, “அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி“ என்று விவரிக்கிறது (வ. 5:6; பார்க்க வ. 12). அவருடைய காயங்கள் ஆறவில்லை. அவருடைய மக்களின் பாவம் மற்றும் விரக்தியைத் தம்மீது எடுத்துக்கொள்வதன் மூலம், சம்பாதித்த காயங்களின் (1 பேதுரு 2:24-25) மூலம் புதிய வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பெற முடியும்.
மேலும், இரட்சகர் தமது பிள்ளைகள் “யாவரின் கண்ணீரையும் துடைப்பார்” (21:4) என்று வெளிப்படுத்தின விசேஷம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கிறது. இயேசு அவர்களின் வலியைக் குறைக்க மாட்டார், ஆனால் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட துக்கத்தையும் உண்மையாகப் பார்த்து கவனித்துக்கொள்கிறார். அவருடைய ராஜ்யத்தில் புதிய, குணப்படுத்தும் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அவர்களை அழைக்கிறார், அங்கு ”இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வ.4). ஜீவத் தண்ணீரின் ஊற்றிலிருந்து செலவில்லாமல் குணப்படுத்தும் நீர் பாய்கிறது (வ. 6; பார்க்க 22:2).
நம்முடைய இரட்சகர் நம்முடைய ஒவ்வொரு துக்கத்தையும் சுமந்திருப்பதால், அவருடைய ராஜ்யத்தில் நாம் ஓய்வையும், சுகத்தையும் காணலாம்.
உங்கள் வலியை நீங்கள் எப்போது உண்மையாகவே உணர்ந்தீர்கள்? கடினமான காலங்களில் தேவன் உங்களுக்கு எவ்வாறு ஆறுதல் அளித்தார்?
அன்புள்ள தேவனே, எனது எல்லா துயரங்களையும் பார்த்து, புரிந்துகொண்டு, எனக்காக அவற்றை சுமந்தமைக்காக உமக்கு நன்றி.