1992 இல் பில் பிங்க்னி தனியாக உலகம் முழுவதும் கடல் வழி பயணம் செய்தார். அவர் ஆபத்தான “கிரேட் சதர்ன் கேப்ஸைச்” சுற்றி உள்ளதான கடினமான பாதையில் சென்றார். அவர் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக அவ்வாறு செய்தார். அவரது பயணம் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தி, ஊக்கம் அளித்தது. அவரது முன்னாள் சிகாகோ நகர தொடக்கப் பள்ளி மாணவர்களும் அதில் உள்ளடங்குவர். அவரது இலக்கு என்ன? கடினமாகப் படிப்பதன் மூலமும் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலமும், மாணவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்பதே. அவர் தனது படகின் பெயரை அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுத்தார் (அர்ப்பணிப்பு). பில், பள்ளி மாணவர்களை “அர்ப்பணிப்பு” என்ற படகில் கூட்டிச்செல்லும்போது இவ்வாறு கூறுகிறார், “உங்கள் கையில்தான் உழவு இயந்திரம் உள்ளது, நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் உங்கள் குழுவுடன் இசைந்து கற்க வேண்டும்”. வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவருக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அவர் மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.
பிங்க்னியின் வார்த்தைகள் சாலொமோனின் ஞானத்தின் உருவப்படத்தை காட்டுகின்றன. ”மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” (நீதிமொழிகள் 20:5). சாலொமோன் மக்கள் தங்கள் இலக்குகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இல்லையெனில், “அது ஓர் பொறி” என சாலொமோன் குறிப்பிடுகிறார். ”பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (வ.25).
இதற்கு மாறாக, பிங்க்னிக்கு ஓர் தெளிவான நோக்கம் இருந்தது, “அது இறுதியில் அமெரிக்கா முழுவதும் உள்ள முப்பதாயிரம் மாணவர்களை அவரது பயணத்திலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டியது. அவர் “நேஷனல் செய்லிங் ஹால் ஆஃப் ஃபேம்” இல் சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆனார். “குழந்தைகள் கவனித்துக் கொண்டிருந்தனர்,” என அவர் கூறினார். இதே போன்ற நோக்கத்துடன், தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆழமான ஆலோசனையின்படியே நம் வாழ்க்கையை அமைப்போம்.
உங்கள் வாழ்க்கையில், உங்கள் வேலை அல்லது ஊழியம் எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் சாதிப்பதன் மூலம் என்ன மரபை விட்டுச் செல்ல முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?
உண்மையுள்ள தேவனே, உம்மை மகிமைப்படுத்தும் நோக்கத்துடன் பணிபுரிய என்னை ஊக்குவியும்.