“நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா?” கல்லூரியின் ஒரு நீச்சல் வீராங்கனை அவளின் வேகம் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலைப்பட்டாள். ஆனால் கணிதப் பேராசிரியர் கென் ஓனோ அவளது நீச்சல் நுட்பங்களை ஆராய்ந்தபோது, அவளுடைய நேரத்தை ஆறு வினாடிகளுக்குள் எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தார். அதுவே போட்டியில் அவளுடைய வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும். நீச்சல் வீராங்கனையின் முதுகில் சென்சார்களை இணைத்து, அவரது நேரத்தை மேம்படுத்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, ஓனோ, சிறுசிறு காரியங்களை சரிசெய்ய முயற்சித்தார். நீரினுள் அவற்றை சரியாய் கடைபிடித்தால் வெற்றிக்கு ஏதுவான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தீர்மானித்தார்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறிய காரியங்களை சரிசெய்யும்போது, அது பெரிய மாற்றத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும். சிறையிருப்பிற்கு பின்னர், செரூபாபேலோடு சேர்ந்து ஆலயக் கட்டுமான்ப பணியில் ஈடுபட்ட மீதியான இஸ்ரவேல் ஜனத்திற்கு சகரியா தீர்க்கதரிசியும் அதேபோன்ற ஒரு ஆலோசனையையே கொடுக்கிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சேனைகளின் கர்த்தர் செரூபாபேலுக்குச் சொல்லுகிறார் (சகரியா 4:6).
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (வச. 10) என்று சகரியா கேட்கிறார். தாங்கள் கட்டப்போகிற ஆலயம் சாலெமோனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு நிகராகாது என்று இஸ்ரவேலர்கள் சோர்ந்துபோயிருக்கின்றனர். ஆனால் தன்னிலிருக்கும் சிறு சிறு காரியங்களை மாற்றிக்கொண்டு ஓனோவின் நீச்சல் வீராங்கனை எவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றாளோ, அதுபோல தேவனோடு கூடிய சின்னஞ்சிறு முயற்சிகள் கூட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடும் என்பதை செரூபாபேலின் கூட்டம் விசுவாசித்தது. தேவனில் சிறியதும் சிறந்ததாய் மாறக்கூடும்.
பெரிய மற்றும் ஜொலித்திடும் காரியங்கள் எப்போது ஆவிக்குரிய சோர்வுக்கு நேராய் உங்களை வழிநடத்திற்று? என்ன சிறிய மாற்றங்கள் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை மாற்றத்திற்கு வழிநடத்தியது?
அன்பான தேவனே, உமக்காக பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சிறிய நல்ல காரியங்களை எனக்கு சுட்டிக்காண்பியும்.