டேவிட் வில்லிஸ் என்பவர் வாட்டர்ஸ்டோன்ஸ் என்பவரின் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்தபொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் ட்விட்டரைப் பார்த்து ட்வீட் செய்தார்: “ஹாய் @வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக்கொள்ளும் பிரச்சினையில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும்போது,, தம் மக்கள் தேவபக்தியை பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. “என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்” (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனைக்கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், “அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி” (வ.9) என்றார்.
“நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் செய்யும் கூக்குரல்களைக் கேட்டு, “நான் இங்கே இருக்கிறேன்” என்று தேவன் கூறுவதால்.
உங்களின் எந்த நடத்தை அல்லது மனப்பான்மை தேவன் அருளும் ஜெபத்தின் பலனை தடுக்கிறது? நீங்கள் எதிலிருந்து மனந்திரும்ப வேண்டும்?
அன்புள்ள தேவனே, என் ஜெபங்களைக் கேட்டதற்கு நன்றி. மற்றவர்களுக்காக நான் வாழ எனக்கு உதவும்.