அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, “ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி” பகிர்ந்து கொண்டார். அவர் ஓர் முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, “பிதாவே, என் பாவங்களை மன்னியும்; பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்” என்று ஜெபித்தார். ஓர் பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. “அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு உடனே விருப்பம் ஏற்பட்டது.
உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தமது நண்பர்களிடம், ”ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, ”எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும் தேவன் பரிசுத்த ஆவியைத் தருகிறார். இவை பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இவை நிகழ்கிறது.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தமது ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளை தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம்.
பரிசுத்த ஆவியானவர் உங்களில் ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் எவ்வாறு உணர முடியும்? தேவனின் ஆவி உங்களுக்குள் மேலும் மேலும் செயல்படுவதை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள கூடும்?
அன்புள்ள தேவனே, உமது ஆவியின் வரத்திற்காக உமக்கு நன்றி. இன்று உம்மையும், மற்றவர்களையும் அதிகமாக நேசிக்க எனக்கு உதவும்.